Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? நோ டென்ஷன்! புஷ் நோடிபிகேஷனை உபயோகப் படுத்துங்கள்!

ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? நோ டென்ஷன்! புஷ் நோடிபிகேஷனை உபயோகப் படுத்துங்கள்!

ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்கே அந்த வலி தெரியும் மக்களே! அதுவும் குறிப்பாக பண்டிகை காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு காத்து கிடக்கும் போது நமக்கு பாதி பைத்தியமே பிடித்து விடுகிறது. ஆனால் இனி நீங்கள் கவலையை விடலாம்! ஏனென்றால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் "புஷ் நோடிபிகேஷன்" என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோடிபிகேஷன் நீங்கள் புக் செய்த ரயிலில் உள்ள காலியான பெர்த் குறித்த தகவல்கள் உங்களுக்கு மெசேஜ் ஆக வந்துவிடுமாம்! மிகவும் அருமையாக இருக்கிறது அல்லவா!

coverpic-1670477920.jpg -Properties

பயணிகளை ரிலாக்ஸ் ஆக்கும் புஷ் நோடிபிகேஷன்

ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட பெர்த்களுக்கு, நீங்கள் இனி அலைய வேண்டியதில்லை, ஏஜெண்டிடம் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை அல்லது இணையத்தில் தேட வேண்டியதில்லை.

இந்த நோடிபிகேஷனை க்ளிக் செய்தால் போதும். ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்வீர்கள், உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

புஷ் நோடிபிகேஷன் என்றால் என்ன?

புஷ் நோடிபிகேஷன் என்பது கிளிக் செய்யக்கூடிய பாப்-அப் செய்தியாகும். இது உங்கள் மொபைலில் ஒரு அறிவிப்பைப் போல் வரும் மற்றும் நீங்கள் கிளிக் செய்தவுடன் அது தொடர்பான தகவல் அனைத்தும் உங்களது மொபைலுக்கு வந்து சேரும். காலியான பெர்த்தை கண்டறிந்து நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.

எவற்றை எல்லாம் இந்த நோடிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளலாம்

இந்த நோடிபிகேஷன் மூலம் புதிய ரயில் இயங்கும் செய்தி, காலி பெர்த் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். ரயில் தவிர, விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்கள், ஹோட்டல் மற்றும் கேப் முன்பதிவு மற்றும் பேருந்து முன்பதிவு சேவைகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கேட்டரிங் சேவைகளுடன் டூர் பேக்கேஜ்கள் பற்றிய தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த பிரத்தியேக சேவை முற்றிலும் இலவசமாக பெறலாம்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை உடனடியாகப் பெறுங்கள்

ஒரு குறிப்பிட்ட தேதிக்கு நீங்கள் ஒரு ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் ரயிலில் எந்த இருக்கையும் கிடைக்கவில்லை, உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யாமலே இருக்கிறது.

அந்த வேளையில் ஏதோ ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், உங்கள் மொபைலில் ஒரு அறிவிப்பு வரும், இந்த எஸ்எம்எஸ் ரயில் எண்ணின் தகவல்களையும் கொண்டிருக்கும், அதன் பிறகு நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை உடனடியாக நீங்கள் முன்பதிவு செய்து தொந்தரவின்றி பயணம் செய்யலாம்.

இந்த வசதி மிகவும் அருமையாக இருக்கிறது அல்லவா பயணிகளே! உடனே IRCTC இணையதளத்திற்கு சென்று இந்த நோடிபிகேஷனை ஆன் செய்து கொள்ளுங்கள்!

Read more about: train travel train journey
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X