Search
  • Follow NativePlanet
Share
» »தேனிலவைத் தித்திப்பாக்க திகட்டாத டாப் 10 இடங்கள்!!!

தேனிலவைத் தித்திப்பாக்க திகட்டாத டாப் 10 இடங்கள்!!!

By Staff

இன்றைய காலகட்டத்தில் திருமணம் நிச்சியக்கப்பட்ட பின்னரே தேனிலவு திட்டம் குறித்து தங்கள் துணையுடன் ஆலோசிப்பது சகஜம் ஆகிவிட்டது. ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத இன்ப தருணமாக தேனிலவுப் பயணம் அமையும். தேனிலவுப் பயணம் இனிதாக அமைய சரியான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். கூடுதலாக சரியான திட்டமிடுதல் சிறந்த அனுபவங்களை தரும்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி போன்ற ஜில்லிட வைக்கும் தேனிலவு இடங்கள் தான் நன்கு தெரியும். அதே சமயம் புதுமண தம்பதியினர் தங்கள் தேனிலவைத் தித்திப்பாக்க, தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் பல ஹனிமூன் சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அவற்றில் டாப் 10 இடங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

1. வர்க்கலா:

1. வர்க்கலா:

கேரளாவில் புதுமண தம்பதிகள் தேனிலவைக் கொண்டாட எழில் கொஞ்சும் பல கடற்கரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வர்க்கலா. போட்டிங், காஃபி ஷாப்-கள், சூரியன் அஸ்தமனத்தின் காட்சி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உள்ளன. மேலும் பொருட்கள் வாங்க வெள்ளி நகைகள், உடைகள், ஆபரணங்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன.

Photo Courtesy: Podman123

1. வர்க்கலா:

1. வர்க்கலா:

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும், ஷிவகிரி ரயில் நிலையமும் வர்க்கலாவுக்கு அருகே உள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமம் இல்லாமல் இந்த இடத்தை அடையலாம். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடம்பர ஹோட்டல்களும், குறைந்த கட்டணத்தில் தங்கக் கூடிய ஹோட்டல்களும் நிறைய உள்ளன.

Photo Courtesy: Koshy Koshy

2. பெக்கல் பீச்:

2. பெக்கல் பீச்:

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் வரும் 'உயிரே, உயிரே' என்ற அற்புதமான பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் தான் இந்த பெக்கல். இங்கு கடற்கரையும் அதனை ஒட்டியே கேரளாவில் இருக்கும் சிறந்த புராதன கோட்டை என்று சொல்லப்படும் பெக்கல் கோட்டையும் அமைந்திருக்கிறது.

Photo Courtesy: Sreejith K

2. பெக்கல் பீச்:

2. பெக்கல் பீச்:

இந்தக் கடற்க்கரையில் நீச்சலடிக்க ஏற்ற ஆழத்தில் கடல் இருப்பதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கேரளா சுற்றுலாத் துறையால் நன்கு பராமரிக்கப்படுவதால் இது மிக சுத்தமாகவும் உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இங்கு நல்ல தட்பவெட்பம் இருப்பதால் இங்கு வர ஏற்ற காலம் அது. கசர்கொட் ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இக்கடற்கரை அமைந்திருக்கிறது. தேனிலவு தம்பதிகள் தங்குவதற்கு அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறைய ஓட்டல்கள் உள்ளன.

Photo Courtesy: Hari Prasad Nadig

3. குமரகம்:

3. குமரகம்:

தேனிலவு தம்பதிகளுக்கான சொர்க்கபூமி என்று அறியப்படும் இடமாக குமரகம் உள்ளது. கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த் தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

Photo Courtesy: utpal.

3. குமரகம்:

3. குமரகம்:

இங்கு வரும் தேனிலவு தம்பதிகள் காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்கள், தென்னந்தோப்புகள், நெல்வயல்களுக்கு இடையே தங்கள் துணையுடன் நேரத்தை கழிக்கலாம். மழைக்காலம் முடிந்த பிறகு இப்பகுதி முழுதுமே பசுமையின் ஜொலிப்பில் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் குமரகம் அருகில் உள்ளன.

Photo Courtesy: Shabbir Siraj

4. கோவளம்:

4. கோவளம்:

தென் இந்தியாவின் சிறந்த தேனிலவு மையங்களுள் கேரளாவில் உள்ள மற்றொரு அழகிய கடற்கரை தான் கோவளம். புதுமண தம்பதிகள் சூரியன் மறையும் அழகுக்காட்சியை ரசித்தவாறு தங்கள் துணையுடன் கலங்கரை விளக்கம் பகுதியில் நடந்து செல்வது சுகானுபவம். மாலை நேரங்களில் மெழுவர்த்தியின் ஒளியில் அமர்ந்தவாறு தங்கள் துணையுடன் நேரத்தை கழிக்கலாம்.

படம் : Ryan

4. கோவளம்:

4. கோவளம்:

சுவையான கடல் உணவு வகைகளை இங்கு வாங்கி ருசிக்கலாம். கோவளத்திற்கு அருகே திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும், திருவனந்தபுரம் ரயில் நிலையமும் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.

படம் : Kerala Tourism

5. ஆலப்புழா:

5. ஆலப்புழா:

படகு வீடுகளுக்கு பிரபலமான இடமாக கருதப்படுவது தான் கேரளாவில் உள்ள இந்த ஆலப்புழா. திருமண மான புது தம்பதிகள் தங்கள் தேனிலவு கொண்டாடுவதற்கு இங்கு அதிகமாக வருகை தருகின்றனர். இயற்கை சூழ்ந்த பேக்வாட்டரில் மிதக்கும் படகு வீடுகளில் பகலிலும், இரவிலும் பொழுதை அனுபவிக்கலாம். ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்த கடற்கரை நீண்டு கிடக்கிறது.

படம் : Sarath Kuchi

6. தேக்கடி:

6. தேக்கடி:

கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் காட்சியளிக்கிறது தேக்கடி . இதமான குளுமையான சூழல் தவழும் இந்த அழகுப்பிரதேசமானது பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பணப்பயிர்த் தோட்டங்களுடன் காட்சியளிக்கிறது.

Photo Courtesy: Appaiah

6. தேக்கடி:

6. தேக்கடி:

தேயிலை தோட்டங்கள் வழியாக புதுமண தம்பதிகள் ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். இந்தியாவிலேயே மிகப்பெரிய வன உயிரியல் சரணாலயம் ஆன பெரியார் வன உயிரியல் சரணாலயம் இங்கு தான் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்றவாறு பல இடங்கள் இங்கு உள்ளன.

Photo Courtesy : Rossipaulo

7. வயநாடு:

7. வயநாடு:

கேரளாவில் முழுக்க முழுக்க இயற்கை சூழ்ந்த அடர்த்தியான வனப்ப குதியாக காட்சியளிக்கும் இடம் தான் வயநாடு. மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை' என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது.

படம் : Sarath Kuchi

7. வயநாடு:

7. வயநாடு:

புதுமணத்தம்பதிகள் இயற்கை எழில் கொஞ்சும் தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். தேனிலவுக்கு உகந்த இடமாக இது அறியப்படுகிறது. மேலும் டிரெக்கிங் செல்ல பல இடங்களும் இங்கு உண்டு.

படம் : Chandru

8. ருஷிக்கொண்டா:

8. ருஷிக்கொண்டா:

ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைகளால் அமைந்த அழகிய கடற்கரை தான் ருஷிக்கொண்டா. அமைதியை விரும்பும் புதுமணத் தம்பதிகள் தங்கள் துணையுடன் கைக்கோர்த்து இந்த கடற்கரையில் உலாவுவது சுகானுபவம். மேலும் இந்த கடலில் ஜோடிகள் குளித்தும் மகிழலாம். இதன் அருகில் விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையமும், விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் உள்ளன.

Photo Courtesy: Sankara Subramanian

9. கூர்க்:

9. கூர்க்:

தேனிலவு தம்பதிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் அமைந்துள்ளது.

Photo Courtesy: Aditya Patawari

9. கூர்க்:

9. கூர்க்:

ஏராளமான காபி தோட்டங்கள் இங்கு உள்ளன. தம்பதிகள் தங்கள் பயணம் த்ரில் அனுபவத்துடன் இருக்க வேண்டுமானால் இங்கு தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஓர் இரவு தங்குங்கள். மேலும் டிரக்கிங் , பரிசல் பயணம், அபி அருவியில் குளிப்பது,அரிய வகை பறவைகள் மற்றும் தாவரங்களைப் புகைப்படங்கள் எடுத்து ரசிக்கலாம். விருந்தினரை உபசரிப்பது, நட்பாகப் பழகுவுது ஆகியவற்றுக்கு கூர்க் மக்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களின் வீடுகளில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கலாம்.

Photo Courtesy: Ananth BS

10. கபினி:

10. கபினி:

வனம் சூழ்ந்த அழகான தேனிலவுப் பிரதேசமாக கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ளது தான் இந்த கபினி தேனிலவுப் பிரதேசம். த்ரில்லான பயணம் போக ஆசைப்படுபவர்கள் பந்திப்பூர் வனப்பகுதியின் அழகை ரசித்துக்கொண்டே உங்கள் துணையுடன் நேரத்தை கழிக்கலாம்.

Photo Courtesy: Vinoth Chandar

10. கபினி:

10. கபினி:

புதுமணத் தம்பதிகள் தோளில் கைப் போட்டுக்கொண்டு கபினி ஆற்றங்கரையில் நடந்து செல்வது ஆனந்தமான அனுபவம். இங்கு குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான ஓட்டல்கள் மிகக்குறைவு. நாள் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ரூம்களே அதிகம்.

Photo Courtesy: Rajesh Balakrishnan

Read more about: honeymoon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more