Search
  • Follow NativePlanet
Share
» »மோடி இந்த குகைக்குள்ள தியானம் பண்ண ஒரு பக்கா காரணம் இருக்காம் !

மோடி இந்த குகைக்குள்ள தியானம் பண்ண ஒரு பக்கா காரணம் இருக்காம் !

மோடி இந்த குகைக்குள்ள தியானம் பண்ண ஒரு பக்கா காரணம் இருக்காம் !

60 வயசுக்கு மேல யாருக்கும் இந்த குகைக்குள்ள அனுமதி இல்லைனு சொல்றாங்க. 68 வயது கடந்தும் விடாமுயற்சியால,இந்த குகைக்கு போன அவரோட திறமையும் பலர் வியக்கத்தக்க வகையில் இருக்குங்குறத மறுக்கமுடியாது. ஆனா, அதுக்கும் ஒரு காரணம் இருக்காம்.

கேதார்நாத் கோவிலில் வழிபட்ட நாட்டின் பிரதமர் மோடி, இந்த குகையில் சென்று தியானம் செய்தார். வழக்கமாக நாடுகள் பல சுற்றுலா செல்லும் பிரதமர் அவர்கள், நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியும் கூறினார். அது, கேதார்நாத் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து மக்கள் மன அமைதியைத் தேடவேண்டும் என்பதுதான். மோடி அவர்கள் போன வழித்தடத்துல நாமளும் போயி அந்த காரணத்த தெரிஞ்சிக்கலாம் வாங்க.

அம்மாடியோவ்.... எவ்ளோ உயரம்

அம்மாடியோவ்.... எவ்ளோ உயரம்

மந்தாகினி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் 11754 அடி உயரத்தில் இருக்கிறது. மலையின் உச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் மயங்கியுள்ளனர்.. சிலர் உயிரிழந்துள்ளனர். இதையெல்லாம் பொருட்படுத்தாது மோடி அங்கு சென்றுள்ளார் என்று பெருமை கொள்கின்றனர் மோடி அவர்களை பின்பற்றுபவர்கள்.

தோ கிமீ

தோ கிமீ

தோ கிலோ மீட்டர் அதாவது ரெண்டு கிலோ மீட்டர் பயணம் செய்துதான் மோடி அவர்கள் அந்த குகையை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. கூடவே ஒரு சிறிய குழுவும் சென்றுள்ளது.

வழக்கமாக பிரதமரின் பாதுகாப்புக்காக அவர் எங்கு சென்றாலும் குழு ஒன்று உடன் செல்லும். எனினும் இது மிக உயரமான இடம் என்பதால் வழக்கத்துக்கும் குறைவாக, ஒரு பத்திரிக்கையாளர் உட்பட சிலருடனேயே சென்றுள்ளார் மோடி அவர்கள்.

5 வருடத்தில் முதல் விடுப்பு

5 வருடத்தில் முதல் விடுப்பு

மோடியின் பயணத்தின்போது அவர் எப்போதுமே மக்களைப் பற்றி சிந்திப்பார் என்பது அவர் வாயாலேயும், பல பாஜக தலைவர்களும் இதை சொல்லியுள்ளனர். திட்டங்கள் பற்றியும், மக்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கும் மோடி அவர்கள் இந்த குகைக்கு சென்றது இந்த 5 வருடங்களிலேயே முதல் முறையாக வேலை தவிர்த்து செய்த முதல் காரியமாக பார்க்கப்படுகிறது. ஆம் அவர் விடுப்பே எடுத்ததில்லை என்பதே பாஜக ஆதரவாளர்கள் தரப்பு கூறும் பெருமை.

பத்திரிகையாளரா? பாதுகாவலரா?

பத்திரிகையாளரா? பாதுகாவலரா?

இவரது உடன் செல்பவர்கள் மிக அதிக பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார்கள். மோடி எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுப்பதும், மின்னஞ்சல் மூலம் மக்களிடம் உரையாடுவதும் அன்றாட நிகழ்வு. இதை மோடி தனது உரையிலேயே பல முறை கூறியுள்ளார். அவருக்கு புகைப்பட கருவிகள் மீது ஆர்வமும் அதிகம். அதே நேரத்தில் அவர் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களின் நலன் பற்றியும் விவாதிப்பாராம்.
ஆனால், அவரை புகைப்படம் எடுக்கும் நபர் பாதுகாவலரா அல்லது பத்திரிக்கையாளரா என்பது மட்டும் தெரியவில்லை. அதே நேரம் அவரது புகைப்படங்கள் எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன.. சரி நாம் குகைக்கு பயணிப்போம்.

ஹர ஹர மகாதேவ்

ஹர ஹர மகாதேவ்

நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் இந்த குகைக்கு சென்றது மிக முக்கியமான ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பது மோடி அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 15 மணி நேர தியானத்துக்கு பிறகு வெளியில் வந்த மோடி அவர்களின் உதடு உதிர்த்த வார்த்தைகள் இவை.. ஹர ஹர மகாதேவ்...

Read more about: caves pilgrimage temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X