Search
  • Follow NativePlanet
Share
» »பாண்டிச்சேரிக்கு போயிட்டு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க பாஸ் ...

பாண்டிச்சேரிக்கு போயிட்டு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க பாஸ் ...

இப்போதெல்லாம் வார இறுதி விடுமுறை என்றால் விடு வண்டியை பாண்டிச்சேரிக்கு என்றாகிவிட்டது. அந்தளவுக்கு பாண்டிச்சேரி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இரண்டு நாட்கள் ஏதோ தமிழ் பேசும் வேற்று கிரகத்துக்குள் இருப்பதை போன்ற உணர்வை தர பாண்டிச்சேரி எப்போதுமே தவறுவதில்லை.

கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த பிரஞ்சு நாட்டவரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலோ என்னவோ மற்ற இந்திய நகரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாண்டிச்சேரி தனெக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டிருக்கிறது. இங்கே சுற்றுலா வரும் எவரும் இந்நகரின் அழகில் மயங்கிவிடுவார்கள் என்பது நிச்சயம்.

ஒரு வார இறுதியில் பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தால் இங்கே நாம் நிச்சயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் செய்திட வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஆரோவில்லே சர்வதேச நகருக்கு சென்றிடுங்கள் :

ஆரோவில்லே சர்வதேச நகருக்கு சென்றிடுங்கள் :

1968 ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்தின் குரு 'அன்னை' என்பவரால் துவங்கப்பட்ட சர்வதேச நகரம் தான் இந்த ஆரோவில்லே ஆகும். பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த மக்கள் மத, இன, மொழி, நிற போன்ற பாகுபாடுகளின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை அமைத்து தரும் ஒரு முன்னோடி உலக நகரமாக இது திகழ்கிறது.

Arvind Thampi

ஆரோவில்லே :

ஆரோவில்லே :

பாண்டிச்சேரி நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆரோவில்லே நகரில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். இயற்கை விவசாயம், கட்டுமானம், கைவினை பொருட்கள் செய்தல், பாடம் சொல்லித்தருதல் போன்ற விஷயங்கள் மூலமாக தங்களால் இயன்ற பங்களிப்பை இந்த ஆரோவில்லே கிராமத்திற்கு அளிகின்றனர்.

InOutPeaceProject

மாத்ரிமந்திர் :

மாத்ரிமந்திர் :

ஆரோவில்லே நகரின் மத்தியில் மாத்ரிமந்திர் எனப்படும் மிகப்பெரிய தங்க நிற உலோக உருண்டை வடிவிலான தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. 1971ஆம் ஆண்டு துவங்கி கிட்டத்தட்ட 37 வருடங்கள் கழித்து 2008ஆம் ஆண்டு தான் மாத்ரிமந்திர் கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தியான மண்டபத்தின் மையத்தில் உலகத்திலேயே மிகத்துல்லியமான கண்ணாடியால் செய்யப்பட்ட உருண்டை இருக்கிறது.

Patrik M. Loef

மாத்ரிமந்திர் :

மாத்ரிமந்திர் :

இந்த மாத்ரிமந்திரை சுற்றி அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்காக பசுமையான தோட்டம் ஒன்றும் இருக்கிறது. ஒருவர் தன்னுடைய சுயத்தை தன்னுள் பயணம் செய்து கண்டிபிடிப்பதற்க்கான இடமாக இந்த மாத்ரிமந்திர் திகழ்கிறது.

ஆரோவில்லே நகரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த தியான மண்டபத்தினுள் செல்ல சுற்றுலாப்பயணிகள் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

1ieve

ஆரோவில்லே:

ஆரோவில்லே:

சுற்றுலாப்பயணிகளும் இங்கு விருந்தினர்களாக தங்கி சில நாட்கள் இயற்கையை சீரழிக்காத வாழ்க்கை முறையோடு இணைத்துக்கொள்ளலாம்.

பாண்டிச்சேரி வந்தால் வாழ்க்கை பற்றிய புரிதலை நமக்கு அளிக்கும் அற்புதமான இந்த ஆரோவில்லே நகருக்கு கட்டாயம் சென்றிடுங்கள்.

Flickr

ஆரோ கடற்கரை :

ஆரோ கடற்கரை :

ஆரோவில்லே நகரை ஒட்டி அமைந்திருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகையும் ஏகாந்தமான சூழலையும் கொண்டிருக்கும் ஆரோ கடற்கரை .

Praveen

ஸ்கூபா டைவிங் செய்திடுங்கள் :

ஸ்கூபா டைவிங் செய்திடுங்கள் :

தண்ணியில் மிதப்பதற்க்காக பாண்டிச்சேரிக்கு அடிக்கடி போகும் நம்மில் பலபேருக்கு அங்கே தண்ணீரில் மூழ்கி நீச்சலடிக்கும் ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருப்பது தெரியாது . அந்தமான், கோவா போன்ற இடங்களில் மட்டுமே நடந்துவந்த ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் சாகச விளையாட்டு இப்போது பாண்டிச்சேரியிலும் நடத்தப்படுகிறது.

ஸ்கூபா டைவிங் செய்திடுங்கள் :

ஸ்கூபா டைவிங் செய்திடுங்கள் :

பாண்டிச்சேரியில் சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடந்துகின்றன. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கடற்கரையில் இருந்து படகில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பயணித்து கடலுக்கடியில் 6-12 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் நீந்தி கடலென்னும் விசித்திர உலகினுள் பயணம் செய்யலாம். நவம்பர் முதல் மே மாதம் ஸ்கூபா டைவிங் விளையாட்டில் ஈடுபட சிறந்த காலகட்டமாகும்.

பிரஞ்சு உணவுகளை சுவைத்திடுங்கள் :

பிரஞ்சு உணவுகளை சுவைத்திடுங்கள் :

1950கள் வரை பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தினால் இன்றும் பாண்டிச்சேரியில் பிரஞ்சு கலாச்சாரத்தின் தாக்கம் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

இதன் வீதிகளில் நடைபோடுகையில் ஏதோ பிரான்ஸ் நாட்டுக்கே வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்ப்படும். அதிலும் நீங்கள் உணவுப்பிரியர் எனில் கட்டாயம் பாண்டிச்சேரியில் கிடைக்கும் பிரஞ்சு உணவுகளை கட்டாயம் சுவைத்திட வேண்டும்.

பிரஞ்சு உணவுகளை சுவைத்திடுங்கள் :

பிரஞ்சு உணவுகளை சுவைத்திடுங்கள் :

பாண்டிச்சேரியின் பிரபலமான பிரஞ்சு உணவகங்களான கபே டெஸ் ஆர்ட்ஸ், ஒபுஸ் 8 கபே,லே கபே போன்றவற்றில் கிடைக்கும் வைன், சீஸ் மற்றும் ச்பெகட்டி கொண்டு செய்யப்பட்ட முற்றிலும் மாறுபட்ட சுவைகொண்ட பிரஞ்சு உணவுகளை சுவைத்திட மறந்துவிடாதீர்கள்.

William Cho

பாண்டிச்சேரி கடற்கரை :

பாண்டிச்சேரி கடற்கரை :

ஆரோவில்லேவுக்கு அடுத்தபடியாக பாண்டிச்சேரியின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவது 'Promenade Beach' என்றழைக்கப்படும் பாண்டிச்சேரி கடற்கரை தான். பிரெஞ்சு போர் நினைவிடத்தில் துவங்கி டுபிலெக்ஸ் பார்க் வரை 1.2 கி.மீ தூரத்திற்கு இக்கடற்கரை நீண்டிருக்கிறது.

Sarath Kuchi

பாண்டிச்சேரி கடற்கரை :

பாண்டிச்சேரி கடற்கரை :

இந்த பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டியே தான் பாண்டிச்சேரி அரசின் தலைமை செயலகம், காந்தி சிலை, 24மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் பிரஞ்சு உணவுகள் கிடைக்கும் 'le cafe' வெதுப்பகம் (bakery) போன்றவை இருக்கின்றன .

Rashi Kalra

பாண்டிச்சேரி கடற்கரை :

பாண்டிச்சேரி கடற்கரை :

முழு நிலவு நாட்களின் மாலைப்பொழுதுகளில் இக்கடற்கரையில் நின்று நீலக்கடலில் பிரதிபலிக்கும் நிலவை கண்கொட்டாமல் ரசித்து மகிழலாம்.

Karthik Easvur

போர் நினைவிடம் :

போர் நினைவிடம் :

பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் பிரஞ்சு போர் நினைவகம். முதலாம் உலக போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

Sanyam Bahga

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

உலகம் முழுக்க நீங்கள் எத்தனையோ சாலைகளில் பயணம் செய்திருக்கலாம், ஆனால் இந்த கிழக்கு கடற்கரை சாலை பயணத்தை போன்றதொரு புதுமையான பயண அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கவே முடியாது. முடிவே இல்லாத அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரையை ஒட்டி நீளும் கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரியை நோக்கி பயணிப்பதே அற்புதமானதொரு விஷயமாகும்.

Looking -> Lens

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றடைய கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஆகும். இந்த 155 கி.மீ தூர பயணத்தின் வழியில் நிச்சயம் தவற விடக்கூடாத சில சுற்றுலாத்தலங்கள் அமைந்திருக்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

கிழக்கு கடற்கரை சாலை பயணம் :

சென்னையில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணித்து பாண்டிச்சேரியில் வர விடுமுறையை அட்டகாசமாக கொண்டாடிடுங்கள்.

இதுவரை இந்த பயணம் சென்றதில்லை என்றால் சீக்கிரம் திட்டமிட்டுநண்பர்களுடன் இவ்விடங்களுக்கு சென்றுவாருங்கள் .

முட்டுக்காடு படகு சவாரி மையம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X