Search
  • Follow NativePlanet
Share
» »தேனி - பசுமையில் போர்த்தப்பட்ட நிலப்பரப்பு!!!

தேனி - பசுமையில் போர்த்தப்பட்ட நிலப்பரப்பு!!!

By

தமிழ்நாட்டின் இளமையான மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் செல்லக்குழந்தையாய் வனப்புடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

இயற்கையின் பொக்கிஷமாய் திகழ்ந்து வரும் தேனியில் இருக்கும் போது மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கியான கிரீன் டீ ஆகியவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ மறந்து விடாதீர்கள்.

மேலும் தேனி சுற்றுலாவில் என்னென்ன இடங்கள் பார்க்க வேண்டும், அந்த இடங்களின் சிறப்பு உள்ளிட்டவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

தேனியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக வைகை அணை, சுருளி அருவி, முல்லைப் பெரியாறு அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, மேகமலை, போடி மெட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்கள் திகழ்ந்து வருகின்றன.

படம் : Sivaraj.mathi

ஆலயம் தொழுவோம்!

ஆலயம் தொழுவோம்!

தேனி மாவட்டம் எண்ணற்ற இந்து ஆலயங்களுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அவற்றில் குச்சனூர் சனீஸ்வரன் கோயில், வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில், வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை, காமாட்சியம்மன் கோயில், சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில், வீரப்ப அய்யனார் கோயில், போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், சித்திர புத்திர நாயனார் கோயில், வேலப்பர் கோயில் ஆகியவை முக்கியமானவை.

படம் : Theni.M.Subramani

மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து 70 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒய்யாரமாக மேகமலை காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லாங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை நீங்கள் காண முடியும். தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன.

படம் : Vinoth Chandar

சுருளி அருவி

சுருளி அருவி

தேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

தமிழ்நாட்டிலேயே சனி பகவானுக்காக பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ள ஒரே கோயிலைக் கொண்டுள்ள இடம் தேனி மாவட்டத்திலுள்ள குச்சனூர் ஆகும். இந்த இடத்தில் சனி பகவான் தன்னுடைய முழு சக்தியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. பழமையான கோவிலான, இதில் குடியிருக்கும் கடவுளை இந்திரர் வணங்கி வந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இங்கிருக்கும் ஐந்து தலைகளையுடைய விநாயக பெருமான், பஞ்சமுக கணபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மேலும் குச்சனூரில் வடதிசையைப் பார்த்தவாறு இருக்கும் வடகுரு கோவிலும் உள்ளது. தேனியிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் குச்சனூர் சனீஸ்வரன் கோயில், சுரபி நதியின் கரையில் அமைந்துள்ளது.

போடி மெட்டு

போடி மெட்டு

தேனியிலிருந்து 43 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் போடி மெட்டு பகுதியை போடிநாயக்கனூர் சென்று அங்கிருந்து அடைய வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் வீற்றிருக்கும் போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். மேலும் பல்வேறு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை உடைய போடி மெட்டு பகுதி வன உயிர் மற்றும் தாவரங்களை அதிகமாக பெற்றுள்ள இடமாகும்.

படம் : Kujaal

கௌமாரியம்மன் கோயில்

கௌமாரியம்மன் கோயில்

பாண்டிய மன்னன் நான்காம் வீரபாண்டியனால் 14-ஆம் நூற்றாண்டில் கௌமாரியம்மன் கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கௌமாரியம்மன் தன்னை நோக்கி வேண்டும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் தீராத நோய்கள் மற்றும் வலிகளை தீர்ப்பவராகவும் நம்பப்படுகிறார். இங்கிருக்கும் கௌமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடியார் கடவுளை வணங்கிய பின்னர் வீரபாண்டியன் தன்னுடைய இழந்த பார்வையை மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது. தேனியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள வீரபாண்டி என்ற கிராமத்தில், முல்லையாற்றின் கரையில், இந்த கௌமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

படம் : Lakshmichandrakanth

வைகை அணை

வைகை அணை

வைகை அணை தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வதோடு மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த அணையில் படகுச் சவாரி செய்யும் வசதியும் இருப்பதால் பிரசித்திபெற்ற பிக்னிக் ஸ்தலமாகவும் வைகை அணை அறியப்படுகிறது.

கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில்

கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில்

சுருளி அருவிக்கு அருகில் கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

படம் : Kujaal

மஞ்சளாறு

மஞ்சளாறு

தேனியிலிருந்து 43 கி.மீ தொலைவில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது.

படம் : Mprabaharan

மேகமலை அருவி

மேகமலை அருவி

தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி உள்ளது.

படம் : Kujaal

தூவானம் அணை

தூவானம் அணை

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் தூவானம் அணை அமைந்துள்ளது. இந்த அணை சுருளி அருவியின் உற்பத்தி ஸ்தானங்களில் ஒன்று.

படம் : Sivaraj.mathi

சண்முகா நதி அணைக்கட்டு

சண்முகா நதி அணைக்கட்டு

மேகமலையின் பின்பகுதியில் தேனி மாவட்டத்தின் ராயப்பன்பட்டியில் பாய்ந்தோடும் சண்முகா நதியின் குறுக்கே சண்முகா நதி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் கிராமங்களான ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், பூசாரிகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை மற்றும் சுக்கங்கால் பட்டி ஆகியவை இந்த அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தால் பலன் பெறுகின்றன. இந்த அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகன் கோயிலான சண்முகா கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.

படம் : Kujaal

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்கங்கல்பட்டி எனும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயம்.

படம் : Kujaal

ஹைவேவிஸ்

ஹைவேவிஸ்

தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் நகரம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலமாகும். புகழ்பெற்ற மேகமலை அருவி ஹைவேவிஸ் மலையடிவாரத்தில்தான் அமைந்துள்ளது.

படம் : Mprabaharan

கம்பம் பள்ளத்தாக்கு

கம்பம் பள்ளத்தாக்கு

தேனியிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் கம்பம் பள்ளத்தாக்கும் சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய இடம்.

படம் : Mprabaharan

மலையும், வயலும்!

மலையும், வயலும்!

நீங்கள் தேனி வரும்போது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் பின்னணியில் பசுமையான வயல்களை கண்டு ரசிக்க மறந்துவிடாதீர்கள்!

படம் : Mprabaharan

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

தேனி மாவட்டத்தில் பொங்கல், சிவராத்திரி மற்றும் மாசிமகம் ஆகிய பண்டிகைகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

படம் : Lakshmichandrakanth

திருவிழா யானை

திருவிழா யானை

தேனியில் திருவிழா நடக்கும் நாட்களில் கோயில் யானை திருவிழாச் சந்தைக்கு வரவழைக்கப்படுகிறது.

படம் : Lakshmichandrakanth

குறிஞ்சி, முல்லை, மருத நிலத்தோற்றம்

குறிஞ்சி, முல்லை, மருத நிலத்தோற்றம்

குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த நிலமும்), முல்லை (காடும், காடு சார்ந்த நிலமும்), மருதம் (வயலும் வயல் சார்ந்த நிலமும்) ஆகிய மூன்று தமிழர் நிலத்திணைகளையும் இந்தப் புகைப்படம் ஒருங்கே காட்டுகிறது.

படம் : Thamizhpparithi Maari

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X