Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!

பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!

பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!

By Bala Karthik

பெங்களூரு நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவானசமுத்ரா, மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் பெயர் பெற்ற வீழ்ச்சியாகும். சிவன் கடல் என மொழியாக்கம் தரப்படும் சிவானசமுத்ரா, பிரிவுடன் காணப்படும் நீர்வீழ்ச்சியாக, இணையான பல ஓடைகளை கொண்டு அருகில் காணப்படுகிறது.

காவேரி நதியால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. தீவு நகரமான சிவானசமுத்ரா, இரு பிரிவுகளாக பிரிந்திருக்க அவை ககனசுக்கி மற்றும் பராசுக்கி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கே பழங்காலத்து ஆலயங்களும் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் காணப்படுகிறது.

ஆசியாவின் முதல் நீர் மின் நிலையமாக சிவானசமுத்ராவானது 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 வழி வரைப்படம்:

வழி வரைப்படம்:

தொடக்க புள்ளி: பெங்களூரு

இலக்கு: சிவானசமுத்ரா

இவ்விடத்தை காண சிறந்த நேரம்: ஜூன் முதல் செப்டம்பர் வரையில்

 எப்படி நாம் அடைவது?

எப்படி நாம் அடைவது?


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் அருகில் காணப்படும் விமான நிலையமாக அமைய, இங்கிருந்து தோராயமாக 167 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மைசூரு சந்திப்பு காணப்பட, அது தான் அருகாமையில் அமைந்திருக்கும் இரயில் நிலையமாகவும் அமையக்கூடும். இந்த நிலையத்திலிருந்து வழக்கமான இரயில்கள் பல முக்கிய நகரங்களுக்கும் மாநிலம் முழுவதும் காணப்பட, நாடு முழுவதுமென காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

சிவானசமுத்ரத்தை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக சாலை வழியானது அமைகிறது. அருகாமையில் காணப்படும் முக்கிய நகரமாக கொல்லிகல் விளங்க, சாலையுடன் சிறந்த முறையிலும் இணைக்கப்பட்டிருப்பதோடு, வழக்கமான பேருந்துகளையும் பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கு இவ்விடம் கொண்டிருக்கிறது.

PC: Hareey3

 பயண தூரம்:

பயண தூரம்:

பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 131 கிலோமீட்டர் காணப்படுகிறது. இங்கே இலக்கை எட்ட நமக்கு மொத்தம் மூன்று வழிகள் காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - தடாகுனி - கனகப்புரா - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி தேசிய நெடுஞ்சாலை 209.

வழி 2: பெங்களூரு - பிடாடி - ராமநகரா - சன்னாப்பட்னா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி தேசிய நெடுஞ்சாலை 275.

வழி 3: பெங்களூரு - நெலமங்கலா - சோளூர் - குனிகல் - ஹுலியுர்துர்கா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி குனிகல் - மத்தூரு சாலை.

PC: Ashwin06k

தேர்ந்தெடுக்க வேண்டிய வழிகள்:

தேர்ந்தெடுக்க வேண்டிய வழிகள்:

முதலாம் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தோராயமாக சிவானசமுத்ரத்தை நாம் அடைய 3 மணி நேரம் ஆக, தேசிய நெடுஞ்சாலை 209 வழியாகவும் அமையக்கூடும். இவ்வழியானது நம்மை சிறந்த பெயர்பெற்ற நகரங்களான கனகப்புரா, மாலவள்ளி என பல வழியாக நம்மை அழைத்து செல்லும்.

இந்த சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட, சிறந்த வேகத்தில் இவ்விடத்தை நாம் எட்டுவதோடு, இலக்கை அடைய 135 கிலோமீட்டரும் நமக்கு தேவைப்படுகிறது.

இரண்டாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க, தோராயமாக பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்தை அடைய 3.5 மணி நேரங்கள் ஆக, வழியாக தேசிய நெடுஞ்சாலை 209ஆகவும் அமையக்கூடும். மூன்றாவது வழியை தேர்ந்தெடுக்க, இந்த 175 கிலோமீட்டரை நாம் கடக்க 4 மணி நேரங்கள் தேவைப்படுவதோடு, வழியாக குனிகல், மத்தூரு சாலை முதல் சிவானசமுத்ரம் வரை அமையக்கூடும்.

PC: Ashwin06k

தூரஹல்லி காடு:

தூரஹல்லி காடு:


தூரஹல்லி காடு, நகரத்தில் காணப்படும் எஞ்சியிருக்கும் ஒரே காடாக அமைய, கனகப்புரா சாலை வெளிப்புறம் இது காணப்படுகிறது.

இக்காடினை கரிஷ்மா மலை எனவும் நாம் பெருமையுடன் அழைக்கிறோம். தெற்கு பகுதியில் நாம் நுழைய, அமைதியையும், அழகிய சூழல் நிறைந்த பசுமையையும் சேர்த்தே ரசிக்கிறோம்.

இக்காடு அடர்த்தியற்று காணப்பட, இங்கே உயரமான யூகலிப்டஸ் மரங்களும் காணப்படுகிறது. பறவை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இது அமைய, அவியன் இனமான மயில்கள், மைனாக்கள், என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Raghuraj Hegde

 ISKCON வைகுண்ட மலை:

ISKCON வைகுண்ட மலை:

அழகிய கலாச்சாரம் கொண்ட இடமாக கிருஷ்ண லீலா தீம் பூங்கா காணப்பட, கனகப்புரா சாலையின் உச்சியில் வைகுண்ட மலையும் காணப்படுகிறது.

இவ்விடமானது பாரம்பரிய ஆலயத்தையும் அதன் அழகிய வடிவமைப்பையும் இணைந்தே கொண்டு மாடர்ன் கட்டிடக்கலை பாணியில் காட்சியளிக்க, நிலப்பகுதியில் இரு ஆலயங்களும் காணப்படுகிறது.

இந்த சிறுகுன்றானது 360 டிகிரி காட்சிப்புள்ளியுடன் பெங்களூருவை பிரதிபலிக்க, 2017ஆம் ஆண்டில் இது முடிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகுன்றில் இரு ஆலயங்கள் பார்வையாளருக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்த தீம் பூங்கா ISKCONஇன் துணிகரம் எனவும் தெரியவருகிறது.

PC: Offical Site

வாழும் கலையான ஆசிரமம்:

வாழும் கலையான ஆசிரமம்:

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரால் நிறுவப்பட்ட இந்த வாழும் கலை ஆசிரமம், கனகப்புரா சாலையில் காணப்படுகிறது. இந்த ஆசிரமம் 65 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிறது.

வாழும் கலை அடித்தளமானது 1986ஆம் ஆண்டின் மத்தியில் அமைதியுடனும், செழிப்புடனும் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே காணப்படும் முக்கிய ஈர்ப்பாக செயற்கை ஏரியானது அமைய, விசாலாட்சி மண்டபமும், என மத்தியில் தியான மையத்தை கொண்டு எண்ணற்ற யோகா நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து காணப்படுகிறது.

PC: Socialconnectblr

சிவானசமுத்ரா:

சிவானசமுத்ரா:

சிவானசமுத்ராவில், காவேரி நதியானது இரண்டாக பிரிந்து ஓட, தீவையும் உருவாக்குகிறது. இவ்விரு கிளைகளும் அழகை தர, மற்றுமோர் மாயாஜால நீர்வீழ்ச்சியையும் இணைத்து காணப்படுகிறது.

இந்த சிவானசமுத்ர நீர்வீழ்ச்சியை ‘கர்நாடகாவின் நையகரா' என அழைக்க, இதன் அழகானது நையகராவை ஒத்திருக்கிறது.

PC: Guptarohit994

 மத்ய ரங்கா:

மத்ய ரங்கா:

தீவில் காணப்படும் ஆலயம் ரங்கநாத சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, இதனை மத்ய ரங்கா எனவும் அழைக்கப்படுகிறது. அத்துடன் இன்னும் இரு பெயர் பெற்ற ரங்க நாத ஆலயங்கள் காணப்பட அவை காவேரி நதிக்கரையிலும் காணப்படுகிறது.

அவற்றுள் ஒன்று ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் காணப்பட, அதனை ஆதி ரங்கா எனவும், இரண்டாவதாக தமிழ் நாட்டின் ஸ்ரீரங்கத்தில் காணப்பட அந்த்யா ரங்கா எனவும் நாம் அழைக்கிறோம்.

PC: Madhavkopalle

சோமேஸ்வர ஆலயம்:

சோமேஸ்வர ஆலயம்:

மற்றுமோர் ஆலயமாக ஸ்ரீ சோமேஸ்வர ஆலயம் காணப்பட, இரங்க நாத ஆலயத்தின் பழமை வாய்ந்ததாகவும் அது கருதப்படுகிறது. ஆதி சங்கராச்சார்யா இவ்வாலயத்தை காண வந்ததாக நம்பப்பட, ஸ்ரீ சக்ராவால் நிறுவப்பட்டும் காணப்படுகிறது.

PC: Ramkishoremr

 தளக்காடு:

தளக்காடு:

இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் தளக்காடு காணப்படுகிறது. இந்த வரலாற்று நகரம் ஆலயங்களுக்கு பெயர்பெற்று விளங்க, பாலைவனம் போன்ற காட்சியையும் தரக்கூடும். இந்த மிகவும் பெயர்பெற்ற ஆலயம் வைத்தியநாதேஸ்வரா எனப்பட, சிவபெருமானுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

PC:Dineshkannambadi

Read more about: travel waterfalls nature
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X