Search
  • Follow NativePlanet
Share
» »தென் இந்தியாவில் நீண்ட விடுமுறைகளின் போது சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் !!

தென் இந்தியாவில் நீண்ட விடுமுறைகளின் போது சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் !!

By Naveen

நம்ம ஊரில் பொங்கல் கொண்டாடும் அதே நாளில் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் மகாராஷங்கராந்தி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வெள்ளிகிழமை வருவதால் வெளியூர்களில் வசிக்கும் பெரும்பாலனவார்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம் ஆகிவருகின்றனர்.

ஆனால், பெங்களூருவில் இருக்கும் சில முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பொங்கல் மற்றும் மகாராஷங்கராந்தி பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலை செய்யும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விடுமுறையுடன் திங்கள்கிழமை அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு நான்கு நாட்கள் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது சுற்றுலாத்தலங்களுக்கோ செல்ல திட்டமிட்டுவருகின்றனர்.

இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் நீண்ட விடுமுறைகள் வருவது அரிதினும் அரிது. இந்த விடுமுறைகளின் போது தென் இந்தியாவில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் எவையெல்லாம் என்பதை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கோகர்ணா:

கோகர்ணா:

நீங்கள் பெங்களூரு அல்லது சென்னையில் வசிப்பவராக இருந்தால் நீண்ட விடுமுறையை கொண்டாட செல்ல வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று பெங்களூருவில் இருந்து 490 கி.மீ தொலைவில் இருக்கும் கோகர்ணா தான்.

கோவாவை போன்றே இங்கும் கடற்கரைகள் ஏராளம் உண்டு. நண்பர்களுடன் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இங்கே தாரளமாக செல்லலாம்.

Abhijit Shylanath

கோகர்ணா:

கோகர்ணா:

கோகர்ணாவில் இருக்கும் முக்கிய இடம் ஓம் பீச் ஆகும். ஹிந்தியில் 'ஓம்' என்ற வார்த்தையின் வடிவில் இருப்பதால் இந்த கடற்கரை 'ஓம் பீச்' என்றழைக்கப்படுகிறது.

இது தவிர இங்கே கோகர்ணா பீச், மெயின் பீச், குடலே பீச், பேரடைஸ் பீச் போன்ற கடற்கரைளும் உள்ளன.

Axis of eran

கோகர்ணா:

கோகர்ணா:

கடற்கரைகள் பிரபலமாவதற்கு முன்பு கோகர்ணாவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருந்தது 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான மகாபலேஸ்வரர் கோயில் தான்.

சிவபெருமான் இங்கே ஆத்ம லிங்கமாக காட்சியளிக்கிறார்.

Nvvchar

கோகர்ணா:

கோகர்ணா:

கோவாவை போன்று நெரிசல் மற்றும் அசுத்தம் இல்லாத கோகர்ணா கடற்கரைகளில் உல்லாசமாக சில நாட்களை இந்த விடுமுறைகளின் போது கொண்டாடி மகிழுங்கள்.

கோகர்ணாவில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

Patrik M. Loeff

ஏற்காடு:

ஏற்காடு:

தமிழ்நாட்டில் மலைவாசஸ்தலம் என்றால் சட்டென நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானாலும் தான். ஆனால், இப்போது அவை கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன.

சுத்தமான காற்றை சுவாசித்து, சில நாட்கள் இயற்கை அன்னையின் மடியில் துயில விரும்புகிறவர்கள் செல்லவேண்டிய இடம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் 'ஏற்காடு' ஆகும்.

ஏற்காடு:

ஏற்காடு:

'தென்னிந்தியாவின் ஆபரணம்' என்ற சிறப்புப்பெயருடன் விளிக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 4970 அடி உயரத்தில் இருக்கும் இங்கே ஆரஞ்சு, பலா, வாழை போன்ற பழ வகைகள் மிக அதிகமாக விளைகின்றன.

Thangaraj Kumaravel

ஏற்காடு:

ஏற்காடு:

ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் கிளியூர் அருவி ஏற்காட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலமாகும். இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர்வரத்து இருக்கிறது.

இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது.

Saivin Muthu

ஏற்காடு:

ஏற்காடு:

ஏற்காட்டில் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் ஏரியில் படகு சவாரி செய்வதும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்திசாயும் மாலை நேரத்தில் மனதுக்கு பிடித்தமானாவருடன் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது என்றென்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

Anand

ஏற்காடு:

ஏற்காடு:

'எமரால்டு ஏரி' என்றழைக்கப்படும் இந்த ஏரியின் அருகிலேயே அற்புதமாக பராமரிக்கப்படும் பூங்கா ஒன்றும், மான்கள் காட்சியகம் ஒன்றும் இருக்கிறது. இந்த ஏரியில் பெடளிங் படகு, துடுப்பு படகு ஆகியவை இருக்கின்றன.

Venkataramesh Kommoju

ஏற்காடு - எப்படி அடைவது? :

ஏற்காடு - எப்படி அடைவது? :

ஏற்காடு தமிழ்நாடு மற்றும் பிற சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து வழக்கமான மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் அதே போல் தனியார் பேருந்து சேவைகளும் உள்ளன.

கோயம்புத்தூர் (190 கி.மீ.), சென்னை (356 கி.மீ.) மற்றும் பெங்களூரு (230 கி.மீ.) நகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Thangaraj Kumaravel

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

இந்தியப்பெருங்கடலும், அரபிக்கடலும் சங்கமிக்கும் வர்களா கடற்கரை கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரை ஆகும். இதன் சிறப்பே கடற்கரையை ஒட்டியே குன்று ஒன்று இருப்பது தான்.

இந்தியாவிலேயே இப்படிப்பட்ட புவியமைப்பு கொண்ட கடற்கரை இதுமட்டும் தான்.

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

சூரிய குளியல் போடவும், கடலில் நீச்சல் அடிக்கவும், கடற்கரை மணலில் விளையாடவும் இந்த வர்களா கடற்கரை அற்புதமான இடமாகும்.

அதோடு குன்றில் நிறைய நீர் ஊற்றுகள் இருக்கின்றன.

Thejas Panarkandy

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரையின் பேரழகு !!

Thejas Panarkandy

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

ஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச கேம்ப்'கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற ஸ்தலமாக மாறியுள்ளது.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

சினிமாபடப்பிடிப்புக்கான மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகமாக ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' பட்டியலில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கு தேவையான எல்லாவித உபகரணங்களையும் இயந்திர அமைப்புகளையும் இந்த படப்பிடிப்பு வளாகம் கொண்டுள்ளதால் படத்தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிக அளவில் இந்த வளாகத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

நல்லதொரு திரைக்கதையுடன் இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நுழைந்தால் போதும் திரும்பிவரும்போது திரையிடத்தயாரான படத்துடன் திரும்பலாம். மேலும் படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நிறைந்துள்ளன.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி:

உல்லாச சவாரி அமைப்புகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன. ஷாப்பிங் வசதிகளும் உணவகங்களும் கூட இங்கு அமைந்துள்ளதால் ஒரு முழுமையான பொழுதுபோக்கு தலமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி காட்சியளிக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more