Search
  • Follow NativePlanet
Share
» »குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! அப்றம் பாருங்க உங்க லைப் தலைகீழா மாறிடும்

குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! அப்றம் பாருங்க உங்க லைப் தலைகீழா மாறிடும்

குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! அப்றம் பாருங்க உங்க லைப் தலைகீழா மாறிடும்

By Udhay

ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா நடைபெறும் இந்த கோவிலுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி சமயத்தில் சென்று வந்தால் போதும், உங்கள் தலையெழுத்து மாறி கோடியில் புரள்வீர்கள் என்கிறார்கள் இந்த கோவிலின் பக்தர்கள். வாருங்கள் நாமும் சென்று வருவோம்.

திருமணம், குழந்தை வரம் போன்ற நன்மைகள் குருவின் பார்வையினால் கிடைக்கும். அதிலும் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தானாம். வாருங்கள் போகலாம்...

 எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்குடித் திட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

வசிஷ்டேஸ்வரர் கோவில் மூலவாராவார். தாய் உலகநாயகி அம்மை

 தல விருட்சமும் தீர்த்தமும்

தல விருட்சமும் தீர்த்தமும்

இந்த கோவிலின் தல விருட்சம் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகும். தல விருட்சம் என்பது அந்தந்த பகுதியில் அதிகம் இருக்கும் மரங்களாகவே இருக்கும். அப்படி இந்த பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகிய மரங்கள் தல விருட்சங்களாக இருக்கின்றன.

 திருவிழா

திருவிழா

இந்த கோவிலில் பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மூன்று முக்கிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் குருப்பெயர்ச்சி நாளில் இங்கு மிகுந்த கூட்டம் வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊருக்கு பக்தர்கள் வருகிறார்கள். திருகார்த்திகையும், மஹாசிவராத்ரியும் இங்கு கொண்டாடப்படும் மற்ற விழாக்கள் ஆகும்.

வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே சூரியன்

வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே சூரியன்

இந்த கோவிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. வருடத்தில் ஆறு நாட்கள் மட்டும் சூரியன் மூலவரின் மீது பட்டு சிறப்பு காட்டுகிறார். அதாவது ஆவணி மாதம் 15,16,17 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 25,26,27 ஆகிய நாட்களிலும் இந்த சூரியன் தன் ஒளியை மூலவரின் மீது பாய்ச்சுகிறது.

 ஆலயத்தில் அதிசயம்

ஆலயத்தில் அதிசயம்


மூலஸ்தானத்தில் மேற்புறமிருந்து தண்ணீர் மூலவருக்கு மேல சரியாக சொட்டுகிறது. இது இந்த கோவில் கட்டியதிலிருந்து நிகழ்கிறதாம். அதிலும் சரியா 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என இத்தனை வருடங்களாக சொட்டிக்கொண்டிருப்பது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

 குருவுக்கு தனி சன்னதி

குருவுக்கு தனி சன்னதி


பெரும்பாலும் வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு, இந்த கோவிலில் குருவுக்கு தனிச் சன்னதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும், சிவனுக்கும், அம்பாளுக்கும் நடிவில் நின்ற கோலத்தில் அவர் இருப்பது எங்கேயும் காணமுடியாத ஒன்று.

சோழர் கட்டிய கோவில்

சோழர் கட்டிய கோவில்

சோழர்கள் பல்வேறு வானியல் ஆராய்ச்சிகளை கருத்தில் கொண்டு, வியாழன் கிரகம் பாதையில் ஒளி வீசும் என்பதை சரியாக கணித்து இந்த இடத்தில் கோவிலை கட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.

குருப்பெயர்ச்சியில் வியாழன் நகர்வை சரியாகச் செய்யும் இந்த கோவிலுக்கு செல்வது, குருவின் பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைக்கு நிகரானது. கூடுதல் நன்மையை ஊட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

 வேறெங்கும் இல்லாத அதிசயம்

வேறெங்கும் இல்லாத அதிசயம்


சிவனின் தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற 274 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் நித்யாபிஷேகம் வேற எந்த கோவிலிலும் நடைபெறாத ஒன்று. இதை எங்கேயும் காணமுடியாது.

 நடைதிறக்கும் நேரம்

நடைதிறக்கும் நேரம்


இந்த கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

 முகவரி

முகவரி

வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர் - 206

 பெண்களுக்கு திருமண தோஷம்

பெண்களுக்கு திருமண தோஷம்


திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மங்காம்பிகையை வழிபடுங்கள்.

B Jambulingam

 வசிஷ்டரின் ராஜகுரு

வசிஷ்டரின் ராஜகுரு

குரு பகவானுக்கு தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும், வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான். இதனாலேயே இங்கு குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

தஞ்சாவூரிலிருந்து பண்ருட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 36 வழியாக சென்றால் 5 கிமீ தூரத்தில் மணக்கரும்பை - திருகருகாவூர் சாலை குறுக்கிடும். அதிலிருந்து வலது புறமாக மாநில நெடுஞ்சாலை எண் 720ல் பயணித்தால், மொத்தம் 10 கிமீ தூரத்தில் இந்த கோவிலை அடையலாம்.

Read more about: travel temple thanjavur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X