Search
  • Follow NativePlanet
Share
» »பார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா ?

பார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா ?

கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் சிவனின் சக்தி. இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லவர்களை காப்பதற்கான வடிவமா பாவிக்கப்படகிறது. உக்கிர சிவனின் கனல் கண்களிலிருந்து தோன்றியவள் என்பதால் இந்த அன்னைக்கு காளி என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சம்பவத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்படவே பார்வதிக்கும் சாபம் விட்டார் சிவபெருமான். இதனால், பார்வதி என்ன ஆனார் ? எத்தலத்தில் உறைந்த நிலையில் வீற்றுள்ளார் என உங்களுக்குத் தெரியுமா ?

காளி திருத்தலம்

காளி திருத்தலம்

சிதம்பரத்தில் உள்ள முக்கியமான திருத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். அந்த தில்லை நடராஜர் ஆலயத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவது பார்வதி அம்யாரே காளியாக வீற்றுள்ள தில்லை காளியம்மன் கோவிலாகும். நடராஜர் கோவிலில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே உள்ள இக்கோவிலுக்குச் சென்ற பின்பே நிடராஜர் கோவிலுக்கு பயணிக்க வேண்டும் என்பது பலரால் அறியப்படாத உண்மையாகும்.

Richard Mortel

தல அமைப்பு

தல அமைப்பு

தில்லை காளியம்மன் கோவில் சிலரால் தில்லையம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இதில் அதிசயத்தக்க விசயம் பிரம்மனைப் போலவே நான்கு முகங்களுடன் தில்லை அம்மன் தனி சன்னதியில் வீற்றுள்ளார். மூலவர் சன்னதிக்கு அடுத்ததாக வீணை வித்தியாம்பிகை அம்மனும், தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷண ரூபிணியாகவும் காட்சியளிக்கின்றனர்.

Jayaseerlourdhuraj

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

தில்லைக் காளியம்மன் கோவிலில் ஒரு சன்னதியில் உக்ர காளியாக ஆயுதங்களுடன் எட்டுக் கைகளைக் கொண்ட தில்லை காளியாகவும், மற்றொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்ம சாமுண்டேஸ்வரி அம்மனாகவும் பார்வதி அம்மையார் காட்சிபுரிகிறார். இதில் சொரூபத்தில் உள்ள காளியை வணங்குவதன் மூலம் பில்லி சூனியம், பகை, தீராத நோய்கள் போன்றவற்றை நீங்கும் என்பது தல நம்பிக்கையாகும். சாந்தமான சாமுண்டேஸ்வரி அம்மனை வணங்கினால் கல்வி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.

Krishnakumarsnm

வழிபாடு

வழிபாடு

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் எனச் சுற்று வட்டார ஊர்களில் இருந்தெல்லாம் திரளாகக் கோவிலுக்கு வருகின்றனர் பக்தர்கள்.அம்மனுக்குப் புடவை சார்த்தி, அர்ச்சனை செய்து, மாவிளக்கேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும். திருமணத் தடை விலகும், தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால் பிள்ளை வரமும் கிடைக்கும் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Richard Mortel

சிவனிடம் சாபம் பெற்ற பார்வதி

சிவனிடம் சாபம் பெற்ற பார்வதி

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே தங்களில் யார் அதிக சக்தி கொண்டவர்கள் என விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி சக்திதான் என வாதிட்டாள். சிவனும், சக்தியும் ஒன்று என உணர்த்த பார்வதியை உக்கிர காளியாக மாற்றும்படி சிவன் சபித்துவிட்டார். kனம் வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோட்சனம் பெற வேண்டினாள். சிவபெருமானா, சிதம்பரத்தில் உள்ள தில்லையில் காளியாக தவமிருந்து தன்னை அடைய அருளினார். அவ்வாறே பார்வதி அம்மையார் தில்லை நடராஜரை வேண்டியபடியே அமர்ந்து உக்கிர காளியாக அவதரித்தார்.

Rsp3282

நான்கு முக அம்மன்

நான்கு முக அம்மன்

சிவனுக்கும், அம்பாஷக்கும் நடந்த நடனப் போட்டியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்னும் பெயரில் உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன் இவ்வாறு காளியால் செய்ய முடியுமா என சவாலிட, பெண்மைக்குரிய நாணத்தால் காளியால் அந்த நடனத்தை ஆடி முடியவில்லை. ஆனால், காளி அதிக கோபம் கொண்டாள். அவளது கோபத்தை போக்கும் வனைகயில் பிரம்மா, வேதநாயகி என புகழ்பாடி நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அவ்வாறே இத்தல காளி பிரம்மனைப் போல நான்கு முகங்களுடக் காட்சி தருகிறாள்.

Richard Mortel

சாபவிமோசன தலம்

சாபவிமோசன தலம்

சிதம்பரம் நடராஜர் கோவில் சிவபெருமாள் ஆனந்த தாண்டவம் ஆடிய திருத்தலம் என்பது மட்டுமே அனைவரும் அறிந்தது. ஆனால் அவருக்கு இணையாக சக்தியும் நடனமாடிய இடம் தில்லைக் காளி கோவிலில் தரிசிப்பவருக்கு மட்டுமே தெரியும். காளிதேவி சாபவிமோசனம் பெற்ற இத்தலத்தில் சாப விமோசனம் வேண்டுவோரும், எதிரிகளால் சிரமத்திற்கு உள்ளானவர்களும் வழிபட்டுச் செல்லலாம்.

Richard Mortel

மகம் நட்சத்திர யோகம்

மகம் நட்சத்திர யோகம்

இத்தல காளியம்மன் மகம் நட்சத்திரத்தில் அதிதேவதையாக உள்ளார். அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதலை இத்தல இறைவனிடம் முறையிட்டால் விரைவில் காரியம் கைகூடும். தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடுகள் அகல காளிக்கு அபிஷேகம் செய்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Azzam AWADA

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சிதம்பரம் நகரம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நல்ல முறையில் போக்குவரத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிதம்பரத்தை எளிதில் அடையலாம். சிதம்பரத்திற்கு அருகில் திருச்சி விமான நிலையம் அமைந்துள்ளது. தில்லை நடராஜர் கோவிலில் இருந்து மாநில நெடுஞ்சாலை 49 வழியாக சுமார் 500 மீட்டர் பயணித்தால் தில்லைக் காளியம்மன் திருத்தலத்தை அயை முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more