» »சொர்க்கத்தை பார்க்கனும்னா இந்த காஷ்மீர் ஏரிகளுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!!

சொர்க்கத்தை பார்க்கனும்னா இந்த காஷ்மீர் ஏரிகளுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!!

Written By: BalaKarthik

இந்தியாவின் பெரும் அழகிய பயணமாக காஷ்மீர் ஏரிப்பயணமானது அமைந்திட, மற்ற பயணங்களை காட்டிலும் இந்த பயணத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என நாம் நினைக்க, ஒன்றல்ல...இரண்டல்ல...ஐந்து ஆல்பைன் அமைப்புகள் காணப்படுகிறது. எல்லா பயணமும் இத்தகைய அற்புத வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை என்றாலும் இயற்கையின் அழகால் நெருக்கமான சந்திப்புகளுடன் காணப்படுகிறது.

 ஏரி

ஏரி

ஒவ்வொரு ஏரியும் மற்ற ஏரியைக் காட்டிலும் ஈர்த்திட, இந்த அனைத்து ஏரிகளும் ஒரு கண்காட்சியாக மாறி ஒன்றன்பின் ஒன்றாக உண்மை அழகை கொண்டு நம் மனதை கவர்கிறது. இந்த ஏரிகள் சுவாரஸ்யத்தை நமக்கு தந்திட, ஒன்றன் பின் ஒன்றாக நம் பார்வைக்கு புலப்பட்டு ஒவ்வொரு ஏரியும் ஒவ்வொரு விதமான அழகை நமக்கு தருகிறது. இந்த வழியில் நாம் காணும் பனி திட்டுகள் நம்மை பரவசத்தில் தள்ள, உயர்ந்த மலைகளிலிருந்து ஏரிக்கு இறங்கியும் காணப்படுகிறது. நீங்கள் ஐஸ்கட்டி வழியாக செல்ல, ஏரியில் மிதக்கும் நீல நீரையும் ரசிக்க தொடங்குகின்றீர்கள்.


PC: Boddu Vighnesh

 பயணம்

பயணம்

இந்த பயணம், சோனாமார்க்கில் தொடங்கிட, இங்கே எண்ணற்ற ஏற்ற மற்றும் இறக்க சரிவுகள் காணப்படுகிறது. மாப்பிள் மற்றும் பைன் மரங்களை ஒருவர் கடந்து செல்ல புல்வெளிகள் முழுவதும் சூழ்ந்திருப்பதையும் பார்க்கின்றனர். இந்த பயணம், தனித்தன்மை கொண்ட ஒரு அனுபவத்தை காஷ்மீர் மூலமாக உங்களுக்கு தரக்கூடும்.

இந்த புல்வெளிகளில் மெல்லிய பிர்ச் மரங்கள் காணப்பட மத்தியில் குடிசைகளும் அமைந்திருக்க, அவை மேய்ப்பவர்களின் வசிப்பிடம் என்பதும் தெரியவருகிறது. இந்த இடம் பச்சை கம்பளத்தை விரித்த ஒத்த அழகினை தந்திட, 40 அடி பரவலான பச்சை புல்வெளி சுருட்டப்பட்ட நிலையில் காணப்பட, அதோடு இணைந்தவாறு சிறிய ஆற்று அருவி குறுக்கே காணப்படுவதோடு, மாபெரும் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. மேலும், சூரிய கதிர்கள் மீது வைத்த நம் கண்களை எடுக்க மறந்திட, அடர்ந்த காடுகளின் இடையே இது தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

PC: Vamsi Krishna

விஷனார் ஏரி

விஷனார் ஏரி

இந்த பச்சை புல்வெளிப்பயணம் மூடப்பட, நீங்கள் நதி பள்ளத்தாக்கை அடைவதோடு, அது மேலே வீங்கி காணப்பட, மற்றுமோர் பச்சை புல்வெளியானது இரண்டு மலை தொடர்ச்சிக்கு நடுவில் காணப்படுகிறது.


இதனை பார்க்கும் உங்கள் மனதில் உண்டாகும் முதல் எண்ணமாக அருகில் காணப்படும் விஷனார் ஏரி தென்படுகிறது. இந்த ஏரியானது, நான்கு மலைகளுக்கு கீழே காணப்பட; ஏரியின் நிறமானது அந்நாளின் நேரத்தை பொறுத்து அமைவதோடு, மேகங்களின் அழகையும் நாம் ரசித்த வண்ணம் இருக்க உதவுகிறது.


PC: Mehrajmir13

கட்சர் அழகானது:

கட்சர் அழகானது:


இந்த கட்சர் ஏரியானது பனி மூடிய பாறை அடிவாரத்தில் காணப்பட, ஒரு பக்கத்தில் நீல மலர்களும், மற்றொரு பக்கத்தில் பனியுமென ஏரியில் நீரும் விழுந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கட்சருக்கு அருகாமையில் இன்னொரு ஏரியானது காணப்பட, அதன் பெயர் யாம்சர் என்றும் தெரியவருவதோடு, இறப்பின் கடவுளான யாமாவால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

யாம்சர் மற்றும் கட்சர் ஒன்றோடொன்று ஓடையுடன் இணைந்து காணப்பட, உயரிய ஏரியிலிருந்து குறைவான ஏரியை நோக்கி பாய்ந்து, மனதை மெருகூட்ட செய்கிறது. இங்கே பனி மூடிய மலையையும் நம்மால் பார்க்க முடிந்திட, மலை தரிசுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Mehrajmir13

மகிமை

மகிமை

அதிகாலை நேரப்பொழுதில், சூரிய உதயத்திற்கு முன்னர் அனைத்துவிதமான மகிமையுடன் காணப்படும் இந்த ஏரியின் நீர் நிலையானது நிறமற்று காணப்படுகிறது. நாள் செல்ல செல்ல, இந்த நீரின் நிறமானது நீல நிறத்தில் மாற, மாலை நேரத்தில் ஏரியின் தோற்றமானது பச்சையுடன் கூடிய நீல வண்ண சாயலுடனும் காணப்படுகிறது. எதுவாக இருப்பினும், இந்த ஏரியை நாம் பார்க்க அற்புதமாக காணப்படுகிறது.

கிஷனார் சிகரத்தின் அடிவாரத்தில் கிஷனார் ஏரியானது காணப்படுகிறது. இந்த ஏரியானது அளவில் பெரிதாக காணப்பட, வண்ணமோ நீல நிறமாக இருக்கிறது. இங்கே பச்சை வண்ண புல்வெளியும் பரந்து விரிந்து காணப்பட; இந்த பச்சை புல்வெளியும், ஏரியும் இணைந்து மலைமுகட்டு கோட்டில் கூர்மையாக மேலே உயர்ந்து செல்கிறது.


PC: Mehrajmir13

நந்த்கோல் மற்றும் கங்காபல் ஏரிகள்:

நந்த்கோல் மற்றும் கங்காபல் ஏரிகள்:

ஒரு மிதமான ஏற்றம் தெரிய, படிப்படியாக இறக்கத்துடனும் காணப்பட, மீண்டும் ஓர் நீண்ட செங்குத்தான ஏற்றம் மற்றும் இறக்கம் காணப்படுவதோடு, கங்காபல் மற்றும் நந்த்கோல் ஏரிகளும் இரட்டையர்களாக காணப்படுகிறது. இந்த இரண்டு ஏரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக தென்படுகிறது. நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பார்வையாளராக இருந்தால், இரண்டு நீல ஏரிகளை பார்த்திட; அவற்றுள் பெரிதாக கங்காபல் காணப்படக்கூடும்.

ஹர்முஹ் சிகரத்தின் அடிவாரமாக நந்த்கோல் ஏரி பிறப்பிடமாக அமைய, இந்த இரண்டு ஏரிகளும் பெயர் பெற்ற இலக்காக மீன் பிடிக்க அமைகிறது. இங்கே ஹர்முஹ் பனிப்பாறையை நாம் பார்த்திட, சிகரத்தின் பாறை பக்கங்களில் அது காணப்படுகிறது.


PC: Owais Mushtaq Zargar

Read more about: travel lake

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்