Search
  • Follow NativePlanet
Share
» »சல்மான் கான் சுட்டுக்கொன்ற அரிய வகை மான்கள் எங்கே இருக்கு தெரியுமா?

சல்மான் கான் சுட்டுக்கொன்ற அரிய வகை மான்கள் எங்கே இருக்கு தெரியுமா?

சல்மான் கான் சுட்டுக்கொன்ற அரிய வகை மான்கள் வாழும் காடுகள் எவை தெரியுமா?

By Udhaya

இந்தியாவில் பல்வேறு வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பல்வேறு வகையான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அழிந்துவரும் விலங்குகளின் பாதுகாப்புக்காக நிறைய காட்டு சரணாலயங்கள் காணப்படுகின்றன. அரிய வகை இனங்களுள் ஒன்றான பிளாக்பக் வகை மான்கள் பாதுகாக்கப்பட்டு வரும் காடுகளைப் பற்றி இந்த பதிவில் நாம் காண்போம்.

 வெளாவடார் ப்ளாக் பக் தேசியப் பூங்கா

வெளாவடார் ப்ளாக் பக் தேசியப் பூங்கா

குஜராத் மாகாணத்தில், பாவ்நகர் மாவட்டத்தில், சௌராஷ்ட்ராவில் உள்ள பாள் பகுதியில் அமைந்திருக்கிறது வெளாவடார் தேசியப் பூங்கா. பாவ்நகர் மகராஜாவின் வேட்டைக்காடாக இருந்த இந்த இடத்தில், 1976 ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. நரி, குள்ள நரி, கட்டுப்பூனை போன்ற பல விலங்கினங்கள் இங்கு உள்ளன.

Chinmayisk

தல் சாப்பர் சரணாலயம்

தல் சாப்பர் சரணாலயம்


தல் சாப்பர் சரணாலயம் லாட்னூன் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் இந்தியாவின் மிக அழகான மான் வகையை சேர்ந்த கருப்பு வெளிமான்களுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு செழுமையாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்கள் சரணாலயத்தின் அழகுக்கு அழகு சேர்க்க கூடியவை. மேலும் இங்கு அவ்வப்போது தோன்றி மறையும் பருவ கால குளங்கள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு நீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.அதோடு பழுப்பு நிற கழுகுகள், குறுகிய காலுடைய கழுகுகள், சிட்டுக்குருவிகள், முகட்டு வானம்பாடிகள், பச்சை வண்ண தேனீ தின்னிகள், பழுப்பு நிற புறாக்கள், கருப்பு நாரைகள், யுரேசியா பகுதிகளிலிருந்து அரிய பறவை இனமான இள நாரைகள் புலம்பெயர்ந்து பெரும்கூட்டமாக வந்து செல்கின்றன. இவைதவிர பாலைவன நரிகள், பாலைவன பூனைகள், கெளதாரிகள், சதுப்புநிலக் கோழிகள் உள்ளிட்ட விலங்குகளையும், பறவைகளையும் நீங்கள் இந்த சரணாலயத்தில் பார்க்கலாம்.

Koshy Koshy

ரனேபன்னூர் மான்கள் பூங்கா

ரனேபன்னூர் மான்கள் பூங்கா

119 சகிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடம் மிகவும் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வனவிலங்கு காப்பகம். இங்கு மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவிலிருந்து 301கிமீ தூரத்தில் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பூங்கா. ரனபென்னூர் நகரத்திலிருந்து 8கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

Tejas054

ஜெயமங்கலி பூங்கா

ஜெயமங்கலி பூங்கா

மான்களுக்கென்று பாதுகாப்பான காடு அமைக்கப்பட்டு அங்கு பிளாக் பக் வகை மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவும் பெங்களூருவிலிருந்து செல்லும் வகையில்தான் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் மதுகிரி அருகில் அமைந்துள்ள இந்த காடுகள் ஆந்திர மாநிலத்தின் இந்துப்பூர் நகரத்திலிருந்து 20கிமீ தூரம் ஆகும்.

குறைந்த பட்சம் 8 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 43டிகிரி செல்சியஸ் வரை இங்கு வானிலை தட்பவெப்பம் காணப்படும்.

Chesano.

ரெஹக்குரி பிளாக்பக் சரணாலயம்

ரெஹக்குரி பிளாக்பக் சரணாலயம்

மகராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா மான்களுக்காக அதுவும் பிளாக்பக் வகை மான்களுக்காக அமைக்கப்பட்ட சரணாலயமாகும். இங்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இந்த பூங்கா பிளாக்பக் மான்களுக்காக உலக புகழ் பெற்றதாகும்.

Chesano

 வல்லநாடு காட்டுயிர் பூங்கா

வல்லநாடு காட்டுயிர் பூங்கா

தமிழ்நாட்டில் பிளாக்பக் வகை மான்கள் அதிகம் காணப்படும் பூங்கா இதுதான். வல்லநாடு காட்டுயிர் பூங்கா என்று அழைக்கப்படும் இது தென்னிந்தியாவில் புள்ளி மான்கள் அதிகம் காணப்படும் இடமும் கூட..

Sahoo

 ரொல்லப்பாடு காட்டுயிர் பூங்கா

ரொல்லப்பாடு காட்டுயிர் பூங்கா

ஆந்திர மாநிலம் கர்னூலில் அமைந்துள்ளது இந்த ரொல்லப்பாடு சரணாலயம். இங்கு பிளாக்பக் வகை மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் பலவகை விலங்குகளும் இருக்கின்றன. தென்னிந்தியாவில் அதிக அளவு பிளாக்பக் வகை மான்கள் இங்குதான் காணப்படுகின்றன.

Sahoo

எட்டூர்நகரம் காட்டுயிர் சரணாலயம்

எட்டூர்நகரம் காட்டுயிர் சரணாலயம்

தெலங்கானா மாநிலத்தில் எட்டூர்நகரம் எனும் கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள சிறிய காடு இதுவாகும். இங்கு பல்வேறு வகை செடி, கொடிகளும், உயிரினங்களும் காணப்படுகின்றன. எண்ணற்ற மரங்கள் இருப்பதால், இங்கு மான்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக காணப்படுகிறது. கோல்டன் ஜாக்கல்ஸ், தோலே, ஊல்ப் போன்ற விலங்குகளும் 6 வகையான மான் இனங்களும் காணப்படுகின்றன.

Adityamadhav83

நவ்ராதேகி காட்டுயிர் சரணாலயம்

நவ்ராதேகி காட்டுயிர் சரணாலயம்


மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பிளாக்பக் வகை மான்களுக்காக பெயர் பெற்றது. மத்தியபிரதேசத்தின் மிகப் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள நவ்ராதேகி இங்கு வாழும் மான்களுக்கு மட்டுமல்ல, சிறுத்தைகளுக்கும் புகழ்வாய்ந்தது. நரிகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

Rajesh mpt

 கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்

நாகப்பட்டினம் அடுத்த கோடிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் பிளாக்பக் வகை மான்களுடன் பல விலங்குகளை கொண்டுள்ளது. பிளம்மிங் பறவைகள், பாட்டில்மூக்கு டால்பின் உள்ளிட்ட பல விலங்குகள் காணப்படுகின்றன.

Raja

Read more about: travel forest trekking india summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X