Search
  • Follow NativePlanet
Share
» »திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்

By

திருவண்ணாமலையின் அருணாச்சலேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில். இந்த சிவன் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. எனவே பௌர்ணமி அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலையின் சுற்றுலாத் தலங்கள்

திருவண்ணாமலை ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்

பஞ்சபூத ஸ்தலம்

பஞ்சபூத ஸ்தலம்

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. அதாவது சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைகாவல் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்க திருவண்ணாமலை அக்னியின் ஸ்தலமாக விளங்குகிறது.

கிரிவலம்

கிரிவலம்

கிரி என்றால் மலை என்ற பொருள். ஆகையால் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ தூரம் நடக்கவேண்டும்.

படம் : Adam63

அஷ்டலிங்கங்கள்

அஷ்டலிங்கங்கள்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்கங்கள் அமைந்துள்ளன. இவை ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதோடு ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அஷ்ட லிங்கங்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்ற பெயர்களில் அறியப்படுகின்றன. இவ்வெட்டு லிங்கங்களும் கிரிவலம் வரும் பாதையில் அமைந்திருப்பதோடு, இவற்றை தரிசனம் செய்வதால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்திரலிங்கம்

இந்திரலிங்கம்

கிரிவலம் செல்லும் வழியில் முதன்முதலில் நாம் தரிசிக்க போவது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த லிங்கம் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கமாதலால் இதை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், குறையில்லா செல்வமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அக்னிலிங்கம்

அக்னிலிங்கம்

கிரிவலம் செல்லும்போது 2-வதாக தோன்றும் அக்னிலிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே தென்கிழக்கு திசையை நோக்கி அமையப்பெற்றுள்ளது. இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறமாக உள்ள ஒரே லிங்கம் என்ற சிறப்பை பெறுகிறது. இந்த அக்னிலிங்கத்தை வழிபடும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. மேலும் இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றும் சக்தி இதற்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

படம் : Ragunathanp

யமலிங்கம்

யமலிங்கம்

கிரிவலத்தில் 3-வது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியவாறு யமதர்மனால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. அதோடு செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட இந்த லிங்கத்தின் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை தரிசனம் செய்பவர்கள் பண நெருக்கடி ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று நம்பப்படுகிறது.

படம் : Adam63

நிருதி லிங்கம்

நிருதி லிங்கம்

கிரிவலப் பாதையில் 4-வதாக உள்ள லிங்கம் தென்கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் நிருதி லிங்கம் ஆகும். இது பூதங்களின் ராஜாவால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. ராகுவின் பார்வையில் உள்ள இந்த லிங்கம் சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் அருகே அமையப்பெற்றுள்ளது. இதை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் பிரச்சனைகள் குறையும் என நம்பப்படுகிறது.

படம் : Govind Swamy

வருண லிங்கம்

வருண லிங்கம்

கிரிவலப் பாதையில் 5-வதாக உள்ள லிங்கம் வருண லிங்கம் ஆகும். இந்த லிங்கம் மேற்கு திசையை பார்த்தவாறு மழைக்கடவுள் வருணதேவனால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் அமையப்பெற்றுள்ளது. மேலும் சனி பகவானின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் நோய் நொடியின்றி வாழலாம் என்று நம்பப்படுகிறது.

படம் : Arunankapilan

வாயுலிங்கம்

வாயுலிங்கம்

கிரிவலம் செல்லும் போது 6-தாக தென்படும் வாயு லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இது வாயு பகவானால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் இதய நோய், வயிறு சம்மந்தமான நோய்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் இன்ப வாழ்வு வாழலாம் என்று நம்பப்படுகிறது.

படம் : Chinmayi

குபேர லிங்கம்

குபேர லிங்கம்

கிரிவலத்தில் உள்ள 7-வது லிங்கம் குபேர லிங்கம் வடதிசையை நோக்கி அமையப்பெற்றுள்ளது. இது செல்வக் கடவுள் குபேர கடவுளால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுவதுடன், குருவை ஆட்சி கிரகமாக இந்த லிங்கம் கொண்டுள்ளது. எனவே இதை வணங்கும் பக்தர்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது.

படம் : PlaneMad

ஈசானிய லிங்கம்

ஈசானிய லிங்கம்

கிரிவலத்தின் கடைசி லிங்கமான ஈசானிய லிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. மேலும் புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இதை வணங்குபவர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்வதுடன், எடுத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் ஜெயவீரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

படம் : Natesh Ramasamy

மகாதீபம்

மகாதீபம்

கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நட்சத்திரத்தில் அதிகாலை வேளை அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். அதன் பிறகே தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும்.

படம் : Vinoth Chandar

அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர்

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

படம் : shrikant rao

பெருமாள்

பெருமாள்

சிவன் சன்னதிக்கு பின்புறம், பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி அமைந்துள்ளது. இதன் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்றுஅதிகாலையில், பெருமாள் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன் பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள ‘வைகுண்ட வாசல்' வழியே கொண்டு செல்வார்கள்.

படம் : Ve.Balamurali

விநாயகர்

விநாயகர்

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது போலவே அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசி வழிபடுகிறார்கள்.இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

படம் : Ilya Mauter

நந்தி

நந்தி

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று விசேஷ பூஜை நடைபெறும். அப்போது அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து நந்திக்கு பூஜை செய்யப்படும்.

படம் : Thamiziniyan

முருகன்

முருகன்

பொதுவாக கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதியே அமையப்பெற்றிருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வார்கள். ஆனால், இங்கு முருகன் சன்னதி முதலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் : shrikant rao

சக்திவிலாச சபா மண்டபம்

சக்திவிலாச சபா மண்டபம்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்ம தீர்த்தக் குளத்திற்கு எதிரில் தவத்திரு ஞானியர் சுவாமிகள் நிறுவிய சக்திவிலாச சபா மண்டபம் உள்ளது. இங்கு சமய சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன .

படம் : Govind Swamy

1000 தூண்கள்

1000 தூண்கள்

கோயிலில் வரிசையாக அமைந்திருக்கும் 1000 தூண்கள்.

படம் : Moshikiran

சாமியார்

சாமியார்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அமர்ந்திருக்கும் சாமியார் ஒருவர்.

படம் : Arunankapilan

அலங்கார வடிவமைப்பு!

அலங்கார வடிவமைப்பு!

அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள மேற்கூரை.

படம் : Toksave

வெளிநாட்டுப் பயணிகள்

வெளிநாட்டுப் பயணிகள்

தூரத்திலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அழகை ரசிக்கும் வெளிநாட்டுப் பயணிகள்.

படம் :Natesh Ramasamy

தரிசனம்

தரிசனம்

தூரத்திலிருந்து மலையை தரிசிக்கும் பக்தர்.

படம் : Vinoth Chandar

கோயில் தேர்

கோயில் தேர்

அருணாச்சலேஸ்வரர் கோயில் தேர்.

படம் : A.D.Balasubramaniyan

அருணாச்சலேஸ்வரர் கோயிலை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

அருணாச்சலேஸ்வரர் கோயிலை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது

எப்போது பயணிக்கலாம்

படம் : Karthik Pasupathy Ramacha

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X