Search
  • Follow NativePlanet
Share
» »இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்..!!

இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்..!!

சீனப் பெருஞ்சுவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் ஓர் பெருஞ்சுவர் கொண்ட கோட்டை இருப்பது நிங்கள் அறிவீர்களா ?. வாருங்கள், அத்தகைய இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர் குறித்து அறிந்துகொள்வோம்.

உலகில் எந்த மூலையில் இருப்பவரும் சீனப் பெருஞ்சுவரை அறிந்திராமல் இருக்க முடியாது. சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகும் என நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இதற்கு அடுத்தபடியாக, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் ஓர் பெருஞ்சுவர் கொண்ட கோட்டை இருப்பது நிங்கள் அறிவீர்களா ?. வாருங்கள், அத்தகைய இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர் குறித்து அறிந்துகொள்வோம்.

கும்பல்கர்க் கோட்டை

கும்பல்கர்க் கோட்டை


அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம், நம் நாட்டில் உள்ள அதிசயத்தை சற்றும் கவணிப்பதில்லை. அவ்வாறு நாம் தவறவிட்ட பெருஞ்சுவரே கும்பல்கர்க் கோட்டையில் அமைந்துள்ளது.

Twinkle joshi04

இந்தியப் பெருஞ்சுவர்

இந்தியப் பெருஞ்சுவர்


சீன பெருஞ்சுவருக்கு அடுத்து உலகின் 2-வது பெருஞ்சுவராக விளங்குவது கும்பல்கர்க் கோட்டைச் சுவர். இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் 15-ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

Usha Kiran

எவ்வளவு பெரிசு தெரியுமா ?

எவ்வளவு பெரிசு தெரியுமா ?


கும்பல்கர் கோட்டை 13 சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் 36 கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது. இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Shubham 021194

நுழைவுவாயில்கள்

நுழைவுவாயில்கள்


கும்பல்கர் கோட்டையில் உள்ள ஏழு மிகப்பெரிய நுழைவாயில்களில் ராம் போல் என்ற வாயில் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. அதோடு இங்கு வரும் பயணிகள் ஹனுமான் போல் என்ற வாயிலின் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபடலாம். இவைத்தவிர ஹுல்லா போல், பாக்ரா போல், நிம்பூ போல், பைரவா போல் மற்றும் டாப்-கானா போல் ஆகிய நுழைவாயில்களையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. மேலும் இந்தக் கோட்டையின் உச்சியிலிருந்து அருகிலுள்ள பகுதிகளின் கவின்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.

Dev Vora

கோட்டையின் உள் கோட்டை

கோட்டையின் உள் கோட்டை


கும்பல்கர் கோட்டைக்கு உட்புறம் கர்தார்கர் என்ற இன்னொரு கோட்டையும் அமைந்திருப்பது வியப்படையச் செய்கிறது.

Sutharmahaveer

மேகங்களின் அரண்மனை

மேகங்களின் அரண்மனை


ராஜஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே கும்பல்கர் நகரமும் சொக்க வைக்கும் அரண்மனைகளுக்காக புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக மேகங்களின் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் பாதல் மஹால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

Antoine Taveneaux

கும்பல்கரின் கவர்ச்சி

கும்பல்கரின் கவர்ச்சி


கும்பல்கர் நகரம் அதன் அழகிய அரண்மனைகளை தவிர தொன்மையான கோவில்களுக்காகவும் பிரசித்திபெற்றது. அதிலும் குறிப்பாக வேதி கோவில், நீல்கந்த் மகாதேவ் ஆலயம், முச்சல் மகாவீர் கோவில், பரசுராம் கோவில், மம்மாதேவ் கோவில், ரணக்பூர் ஜெயின் கோவில் போன்றவை முக்கியமான புண்ணிய தலங்களாக கருதப்படுகின்றன.

Antoine Taveneaux

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்


கும்பல்கரில் கோட்டையைத் தவிர மிகவும் பிரதிபெற்றது வனவிலங்கு சரணாலயம். இங்கே நான்கு கொம்பு இரலை மான்கள், ஓநாய்கள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், குள்ள நரிகள், கழுதைப் புலிகள், சாம்பார் மான்கள், காட்டுப் பூனைகள், முயல்கள் போன்ற மிருகங்களை கண்டு ரசிக்கலாம். இதைத் தவிர ராஜஸ்தானின் வேறெந்த வனவிலங்கு சரணாலயத்திலும் நீங்கள் ஓநாய்களை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹல்டிகாட் மற்றும் கனேராவ் ஆகிய இடங்களும் கும்பல்கர் நகரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதிகளாகும்.

Ashvij Narayanan

கும்பல்கர் நகரை எப்படி அடைவது?

கும்பல்கர் நகரை எப்படி அடைவது?


கும்பல்கரின் அருகில் உள்ள விமான நிலையம் உதைப்பூரின் மஹாராண பிரதாப் மற்றும் தபோக் விமானம் நிலையம் ஆகும். மேலும், உதைப்பூரில் உள்நாட்டு விமான நிலையமும் செயல்படுகிறது. இருப்பினும் இது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் தில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Northside

ரயில் நிலையம்

ரயில் நிலையம்


கும்பல்கர் நகருக்கு வெகு அருகிலேயே பால்னா நகர ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் மும்பை, தில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கும்பல்கர் நகரை அடைந்து விட முடியும்.

Sujay25

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X