Search
  • Follow NativePlanet
Share
» »12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்!

12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்!

பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திருப்பதியில் கடந்த 12 ஆண்டுகள் கழித்து இன்று துவங்கியுள்ள ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை தரிசிக்கச் செல்வோமா ?.

திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஏழுமலையானை தினந்தோறும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் தரிசிப்பது வழக்கமான ஒன்று. இந்தியாவில் ஏன் உலகளவில் பணக்காரக் கோவில்களின் பட்டியலில் இந்த திருப்பதிக் கோவிலும் ஒன்று. கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் உள்ளிட்ட விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். இங்கு நடைபெரும் ஒவ்வொரு பூஜையும் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. அப்படியிருக்க கடந்த 12 ஆண்டுகள் கழித்து இன்று துவங்கியுள்ள திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகத்தை தரிசிக்கச் செல்வோமா ?.

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்


திருமலை என்னும் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இம்மலையின் தோற்றம் கூட திருமாளின் முகம் போன்ற வடிவம் கொண்டுள்ளதான் என்னவோ இப்பெயரைப் பெற்றுள்ளது எனலாம். திராவிட பாரம்பரிய கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

daimalu

கோவிலை மூடிய அரசன்

கோவிலை மூடிய அரசன்


இக்கோவிலில் முன்னொரு காலத்தில் 12 பேர் தீய செயல்களை செய்ததன் விளைவாக கோவிலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசன் அவர்களை தண்டித்து கோவிலையும் 12 ஆண்டுகள் மூடிவிட்டதாக வரலாறு. அதன் விளைவாகவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Abhimude12

சிறப்பு சூரண மருந்து

சிறப்பு சூரண மருந்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த வருடம் பல சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அஷ்ட பந்தனம் என்னும் சூரண மருந்து கோவில் பீடங்கள் முழுவதும் சாத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் மூலவர் ஏழுமலையான் கருவறை இருக்கும் தங்க விமானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கிறது.

rajaraman sundaram

வெள்ளி திருவாட்சி

வெள்ளி திருவாட்சி


திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிகராக, கோவிலில் ஜொலிரும் தங்க கட்டமைப்பைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். இக்கோவிலில் காணப்படும் பிரம்மாண்ட தங்க விமானம் புதிதாகக் காண்போரை திகைத்திடச் செய்திடும். இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமானத்தில் மகர தோரணம் என்னும் வெள்ளி திருவாட்சி புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

KARTHEEKA

கும்பாபிஷேக சிறப்பு

கும்பாபிஷேக சிறப்பு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் துவக்கத்தில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் துவங்கப்படுகிறது. காணக்கிடைக்காத இந்த தரிசனம் கோடி புன்னியங்களுக்கு ஈடாகும். இதனைத் தொடர்ந்து நடைபெறும், ஏழுமலையானுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் சொல்லில் அடங்காத அம்சம்.

Brahmostavam

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னைக்கு மிக அருகில் ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சென்னை மாநகர விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக இரயில் சேவையும் உள்ளது. மேலும், மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருப்பதியை சென்றடைய பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Belur Ashok

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X