Search
  • Follow NativePlanet
Share
» »ராகுல் டிராவிட் - ஒரு சகாப்தம் !!

ராகுல் டிராவிட் - ஒரு சகாப்தம் !!

By Naveen

1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுக போட்டியில் 95ரன்கள் அடித்தபோதும் அதிகம் கவனிக்கப்பட்டது அதே போட்டியில் அறிமுகமாகி சதம் விளாசிய கங்கூலி, 1999ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 374ரான்கள் விளாசிய போட்டியில் அடித்தது 153ரன்கள் ஆனால் அதிகம் கவனம் ஈர்த்தது அதே போட்டியில் சச்சின் அடித்த 183ரன்கள் தான், இப்படி தன் மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவும் தனக்குரிய அங்கீகாரத்தை பெறாமலேயே ஓய்வு பெற்றவர் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று புகழப்படும் ராகுல் டிராவிட்டின் 43ஆவது பிறந்தநாள் இன்று.

நேர்த்தியான ஷாட்டுகள், எதிரணி வீரர்களையும் மதித்து நடக்கும் பண்பு, அணிக்காக எதையும் செய்யும் தியாக உணர்வு போன்றவை டிராவிட்டின் புகழை கிரிக்கெட் இந்த உலகத்தில் இருக்கும் நிலைகொள்ளசெய்யும்.

இன்று கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் டிராவிட் என்ற சகாப்தத்தின் வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பிறந்தது

பிறந்தது

1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்துள்ளார் ராகுல் டிராவிட். பின் சிறு வயதிலேயே தந்தையின் பணிமாறுதல் காரணமாக பெங்களூருவுக்கு டிராவிட்டின் குடும்பம் குடிபெயர்ந்தது.

இவரின் தந்தை 'ஜாம்' எனப்படும் பழப்பசை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியில் இருந்ததால் 'ஜாமி' என்ற புனைபெயர் டிராவிட்டுக்கு இருந்துள்ளது.

இந்தூர்:

இந்தூர்:

டிராவிட் பிறந்த இந்தூர் அவ்வளவாக சுற்றுலாத்தலங்கள் இல்லாத ஒரு நகரமாகும். இங்கே குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்கள் என்றால் பாதாள்பானி என்ற அருவி, படா கணபதி கோயில், கஞ்ச்மந்திர் என்ற அரண்மனை போன்றவை தான்.

இந்தூர் நகரை பற்றிய பயண விவரங்களை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

Lucky vivs

இந்தூர்:

இந்தூர்:

இந்தூர் படா கணபதி கோயிலில் இருக்கும் மிகப்பெரிய விநாயகர் சிலை.

Rakeshnandi1990

வளர்ந்தது:

வளர்ந்தது:

டிராவிட்டின் குடும்பம் சிறு வயதிலேயே பெங்களூருவுக்கு வந்துவிட்டதன் காரணமாக தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூருவில் உள்ள புனித ஜோசெப் கல்வி நிறுவனத்தில் தான் முடித்துள்ளார். 1992இல் MBA படிப்பை மேற்கொள்ளும் போது தான் கர்நாடக மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் டிராவிட்.

இன்றும் பெங்களூருவின் செல்லப் பிள்ளையாக டிராவிட் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

சின்னசுவாமி ஸ்டேடியம்:

சின்னசுவாமி ஸ்டேடியம்:

இந்தியாவில் உள்ள சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருப்பது பெங்களூருவில் இருக்கும் சின்னசுவாமி மைதானம் ஆகும்.

இங்கு நடந்த 12வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியிலிருந்துதான் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமாகியிருக்கிறது.

Ashwin Kumar

பெங்களூரு:

பெங்களூரு:

இந்தியாவின் நவீன இதையத்துடிப்பை அறிந்துகொள்ள வரவேண்டிய இடம் பெங்களூரு ஆகும். யுபி சிட்டி மால், போரம் மால், ஓரியன் மால்,கருடா மால் போன்ற ஷாப்பிங் மால்களுக்குள் சென்றால் ஏதோ வெளிநாட்டுக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்ப்படும்.

அதோடு 'பூங்கா நகரம்' என்ற புனைப்பெயருக்கு ஏற்ப இங்கே நிறைய பெயருக்கு ஏற்ப இங்கே பூங்காக்களும் இருக்கின்றன.

பெங்களூரு:

பெங்களூரு:

பெங்களூரு நகர மையத்தில் இருக்கும் இரண்டு முக்கிய பூங்காக்களான 'லால் பாக்' மற்றும் 'கப்பன் பார்க்' ஆகிய இரண்டும் கட்டாயம் செல்ல வேண்டிய இடங்கள் ஆகும். நூற்றாண்டுகள் கடந்தும் இருக்கும் இந்த பூங்காக்கள் பராமரிக்கப்படும் விதம் இங்கு வரும் எவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

கொல்கத்தா:

கொல்கத்தா:

ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த போட்டியென்றால் அது 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வி.வி.எஸ்.லக்ஷ்மணனனுடன் இணைந்து 375ரன்கள் குவித்தது தான்.

கொல்கத்தா:

கொல்கத்தா:

சுபாஸ் சந்திர போஸ், விவேகானந்தர் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளை தந்த மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரம் தான் கொல்கத்தா ஆகும்.

இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றாக திகழ்ந்தாலும் தன்னுடைய பழமையை விடாது பிடித்துகொண்டிருக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

கொல்கத்தா:

கொல்கத்தா:

புது டில்லி தலைநகரம் ஆவதற்கு மும்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் தலைநகரமாக இருந்தது கொல்கத்தா தான். அப்போது இங்கே கட்டப்பட்டது தான் 'விக்டோரியா நினைவு மாளிகை' ஆகும்.

ஹூக்லி நதிக்கரையில் முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் இழைத்து இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது.

கொல்கத்தா:

கொல்கத்தா:

விக்டோரியா மாளிகைக்கு அடுத்தபடியாக கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பது ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த தக்ஷிநேஸ்வரர் காளி கோயில் ஆகும்.

தக்ஷிநேஸ்வரர் காளி கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ராகுல் டிராவிட் !!

ராகுல் டிராவிட் !!

90களில் பிறந்து கிரிக்கெட் விளையாட்டின் மேல் ஈர்ப்பு கொண்ட அனைவருக்கும் ராகுல் டிராவிட் குழந்தை பருவ நாயகர்களில் ஒருவர் என்றே சொல்லலாம்.

இவரை பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Read more about: bangalore indore kolkata rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X