Search
  • Follow NativePlanet
Share
» »த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!

த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!

நமது இந்திய நாட்டில் என்ன இல்லை! சொல்லுங்கள்! எல்லாமே இருக்கிறது! அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த மலைப்பிரதேசங்கள், புராதன கோவில்கள், வரலாற்றுக் கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், தீவுகள், நகரங்கள் என எல்லாமே இருக்கின்றன. ஒரு காலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக இருந்த இடங்கள் இன்று கைவிடப்பட்டு இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான்! ஏதோ ஒரு காரணத்தினால் தனித்து விடப்பட்ட இந்த இடங்களுக்கு இன்றளவும் சாகச விரும்பிகள் சென்று தான் வருகின்றனர். அந்த இடங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன, எதற்காக அவை எல்லாம் கைவிடப்பட்டுள்ளன என்று பார்ப்போம் வாருங்கள்!

பாங்கர், ராஜஸ்தான்

பாங்கர், ராஜஸ்தான்

பாங்கர் கோட்டைதான் ஆசியாவிவில் திகில் நிறைந்த இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் த்ரில் நிறைந்த இடம் இது தான் என்று கூறப்படுகிறது. கடந்த 500 ஆண்டுகளாக இது "அமானுஷ்யங்களின் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. 1600 வருடங்களுக்கு முன்பு, தந்திரி ஒருவர் தன் மாய தந்திரங்களை பயன்படுத்தி இளவரசியை மயக்க நினைத்து முயற்சி எடுக்கும் போது, அதனை அறிந்த இளவரசி அதில் இருந்து தப்பி விடுகிறார்.

இதனால் கோபமடைந்த தந்திரி முழு கிராமத்தையும் சபித்து உள்ளார். அன்றிலிருந்து இந்த இடம் இருள் அடைந்தது எனவும், கோட்டைக்குள் இரவில் சென்று யாரும் வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் "இரவில் யாரும் செல்லக்கூடாது" என பலகையே வைக்கப்பட்டுள்ளது.

உனகோடி, திரிபுரா

உனகோடி, திரிபுரா

நூற்றுக்கணக்கான பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்கள் மற்றும் பழங்கால கோவில்களின் இடிபாடுகள் நிறைந்த இந்த இடம், அங்குள்ள அனைத்து தொல்லியல் ஆர்வலர்களுக்கும் ஒரு பொக்கிஷமாகும். இந்த சிற்பங்கள் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளன, அதே சமயம் அதன் பெரும்பகுதி கீழே புதைந்து கிடக்கிறது, அவை இதுவரை தோண்டப்படவில்லை. சிவன் பார்வதியுடன் கைலாயத்திற்கு செல்ல விரும்பிய பெண் ஒருவரை இரவோடு இரவாக ஒரு கோடி தெய்வ சிலைகளை வடித்தால் "நான் உன்னை கயிலாயம் அழைத்து செல்கிறேன்" என சிவபெருமான் கூறுகிறார். ஆனால் அவரால் ஒரு கோடிக்கும் ஒன்று குறைவான சிலைகளை வடிக்க முடிந்ததே தவிர, ஒரு கோடியை முடிக்க முடியவில்லை.

லக்பத், குஜராத்

லக்பத், குஜராத்

பொதுவாக அழகிய வெள்ளை மணல் பாலைவனத்திற்கு பெயர் பெற்ற கட்ச் அதன் வடமேற்கு மூலையில் கைவிடப்பட்ட லக்பத் நகரத்தையும் கொண்டுள்ளது. முன்னர் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்த லக்பத் இப்போது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது, 1819 இல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு, அந்த அழகிய நகரமே தலைகீழ் மாறி போனது. மக்கள் வசிக்காத பரந்த நிலப்பரப்புகளை காண நீங்கள் இங்கே வரவேண்டும். தெளிவான இரவு வானம், பாலைவனக் காற்றின் சாரலில் நனைந்தபடி நட்சத்திரங்களைப் பார்த்து ரசிக்க இது ஏற்ற இடமாகும்.

தனுஷ்கோடி, தமிழ்நாடு

தனுஷ்கோடி, தமிழ்நாடு

ஒருபுறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ள இந்த இடம் மயான அமைதியுடன் காணப்படுகிறது. அறிக்கைகளின்படி, 1964 இல் ஏற்பட்ட பாரிய சூறாவளி காரணமாக தனுஷ்கோடி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, பின்னர் அது குடியிருக்க தகுதியற்றதாக அப்போதைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்திற்குச் சென்றால், பழங்கால இடிபாடுகளைக் காணலாம். மேலும், ராமர் இலங்கைக்கு செல்ல சேது பால உருவாக்கிய இடம் இது என்றும் புராண புராணங்கள் கூறுகின்றன.

விஜயநகர், கர்நாடகா

விஜயநகர், கர்நாடகா

அந்த காலத்தில் இந்தியாவின் செழிப்பான தலைநகரம் அதாவது "வெற்றியின் நகரம்" என்று இந்த நகருக்கு விஜயநகரம் என்று பெயர் வைத்தனர். இந்த நகரம் உலகம் முழுவதிலுமிருந்து பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. இந்த நகரம் 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் போது, போர்களால் அழிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்த இடம் அதன் புனிதமான சிற்பங்கள், நினைவுச்சின்னங்கள், கோவில்கள் மற்றும் அரண்மனை காரணமாக கட்டிடக்கலை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் மையமாக உள்ளது.

ராஸ் தீவு, அந்தமான்

ராஸ் தீவு, அந்தமான்

ராஸ் தீவு 1941 இல் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு பல தீவுகளின் நிர்வாக தலைநகராக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இந்த தீவில் குடியேறுவதற்கு நிலைமை தடைசெய்யப்பட்டது. இப்போது இந்த தீவு இந்தியக் கடற்படையால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. .நீங்கள் இப்போது இந்த தீவுக்குச் செல்ல விரும்பினால், அவர்களிடம் முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

காந்திகோட்டா, ஆந்திரப் பிரதேசம்

காந்திகோட்டா, ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பென்னார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த அழகான சிறிய கிராமம், சில அற்புதமான வரலாற்று கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. அதேபோல், காந்திகோட்டா கோட்டை வளாகத்தில் ஒரு மசூதி, ஒரு சிறிய கோட்டை, இரண்டு கோவில்கள் மற்றும் ஒரு தானிய களஞ்சியம் உள்ளது. தற்போது, இவை அனைத்தும் சிதிலமடைந்து, சில கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. சுருக்கமாக, இந்த இடம் இப்போது கைவிடப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

சிட்கன் கோட்டை, லடாக்

சிட்கன் கோட்டை, லடாக்

இமயமலையில் இருக்கும் எல்லை நகரமான கார்கிலில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்து இருக்கும் இந்த சிட்கன் கோட்டை ஒரு காலத்தில் கம்பீரமான கோட்டையாக இருந்தது. லே அரண்மனையை விட இது மிகவும் பழமையானது மற்றும் உயரமானது என்று கூறப்படுகிறது. ஒரு குன்றின் மேல் கைவிடப்பட்ட கட்டமைப்பாக இருக்கும் இந்த கோட்டையைச் சுற்றி ஏகப்பட்ட மர்மங்கள் உள்ளன. இது கவுண்ட் டிராகுலா கோட்டையின் இந்தியப் பதிப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த இடங்களை பற்றி எல்லாம் படித்தால் வியப்பாக இருக்கிறது அல்லவா. என்ன தான் இவை எல்லாம் கைவிடப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் கூட சாகச விரும்பிகளின் மத்தியில் இந்த இடங்களின் மீது இருக்கும் மவுசு குறையவில்லை. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இந்த இடங்களுக்கு எல்லாம் ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமே! எப்போது செய்ய போகிறீர்கள்?

Read more about: adventure india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X