Search
  • Follow NativePlanet
Share
» »டாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..!

டாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..!

நம் வாழ்நாளில், வெகு தூரம் பயணிக்கையில் எத்தனையோ நெடுஞ்சாலையைக் கடந்திருப்போம். ஆனால், அதிசிறந்த மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரைடுக்கு தகுந்த சாலைகள் எது என தெரியுமா ?

இந்தியா முழுவதும் சுமார் 3.314 மில்லியன் கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் படர்ந்துள்ளன. இது உலகின் மூன்றாவது பெரிய சாலை இணைப்பாகும்.
எக்ஸ்பிரஸ்வே மற்றும் நெடுஞ்சாலைகள் சாலை போக்குவரத்து மிகவும் விரைவாகவும், இழக்கை எளிதில் அடையக் கூடிய வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிவேக பயணத்திற்கான எக்ஸ்பிரஸ் சாலைகள் இந்தியாவில் 13 இடங்களில் சுமார் 683.36 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. மேலும், பதினைந்து புதிய எக்ஸ்பிரஸ்வே கட்டுமானத்திற்கு தற்போது திட்டமிடலும் துவங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு என 2022-ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 18,637 கிலோ மீட்டருக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஒரு பெரிய திட்டம் திட்டமிட்டுள்ளது. சரி, தற்போது நாட்டிலுள்ள அதிசிறந்த மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரைடுக்கு தகுந்த சாலைகள் எது என பார்க்கலாம் வாங்க.

அகமதாபாத் வதோதரா எக்ஸ்பிரஸ்வே

அகமதாபாத் வதோதரா எக்ஸ்பிரஸ்வே


அகமதாபாத் வதோதரா எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலை 1 குஜராத்தில் 95 கிலோ மீட்டர் தொலைவில் அகமதாபாத் மற்றும் பரோடாவை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 8-யைக் காட்டிலும் இந்த சாலையில் பயணிக்கையில் 2.5 மணி நேரத்திலிருந்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பயண நேரத்தை குறைக்கிறது. 2004யில் திறக்கப்பட்ட இச்சாலையின் ஒவ்வொரு பகுதியிலும் வாகனங்கள் செல்ல இரண்டு பாதையும், நடந்து செல்ல சேவைப் பாதையும் உள்ளது.

KuwarOnline

துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே

துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே


டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் வழியாக டெல்லி- கொல்கத்தா சாலையில் பொதுவாக குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலை 2. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை 91 மற்றும் ஒன்றுடன் இணைந்து ஹிஸ்டாரிக்கல் கிராண்ட் டிரங்க் சாலையில் ஒரு பெரிய பகுதியாக இணைந்துள்ளது.

RISHABHNAGPAL20

அம்பலா சண்டிகர் எக்ஸ்பிரஸ்வே

அம்பலா சண்டிகர் எக்ஸ்பிரஸ்வே


அம்பலா சண்டிகர் எக்ஸ்பிரஸ்வே அம்பலா- சண்டிகர் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமார் 35 கிலோ மீட்டருக்கு நீழ்கிறது. இது 30 மாதங்களில் 298 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டதாகும். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இச்சாலை செயல்பட்டு வருகிறது.

Kaushal Karkhanis

சென்னை பைபாஸ்

சென்னை பைபாஸ்


சென்னை பைபாஸ் என்பது சென்னை முழுவதும் சுமார் நான்கு ரேடியல் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை 32 கிலோ மீட்டர் தூரத்திலேயே இணைக்கும் ஒரு முழு- அணுகல் கட்டுப்பாட்டு சாலை ஆகும். இச்சாலையை கட்டமைக்க மட்டும் சுமார் 405 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது, சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலையின் பெரும்பகுதி போக்குவரத்து நெரிசலை இது குறைக்கிறது.

Simply CVR

நொய்டா- கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே

நொய்டா- கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே


நொய்டா- கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே என்பது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இருந்து கிரேட்டர் நொய்டாவை இணைக்கும் ஆறு வழிப் பாதை கொண்ட நெடுஞ்சாலை ஆகும். சுமார் 25 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள இச்சாலையை கட்டமைக்க 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

Amit.pratap1988

ஹைதராபாத் விரிவு எக்ஸ்பிரஸ்வே

ஹைதராபாத் விரிவு எக்ஸ்பிரஸ்வே


ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் மெஹிடபத்னம் நகரத்துடன் இணைக்கும் விரிவுபடுத்தப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ்வே 2009 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயண்பாட்டிற்கு வந்தது. சைக்கிள் ஓட்டுனர்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vairavamoorthy

ஓசூர் எக்ஸ்பிரஸ்வே

ஓசூர் எக்ஸ்பிரஸ்வே


கர்நாடகாவில் அமைந்துள்ள பெங்களூர் சுங்கச்சாவடியுடன் இணைந்த நெடுஞ்சாலை பெங்களூர் எலிவேட்டட் டோல்வேஸ் லிமிட்டெட்டின் ஒரு பகுதியாகும். 2006 ஆம் ஆண்டில் பயண்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இது பெங்களூரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் முக்கி சாலையாக உள்ளது.

Rsrikanth05

கோனா எக்ஸ்பிரஸ்வே

கோனா எக்ஸ்பிரஸ்வே


மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 117 ஹௌரா மாவட்டத்தில் உள்ள நிப்ரா நகரத்திற்கு அருகில் கோனாவில் வடமேற்கு பகுதியுடன் இணைகிறது. மேலும், கோல்டன் குவாங்ரங்கில் திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட இந்த நெடுஞ்சாலையானது ஹவுரா, கொல்கத்தா, டயமண்ட் ஹார்பர், குல்பி மற்றும் பக்காலி ஆகிய இடங்களை தேசிய நெடுஞ்சாலை 2 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 6 உடன் இணைக்கிறது.

DasAritra

மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே

மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே


யஷ்வந்த்ராவ் சாவன் எக்ஸ்பிரஸ்வே இந்தியாவின் முதல் ஆறு வழி கான்கிரீட் நெடுஞ்சாலை ஆகும். அதிவேக வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் உள்ள இச்சாலை மும்பைவை புனேவுடன் இணைக்கிறது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும பிற சாலைகளைக் காட்டிலும் இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பயண நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்கிறது.

Kprateek88

அலகாபாத் பைபாஸ்

அலகாபாத் பைபாஸ்


சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்டுள்ள அலகாபாத் நெடுஞ்சாலை பிற மாநிலங்களுடன் இணையும் நெடுஞ்சாலையுடன் ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளை இந்த சாலை எளிதில் இணைக்கிறது.

Vroomtrapit

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X