Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவுக்கு போயிட்டு கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னனென்ன தெரியுமா ?

கேரளாவுக்கு போயிட்டு கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னனென்ன தெரியுமா ?

கேரளா, பெயரை கேட்டதுமே காணுமிடமெல்லாம் நிறைந்திருக்கும் பசுமையும் பேரழகு மிக்க பெண்களும் தான் நினைவுக்கு வரும். இயற்கை கொடையினால் ஆசிர்வதிக்கப்பட்ட கேரளா முழுக்கவும் ஆச்சர்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கிறிஸ்துவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள் நுழைந்தது கேரளத்தின் வழியாகத்தான் என்றாலும் அற்புதமான தன் கலாச்சாரத்தை இழக்காமல் இன்றும் பேணிப்பாதுகாக்கிறது.

ரகசியங்கள் பல பொதிந்துள்ள பல்லாயிரம் வருடங்கள் பழமையான கோயில்கள் இருக்கின்றன, அமிர்தத்துக்கு இணையான சுவையுடைய உணவுகள் கிடைக்கின்றன, என்றென்றைக்கும் நினைவில் நீங்காத தருணங்களை தரவல்ல கடற்கரைகளும் மலை வாசஸ்த்தலங்கள் இருக்கின்றன. வாருங்கள் கடவுள் தேசத்துக்கு சென்றால் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ?. நிலத்தில் வாழும் மிகப்பெரிய ஜீவராசியான யானைகள் நாம் தீங்கு செய்யாதவரை பரம சாது. பார்க்க பெரியதாக இருந்தாலும் ஒரு குழந்தையை போன்ற மனதுடையவை அவை. அப்படிப்பட்ட யானைகளுடன் நண்பர்களாக மாற உங்களுக்கு விருப்பமா ? அது எப்படி சாத்தியம் என்பதை அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ranjith k r

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று ஆசை தீர குளிப்பது தான். தும்பிக்கையால் தண்ணீரை உடல் முழுவதும் பீச்சியடித்தபடி ஆரவாரமாக குளிக்கும் போது யானைகள் உண்மையாகவே சின்ன குழந்தை போல ஆகி விடுகின்றன. அந்த சமயத்தில் தேங்காய் நார் கொண்டு தன்னை குளிக்க வைப்பவருடன் யானைகள் விளையாடவும் செய்கின்றன.

Emran Kassim

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

அப்படி யானைகளை குளிப்பாட்ட உங்களுக்கு ஆசையிருந்தால் கேரள மாநிலத்தில் உள்ள கொடநாட்டுக்கு வாருங்கள். தமிழக முதல்வர் அடிக்கடி ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு நீலகிரி மாவட்டத்தில் இருக்கிறது.

இங்கே குறிப்பிடப்படும் கொடநாடு எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறு கிராமமாகும்.

Aviva West

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

இங்கே உள்ள கொடநாடு யானைகள் சரணாலயத்தில் யானைகளின் மீது அமர்ந்து சவாரி செய்யலாம், அவைகளுக்கு உணவு கொடுக்கலாம் மேலும் அவற்றை குளிப்பாட்டி மகிழலாம். இப்படி நாம் செய்யும் போது பாகனும் உடன் இருந்து யானைகளை எப்படி கையாள வேண்டும் என்று நெறி காட்டுவார். இதற்கு கட்டணமாக ₹300 - ₹1500 வரை வசூலிக்கப்படுகிறது.

Cedar

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

நகர வாழ்கையின் நரக வதைகளில் இருந்து தப்பித்து இயற்கையோடு நெருங்கி பழகி சில நாட்களை கழிக்க விரும்புகிறவர்கள் இந்த கொடநாடு பகுதிக்கு கட்டாயம் வாருங்கள்.

Aviva West

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

யானையை குளிப்பாட்டுவோமா ...? :

ஓடையின் குளுமையில் உல்லாசமாக நீந்தி குளித்து விளையாடும் யானைக்கூட்டம்.

Gwyneth Dunsford

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

கேரளாவுக்கே உரிய தனித்துவமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று தான் ஆலப்புழா படகு வீடுகள் ஆகும். அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஆலப்புழா மாவட்டத்தின் பிரத்யேகமான புவியமைப்பு காரணமாக அங்கே அலைகள் எழாத 'உப்பங்கழி' நீரோடைகள் இருக்கின்றன. இவற்றில் படகு பயணம் செய்வது ஏதோ வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை தரும்.

Aditya Sen

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிக நீளமான ஏரியான புன்னமடா ஏரியிலும், இதர உப்பங்கழி நீரோடைகளிலும் படகு வீடுகளில் பயணம் செய்யலாம். தேனிலவு செல்லவிருப்பவர்களுக்கு இந்த படகு வீடுகள் மிகவும் உகந்தவை. ஐந்து நட்சத்திர விடுதிக்கு நிகரான வசதிகள் இந்த படகு வீடுகளில் செய்யப்பட்டுள்ளன.

Aditya Sen

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

'ஆசியாவின் வெனிஸ்' என்ற அடைமொழிக்கு ஏற்ப வெனிஸ் நகரில் இருப்பது போன்றே படகில் மிதந்தபடி பசுமை நிறைந்திருக்கும் ஆலப்புழா நகரை சுற்றிப்பார்ப்பது புதுமையான, என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

Aditya Sen

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீடுகள் தவிர ஆலப்புழாவில் அற்புதமான கடற்கரை, ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், கேரளத்தின் பழமையான தேவாலயமான சி.எஸ்.ஐ சர்ச் போன்ற பல இடங்கள் இருக்கின்றன. இந்நகரை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள். ஆலப்புழா ஹோட்டல் விவரங்கள்.

Roy Grimwood

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

அற்புதமானதொரு மாலைப்பொழுதில் ஆலப்புழா கடற்கரை.

Rocky Barua

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

படகு வீட்டில் பயணம் செய்யுங்கள் :

ஆலப்புழாவில் உள்ள இந்தியாவின் மிக நீளமான ஏரியான புன்னமடா ஏரியின் புகைப்படம். இந்த ஏரியில் தான் அதிகமான அளவு படகு வீடு பயணங்கள் நடக்கின்றன.

Sudheesh S

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

முன்பே சொன்னது போல என்னதான் பிற கலாச்சாரங்கள் காலப்போக்கில் தலை தூக்கியிருந்தாலும் தன்னுடைய அடையாளங்களை இன்னமும் பாதுகாப்பதில் மலையாளிகளை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. அங்கே இன்னமும் பலராலும் கதக்களியும், தெய்யமும் விரும்பி ரசிக்கப்படுகிறது. திருவிழா காலங்களில் ஏறத்தாழ எல்லா கோயில்களிலும் இந்த வகை நடனங்கள் இடம் பெறுகின்றன.

Bobinson K B

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

ஓணம், திரிச்சூர் பூரம் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது கோயில்களில் கதக்களி ஆட்டம் நடத்தப்படுகிறது. புராண கதைகளும், பழமையான உபநிஷங்களும் இந்த கதக்களி ஆட்டத்தின் மூலம் சொல்லப்படுகின்றன. முகம் முழுக்க சாயம் பூசிக்கொண்டு, அபாரமான கண் அசைவுகளையும், முக பாவனைகளையும் கொண்டு நடக்கும் கதக்களி ஆட்டம் பார்க்க பரவசம் தருவதாக இருக்கும்.

Dhruvaraj S

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

கதக்களி போன்றே கேரளத்தில் இருக்கும் மற்றுமொரு நடனம் தான் 'தெய்யம்' ஆகும். பல்லாயிரம் வருடங்கள் பழமையானதாக சொல்லபப்டும் இந்த நடன அமைப்பு பெரும்பாலும் வட மலபார் கடற்கரையோர மாவட்டங்களில் (காசர்கோடு, கண்ணூர், வயநாடு) அதிகமாக நடத்தப்படுகிறது. இந்த நடனத்தின் சிறப்பு என்னவென்றால் தெய்யம் நடனம் ஆடுபவரே கடவுளாக பாவிக்கப்படுகிறார்.

Ajith U

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

இந்த தெய்யம் ஆட்டம் உருவானதின் வரலாறு நாம் எல்லோரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியதாகும். அந்தக்காலத்தில் கேரளாவில் சாதிய கொடுமைகள் தலைவிரித்தாடின.

Vineeth

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

கோயில்களுக்குள் நுழைய கூட விடாமல் தடுத்த மேல் சாதியினரின் கொடுமைகளை தாங்க முடியாத பழங்குடியின மக்களான தெய்யர்கள் இந்த நடனத்தின் மூலம் தெய்யம் நடனமாடுபவர்களையே தங்களுடைய கடவுளாக பாவித்து வணங்க தொடங்கினர். இந்த நடனத்தில் பங்கு கொள்ள மேல் சாதியினருக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

Vineeth

தெய்யமும். கதக்களியும் :

தெய்யமும். கதக்களியும் :

தெய்யம் ஆட்டத்தில் மட்டுமே ஏறத்தாழ 400க்கும் அதிகமான கடவுளர்கள் கதாப்பாத்திரங்கள் இருக்கின்றனவாம். இவை ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான வேசங்கள் போடப்படுகின்றன.

Vineeth

கேரள உணவுகள் :

கேரள உணவுகள் :

கேரளாவுக்கு சென்றுவிட்டு அங்கும் தமிழ் உணவகத்தை கண்டுபிடித்து சென்று சாம்பார், ரசம், தோசை என வெளுத்து வாங்காமல் கேரளாவின் பாரம்பரியமான உணவுகளை கொஞ்சம் சுவைத்து பாருங்கள். மிளகு, ஏலக்காய் போன்ற பொருட்களின் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்த கேரளாவின் உணவுகள் விவரிக்க முடியாத அதிருசி கொண்டவை.

Connie Ma

கேரள உணவுகள் :

கேரள உணவுகள் :

நன்னீர் ஓடைகளை கொண்ட ஆலப்புழாவில் கிடைக்கும் 'கரி மீன்' வறுவலை பார்த்தாலே நாவூறும். ஆலப்புழாவின் ஓடைகளில் மட்டுமே கிடைக்கும் கரி மீன்களை மசாலா கொண்டு நிரப்பி வாழையிலையில் பொறிக்கப்பட்டு பரிமாறப்படும் கரிமீனை படகு வீடுகளில் மிதந்தபடியே ருசித்து மகிழுங்கள்.

AnnaKika

கேரள உணவுகள் :

கேரள உணவுகள் :

கேரளா பிரியாணி என்று சொல்லப்படும் தலசேரி பிரியாணி நாம் இதுவரை ருசித்த பிரியாணிகளை காட்டிலும் வித்தியாசமான சுவையுடையதாகும். கயமா என்ற பிரத்யேகமான அரிசி, தலசேரியில் கிடைக்கும் மசாலா பொருட்கள், நெய் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பிரியாணி அதிக காரமில்லாமல், மனமுடையதாகவும், சுவையானதாகவும் இருக்கிறது.

Jim

கேரள உணவுகள் :

கேரள உணவுகள் :

இவை தவிர கேரளத்துக்கே உரிய கொலாபுட்டு, ஆப்பம் - தேங்காய்ப்பால், அடா ஒப்பட்டு, நூலப்பம், கப்பா, கள்ளு போன்ற உணவுகளையும் கட்டாயம் சுவைத்து மகிழுங்கள்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விடவும் கேரளாவில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை அடுத்ததொரு தொகுப்பில் விரிவாக காண்போம்.

கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தால் உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் ''கமென்ட்' பகுதியின் மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Connie Ma

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X