Search
  • Follow NativePlanet
Share
» »திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?

திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?

திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?

By Staff

தற்போது: உலகை அழிக்கும் வல்லமை கொண்ட லிங்கங்களின் மர்மங்கள் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுகிறது.

அதோடு மற்ற ஆறுபடைவீடுகளோடு ஒப்பிடுகையில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன.

இந்த இடத்தில்தான் முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

படித்துப் பாருங்கள் : முருகனின் அறுபடை வீடுகள் ஒரு தரிசனம்!!!

புராணம் சொல்வது என்ன?

புராணம் சொல்வது என்ன?

தேவர்களை துன்புறுத்தி வந்த அரக்கன் சூரபத்மனை அழிக்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து உண்டாக்கிய ஆறு பொறிகளிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின்னர் சூரபத்மனை வதம்செய்து, வியாழ பகவானுக்கு தான் காட்சி தந்த இடத்தில் தங்குவதாக உறுதி தந்தார். அதன் பிறகு வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, அந்த இடத்தில் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் 'செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே 'செந்தில்நாதர்' என மருவி, தலமும் 'திருஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மாற்றம் கொண்டது.

படைவீடு

படைவீடு

போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் 'படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே.

படம் : Rkrish67

முருகன் செய்த சிவபூஜை!

முருகன் செய்த சிவபூஜை!

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். அந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடனும், தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்து சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காட்சி தருகிறார்.

படம் : Sarvagyana guru

சிவனுக்கே முதல் தீபாராதனை!

சிவனுக்கே முதல் தீபாராதனை!

முருகப்பெருமான் விக்ரகத்தின் இடது பின்புற சுவரில் லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். இதேபோல சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் அமைந்துள்ளது.

படம் : Kandaraghav

அடைக்கப்பட்டு கிடக்கும் ராஜகோபுரம்!

அடைக்கப்பட்டு கிடக்கும் ராஜகோபுரம்!

முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் 130 அடியில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில், முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

படம் : Sa.balamurugan

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

130 அடியில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரம்.

படம் : Sa.balamurugan

கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவாக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

படம் : Sarvagyana guru

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அதன் பின்னர் ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். பிறகு, வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

படம் : Sa.balamurugan

கண்ணாடிக்கு அபிஷேகம்

கண்ணாடிக்கு அபிஷேகம்

சூரனை சம்ஹாரம் செய்தபின்பு ஜெயந்திநாதர், பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அர்ச்சகர் அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்று அழைக்கின்றனர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

படம் : Sa.balamurugan

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததாக சொல்லப்படுகிறது.

படம் : Aravind Sivaraj

மஞ்சள் நீராட்டு

மஞ்சள் நீராட்டு

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

படம் : Thamizhpparithi Maari

மாப்பிள்ளை சுவாமி

மாப்பிள்ளை சுவாமி

திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்களும், அவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகளும் இருக்கின்றன. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைக்கப்படுகிறார்.

படம் : Perumalnadar

திருமண வரமளிக்கும் இறைவன்!

திருமண வரமளிக்கும் இறைவன்!

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொண்டால் நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம் உள்ளது.

படம் : Wikiprem

நைவேத்தியங்கள்

நைவேத்தியங்கள்

திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

படம் : Aravind Sivaraj

கங்கை பூஜை

கங்கை பூஜை

உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்றழைக்கின்றனர்.

படம் : Aravind Sivaraj

கார்த்திகைப்பெண்களுடன் முருகன்!

கார்த்திகைப்பெண்களுடன் முருகன்!

திருச்செந்தூர் கோயிலிலுள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

கோயில் நடை

கோயில் நடை

சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருச்செந்தூர் கடற்கரை

திருச்செந்தூர் கடற்கரை

'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..' என்ற பாடலில் வருவது போல இந்த கடற்கரையிலிருந்து சூரிய உதயத்தை ரசிப்பதற்காகவே முருகப்பெருமான் இங்கு குடிகொண்டுள்ளாரோ என்னவோ?! இங்கு வரும் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு முன் இந்த கடலில் நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது.

நாழிக்கிணறு

நாழிக்கிணறு

நாழிக்கிணறு என்பது சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது.மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

படம் : சேதுராமன்2012

மயில்

மயில்

முருகனின் வாகனமாக அறியப்படும் ஆண் மயில் ஒன்று, சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தினுள் உள்ள மரமொன்றின் மீது அமர்ந்துள்ளது.

படம் : Aravind Sivaraj

கோயில் யானை

கோயில் யானை

திருச்செந்தூர் முருகன் கோயிலின் யானை.

படம் : Thamizhpparithi Maari

வள்ளிகுகை

வள்ளிகுகை

கோயில் வளாகத்தில் உள்ள வள்ளிகுகையின் மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மயில்கள்.

படம் : Aravind Sivaraj

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X