Search
  • Follow NativePlanet
Share
» »புகழ் பெற்ற கோவில் நகரமான இந்த ஊருக்கு வெயில் காலத்தில் மட்டும்தான் போகமுடியும்!! ஏன் தெரியுமா?

புகழ் பெற்ற கோவில் நகரமான இந்த ஊருக்கு வெயில் காலத்தில் மட்டும்தான் போகமுடியும்!! ஏன் தெரியுமா?

புகழ் பெற்ற கோவில் நகரமான இந்த ஊருக்கு வெயில் காலத்தில் மட்டும்தான் போகமுடியும்!! ஏன் தெரியுமா?

By Bala Karthik

உத்தரகாண்டின் புனித நகரமான குப்ட்காஷிக்கு பக்தர்கள் பலர் வந்து செல்ல, பல்வேறு பழங்காலத்து ஆலயத்தையும் இது வீடாக கொண்டு மகாபாரதத்தின் ஒரு அங்கமாகவும் நம்பப்படுகிறது. உண்மையாக, இவ்விடத்தின் பெயரானது பாண்டவர்களால் வழங்கப்பட, இதிகாசமான மகாபாரதத்தின் ஹீரோக்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானின் புனிதமான ஆலயத்துக்கு கீழ் 47 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் யாத்ரீக தளமான குப்ட்காஷி, கடல் மட்டத்திலிருந்து 1319 மீட்டர் உயரத்திலுள்ள கேதர்நாத்தையும் கொண்டிருக்கிறது. மிக சிறந்த மத உணர்வுகளை கொண்ட இந்த யாத்ரீகத்தளமானது, இரு சின்னமான கோயில்களை குப்ட்காஷியில் கொண்டிருக்க, இந்த இடத்தை காண வரும் பக்தர்களை அது ஈர்த்திட - சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அர்த்தநாரிஷ்வரர் ஆலயம் மற்றும் விஷ்வநாத் ஆலயத்தையும் கொண்டிருக்கிறது.

கேதார்நாத்தை காண வரும் மக்கள், தங்களுடைய பயணத்துக்கான இடைவெளியாக குப்ட்காஷியை நினைக்கின்றனர். இந்த கண் கவரும் நிலப்பரப்பு பனி மூடிய சிகரத்தையும், பசுமையான பச்சை பசேலென்னும் சூழலையும், அதீத கலாச்சார பாரம்பரியத்தையும், அற்புதமான கால நிலையையும் கொண்டு சௌகாம்பா தொடர்ச்சியில் காண, அனைத்து விதமான பயண ஆர்வலர்களுக்கும் இது ஆக சிறந்த விடுமுறை இலக்காகவும் அமைகிறது.

குப்ட்காஷியை நாம் காண சிறந்த காலங்கள்:

குப்ட்காஷியை நாம் காண சிறந்த காலங்கள்:

மார்ச் முதல் ஜூன் இடைப்பட்ட கோடைக்காலத்திலும், செப்டம்பர் முதல் நவம்பர் இடைப்பட்ட காலத்திலுமென குப்ட்காஷியை நாம் காண ஏதுவாக நம் மனதின் உச்சத்தை எண்ணங்கள் எட்டுகிறது. கோடைக்காலமானது சவுகரியமாகவும், இனிமையான கால நிலையுடனும் அமைய; குளிர்க்காலத்தில் வெப்ப நிலையானது பூஜ்ஜியத்தையும் டிகிரி செல்சியஸ் அளவில் எட்டுகிறது.

குளிர்க்காலத்தில், அனைத்து பயணம் மற்றும் ஏற்ற பாதைகள் பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டு இருக்கிறது. இந்த ஆலயமானது இரண்டாம் நாளிலிருந்து தீபாவளி பின்னர் வரை மூடப்பட்டிருக்க, மே மாதத்தில் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், விமானமும், இரயில்களும் அதீத அடர்த்தி பனியால் கால தாமதமாக வர, அதிக பனிப்பொழிவும் குளிர்க்காலத்தில் காணப்படுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பருவமழையானது குப்ட்காஷியில் காணப்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஆனது ஏற்பட, சுற்றுலா பயணிகள் இந்த சமயங்களில் குப்ட்காஷியை காண தவிர்த்திடுகின்றனர்.

 குப்ட்காஷியை நாம் அடைவது எப்படி?

குப்ட்காஷியை நாம் அடைவது எப்படி?

இவ்விடத்தை காற்று, இரயில் மற்றும் சாலையின் மூலமாக தில்லியின் முக்கிய நிலையத்திலிருந்து நம்மால் அடைய முடிகிறது.


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

அருகாமையில் அமைந்திருக்கும் விமான நிலையமாக தோராயமாக 190 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஜாலி கிராண்ட் விமான நிலையமானது அமைகிறது. மீதமிருக்கும் தூரத்தை சாலை அல்லது கார் அல்லது பேருந்து வழியாக நாம் கடக்க வேண்டும்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

அருகாமையில் காணப்படும் இரயில் நிலையமாக குப்ட்காஷி அருகில் தோராயமாக 168 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ரிஷிகேஷ் இரயில் நிலையம் அமைகிறது. இந்த நிலையத்தின் வெளிப்புறத்திலிருந்து பேருந்துகளும், கார்களும் காணப்பட குப்ட்காஷி வரையில் இருக்கும் மீத தூரத்தை நம்மால் கடக்கவும் முடிகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

இங்கே சில பேருந்து மற்றும் டாக்சி சேவைகளானது தேசிய நெடுஞ்சாலை 109 இன் வழியாக காணப்படுகிறது.

குப்ட்காஷி உள் மற்றும் சுற்று புறங்களில் காணப்படும் சுற்றுலா ஈர்ப்புகள்:

குப்ட்காஷி உள் மற்றும் சுற்று புறங்களில் காணப்படும் சுற்றுலா ஈர்ப்புகள்:

இங்கே இரு சின்னமான ஆலயங்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட - அவை விஷ்வநாத் ஆலயம் மற்றும் அர்த்தனாரீஷ்வர ஆலயம் எனவும் அழைக்கப்பட - இவை குப்ட்காஷியின் நட்சத்திர ஈர்ப்பாகவும் விளங்குகிறது. இங்கே காணப்படும் கட்டிடக்கலையானது நம்மை வெகுவாக ஈர்த்திட, இவை கல் மற்றும் மரம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் மாறாக இதன் சில பயணத்திலும், கேதார்நாத் ஆலயத்தின் ஏற்றம் வரையில் என ஏற, 13 மற்றும் 25 கிலோமீட்டரில் காணப்படும் மத்தியேஷ்வர் ஆலயத்தையும் குப்ட்காஷியிலிருந்து நாம் அடையலாம். இந்த சவாரியானது கொஞ்சம் சுவாரஸ்யத்தை அதிகரித்திட, ஹெலிகாப்டர் மூலம் குப்ட்காஷியிலிருந்து அனுபவத்தை தரக்கூடிய நகரத்தின் வான எல்லையை ஒட்டு மொத்தமாக நம்மால் காணவும் முடிகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X