Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்!!

இந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்!!

இந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்!!

By Bala Karthik

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் திருவிழாவாக, ஒன்பது விதமான வெவ்வேறு வடிவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட, பத்தாம் நாளில் முடிவுபெற, அதனை தசரா அல்லது விஜயதசமி என நாம் அழைக்கிறோம்.

இந்த நவராத்திரி திருவிழா, அரக்கன் மஹிசாசூரன் மற்றும் தசரா ஆகியவர்களை அழித்து வெற்றியை கொண்டாடிய தேவியை குறிக்க, அது ராவணனை வென்ற ராமனுக்கு ஈடு இணையுடன் கொள்ளப்படுகிறது.

நவராத்திரியை கொண்டாட இந்தியாவில் காணும் சிறந்த இடங்களை நாம் இப்பொழுது பார்க்க, அவற்றுள் மலை உச்சியில் காணப்படும் துர்கா தேவி ஆலயங்களும் அடங்க, மைசூரின் தசரா திருவிழா, தில்லி மற்றும் வாரனாசியின் ராம்லீலா என தனித்துவமிக்க இராவணனுக்கான ஆலயங்களும் கான்பூரிலும், உத்தர பிரதேசத்திலும் காணப்படுகிறது.

 வைஷ்ணு தேவி:

வைஷ்ணு தேவி:

நவராத்திரி திருவிழாவில், ஒன்பது விதமான வெவ்வேறு வடிவ துர்கா தேவியை வணங்கப்பட, நேர்மறை எண்ணங்களால் ஆன வெற்றியை ருசித்து, எதிர்மறை எண்ணங்களையும் மனதை விட்டு தூர துரத்துகிறோம். இந்த ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரி, வருடத்தில் ஒருமுறை வரும் ஐந்து வகைகளுள் ஒன்றாக, அவற்றுள் மிகவும் பிரசித்திப்பெற்ற நவராத்திரி விழாவாக இந்தியாவில் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி அமைகிறது.

Vinoth Chandar

 பாக்பஷார் – துர்கா – பூஜை

பாக்பஷார் – துர்கா – பூஜை

துர்கா பூஜை அல்லது துர்கா உட்சவம் மிகவும் முக்கிய விழாவாக, இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம், பீகார் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது. துர்கா உட்சவம் என்பது வருடந்தோரும் இந்துக்களால் கொண்டாடப்பட, நவராத்திரியின் ஆறு முதல் பத்தாவது நாள் வரை கொண்டாடப்படுவதோடு, வங்காளத்தின் பெரும் இந்து திருவிழாவாகவும் இது அமைகிறது.

Swaminathan

 தாண்டியா

தாண்டியா

குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான தாண்டியா ராஸ், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பெருமையுடன் போற்றப்படும் ஒரு நடனமாக மாற, இன்று உலகளவில் பிரசித்திப்பெற்று விளங்குகிறது. தாண்டியா ராஸ், குஜராத்தில் நவராத்திரியின்போது ஒன்பது நாட்கள் இரவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.

anax44

கர்பா மற்றும் தாண்டியா

கர்பா மற்றும் தாண்டியா

கர்பா நடனத்தின் ஆதிப்புள்ளியாக குஜராத் காணப்பட, நவராத்திரியின்போது சக்தி தேவியின் சிலை சுற்றி இந்த நடனமானது ஆடப்படுகிறது. தாண்டியா ராஸ், மற்றும் கர்பா ஆகிய இரண்டும் உயரிய ஆற்றல் நடனமாக அமைய, பாரம்பரிய சிகை அலங்காரங்கள், இசை மற்றும் பாடலையும் இவ்விழாவில் நம்மால் பார்க்க முடிகிறது.

GoDakshin

 மைசூரு_தசரா

மைசூரு_தசரா

கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரசித்திப்பெற்ற விழாவான மைசூரு தசரா, மைசூரு நகரத்தின் தெருக்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மைசூரு தசராவின் போது ஜம்போ சவாரி அல்லது யானை சவாரி காணப்பட, மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாக அது அமைவதோடு, சாமூண்டீஸ்வரி தேவி சிலையுடன் இணைத்தும் கொண்டாடப்படுகிறது.

Ananth BS

 குள்ளு தசரா:

குள்ளு தசரா:


குள்ளு தசரா திருவிழா சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவாக அமைய, இமாச்சல பிரதேசத்தின் குள்ளு பள்ளத்தாக்கில் கொண்டாடப்படுகிறது. குள்ளு பள்ளத்தாக்கு எண்ணற்ற சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பிரசித்திப்பெற்று விளங்க, தசரா திருவிழாவை தல்பூர் மைதானில் வெகுவிமர்சையாக கொண்டாடியும் மகிழ்கின்றனர்.

Kondephy

 பஸ்தரின் தசரா

பஸ்தரின் தசரா


சத்தீஸ்கரின் பழங்குடியினரது இதயத்துடிப்பாக பஸ்தர் தசரா காணப்பட, ஜகதால்பூரின் தாந்தேஷ்வரி ஆலயத்தில் இது கொண்டாடப்படுகிறது. 75 நாட்கள் நீண்ட நெடிய திருவிழாவாக கொண்டாடப்படும் பஸ்தர் தசரா, அன்னை தாந்தேஷ்வரி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட, சத்தீஸ்கரின் தனித்துவமிக்க கலாச்சார விழாக்களுள் இதுவும் ஒன்றாக அமைகிறது.

 ராமலீலா – வாரனாசி

ராமலீலா – வாரனாசி

வாரனாசியின் ராமநகரில் ராமலீலா கொண்டாடப்பட இந்தியாவின் முக்கியமான விழாவாக இதன் பாணி அமைகிறது. ராமநகர் ராமலீலா 31 நாட்கள் நடந்திட, கங்கைக்கு அருகாமையில் ராமநகர் கோட்டையிலும் கோலாகலமாக நடக்கிறது.

Ankit Gupta

தசரா – மேளா – கோட்டா

தசரா – மேளா – கோட்டா

பிரசித்திப்பெற்ற விழாவான கோட்டா தசரா மேளா, ராஜஸ்தானில் பெரிதும் கொண்டாடப்பட, கலாச்சாரத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வாகவும் இது அமைகிறது. கோட்டாவின் தசரா திருவிழா, ராஜஸ்தானின் மாபெரும் கலாச்சார திருவிழாவாக அமைய, இந்தியா முழுவதும் பலரும் இவ்விழாவல் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

kota

விஜயதசமி கொண்டாட்டம்

விஜயதசமி கொண்டாட்டம்

ராவணனை கொன்ற ராம பெருமானின் வெற்றியாக விஜயதசமி கொண்டாடப்பட, விஜயதசமியிலிருந்து இருபது நாட்கள் கழித்து ஒளித்திருவிழாவான தீபஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரசித்திப்பெற்ற விழாவாக தசரா திருவிழா காணப்பட, தில்லியில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான விழாவாக அமைவதோடு, ராமலீலா., பிடித்தமான, தனித்தன்மை கொண்ட விழாவாகவும் துர்கா பந்தல் பாணியில் கொண்டாடப்படுகிறது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X