Search
  • Follow NativePlanet
Share
» »புனேவில் ஒரு நாள் சுற்றுலா – 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட் இதோ!

புனேவில் ஒரு நாள் சுற்றுலா – 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட் இதோ!

மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படும் புனே, வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் மிகவும் முன்னணியில் இருக்கும் ஒரு நகரமாகும். இயற்கை அழகு நிறைந்த, ஆராய்வதற்கு பல கொண்ட புனே ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். கோட்டைகள், அரண்மனைகள் முதல் அருங்காட்சியகங்கள் மற்றும் தோட்டங்கள் வரை அனைத்தையும் புனே கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் 30க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றில் பலவற்றை நீங்கள் புனேவில் இருந்து வெகு எளிதாக அணுகலாம். இயற்கை அழகு நிரம்பி வழியும் பல அற்புதமான நீர்வீழ்ச்சிகள் புனேவிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. புனேவில் சாலைகள் மிகவும் அழகாகவும், நன்கு பராமரிக்கப்பட்டதாகவும் உள்ளன, எனவே உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரோடு செய்யும் இந்த நீர்வீழ்ச்சிகளுக்கான சாலைப் பயணமானது மிகவும் உற்சாகமாக இருக்கும். புனேவில் இருந்து வெறும் 2 மணி நேர பயண தூரத்தில் நீங்கள் அணுகக்கூடிய ஐந்து நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இங்கே உள்ளது.

Bajaj Falls

பஜே நீர்வீழ்ச்சி

புனேவிலிருந்து 6௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள பஜே நீர்வீழ்ச்சி பல நூற்றாண்டுகள் பழமையான பஜே குகைகளின் ஒரு பகுதியாகும். இந்திய தொல்லியல் துறையால் பாதுக்காக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி, ராப்பல்லிங் போன்ற சாகச நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்த நீர்வீழ்ச்சி ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த 22 பாறை வெட்டப்பட்ட குகைகள் அமைந்துள்ளன. அவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம். மழைக்காலத்தின் போது அல்லது அதற்குப் பிறகு நீங்கள் இந்த இடத்திற்குச் செல்ல நேர்ந்தால், நீர்வீழ்ச்சி கீழே ஒரு சிறிய குளம் உருவாவதை நீங்கள் காணலாம். புனே வாசிகளுக்கு பஜே நீர்வீழ்ச்சி வார இறுதி விடுமுறை ஸ்பாட்டுகளில் மிகவும் முதன்மையானதாக உள்ளது.

Tamhini Ghat Falls

தம்ஹினி காட் நீர்வீழ்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மாயாஜாலத்தில், மயக்கும் வானிலை கொண்ட ஆழமான பள்ளத்தாக்கில் இந்த தம்ஹினி காட் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதை முழுவதும் மிக அற்புதமாக இருப்பதால் புனேவிலிருந்து நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிக அழகான சாலைப் பயணங்களில் ஒன்றாக இது அமையும். உங்களுக்கு ட்ரெக்கிங் செய்வது பிடிக்குமென்றால், அதற்கும் இங்கு அனுமதி உண்டு. பல இயற்கை எழில் சூழ்ந்த தாவரங்கள், பாறைகள், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றை ரசித்தவாரே நீங்கள் ட்ரெக்கிங் செய்யலாம். நீர்வீழ்ச்சியை அடைந்தவுடன் அதன் அழகில் நீங்கள் ஆடிப்போவது உறுதி. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள சிகரங்களையும் பசுமையையும் கண்டுகளித்துக் கொண்டே அமைதியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கலாம். மேலும் நீர்வீழ்சிக்கு கீழே அமைந்துள்ள குளத்தில் குதித்து நாம் நீந்தியும் மகிழலாம்.இந்த நீர்வீழ்ச்சி புனேவிலிருந்து 7௦ கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

Mathe Ghat Falls

மாதே காட் நீர்வீழ்ச்சி

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் புகழ்பெற்ற டோர்னா கோட்டைக்கு அருகாமையில் இந்த மாதே காட் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பசுமையான தாவரங்கள், வலிமைமிக்க மலைகள் மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி அதன் வசீகரத்தால் நம் மனதை கொள்ளையடிக்கும். சுமார் 850 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியில் ராப்பல்லிங் செய்வது மிகவும் விசேஷமான ஒரு செயல்பாடாகும். பல த்ரில் மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்நீர்வீழ்ச்சி சாகச ஆர்வலர்கள் இடையே மிகவும் பிரபலமாகும்.

Gune Falls

குனே நீர்வீழ்ச்சி

சஹாயத்ரியின் பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குனே நீர்வீழ்ச்சி இந்தியாவின் 14 வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும் மற்றும் புனேவிற்கு அருகிலுள்ள மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். லோனாவாலாவிற்கும் கண்டாலாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி புனேவிலிருந்து 7௦ கிமீ தூரத்தில் உள்ளது. பசுமையால் சூழப்பட்டுள்ள இந்நீர்வீழ்ச்சியில் ராப்பல்லிங் மற்றும் ஜிப் லைனிங் போன்ற சாகச செயல்களிலும் ஈடுபடலாம். குனே நீர்வீழ்ச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பார்த்த பின்னர், புனேவிற்கு அருகில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இது ஏன் கருதப்படுகிறது என்பதை நீங்களே உணருவீர்கள். மழைக்காலத்தில் இங்கு உருவாகும் குளத்தில் நாம் கவனமாக நீந்தி மகிழலாம்.

Zenith Falls

ஜெனித் நீர்வீழ்ச்சி

கர்ஜத்திற்கு அருகில் கோபோலியில் அமைந்துள்ள ஜெனித் நீர்வீழ்ச்சி புனேவுக்கு அருகிலுள்ள மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். நீர்வீழ்ச்சியை முகடுகள், மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு குறுகிய நடைப்பயணத்தின் மூலம் அடையலாம். இயற்கையின் வளமைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்ட மாத்திரத்தில் நீங்கள் அதன் மீது காதல் கொள்வீர்கள் என்பது உறுதி. இது மும்பைக்கு மிக அருகில் உள்ள நீர்வீழ்ச்சி என்பதால் எப்போதும் இங்கு சற்று மக்கள் கூட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கும், மேலும் இது புனேவிலிருந்து 80 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

Devgund Falls

தேவ்குண்ட் நீர்வீழ்ச்சி

குண்டலிகா நதியின் பிறப்பிடமாகக் கூறப்படும் தேவ்குண்ட் நீர்வீழ்ச்சி மூன்று அழகிய நீர்வீழ்ச்சிகளின் சங்கமமாகும். பச்சை வயல்களாலும் உயரமான பாறைகளாலும் சூழப்பட்ட இந்த அழகான நீர்வீழ்ச்சிய புனேவிலிருந்து 99 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய, பீரா கிராமத்து ஆற்றங்கரையின் அடர்ந்த காடுகளின் வழியாக சுமார் மூன்று மணிநேரம் மலையேற வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி நீராடவும் ஓய்வெடுக்கவும் சிறந்த இடமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கூடாரங்களில் முகாமிட்டு இரவைக் கழிக்கவும் வழி செய்கிறது.

Read more about: pune maharashtra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X