Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்

உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்

இந்திய - நேபாள எல்லை மற்றும் இமய மலையை ஒட்டி அமைந்து உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா தளமாக புகழ் பெற்று விளங்குகிறது. தேவ

By Udhaya

இந்திய - நேபாள எல்லை மற்றும் இமய மலையை ஒட்டி அமைந்து உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா தளமாக புகழ் பெற்று விளங்குகிறது. தேவர்களின் பூமி என்றும் பூலோக சொர்க்கம் என்றும் அழைக்கப்படும் இந்த எழில் நிறைந்த மாநிலத்தை இந்தியர் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 13 மாவட்டங்களை கொண்டுள்ள இந்த மாநிலமானது வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இரண்டு பெரிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குமோன் மற்றும் கார்வால் என்ற பெயரில் இந்த 2 மண்டலங்களும் அழைக்கப்படுகின்றன. வரலாற்றுக்காலத்தில் ஆண்ட குமோன் மற்றும் கார்வால் என்ற இரண்டு முக்கியமான ராஜவம்சங்களின் அடிப்படையில் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன. சரி எல்லாவற்றுக்கும் மேலாக உத்தரகண்ட் பயணிக்கும் சுற்றுலாப் பிரியர்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தார்சூலா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

தார்சூலா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

எங்கே உள்ளது - உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கார் மாவட்டத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

பித்தோர்கார் நகரத்திலிருந்து 90 கிமீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

எப்படி செல்வது - புது டெல்லி விமான நிலையத்திலிருந்து பட்னாகர் விமான நிலையத்துக்கு செல்லும் வகையில் விமானங்கள் உள்ளன. அங்கிருந்து வாடகை வண்டிகளில் தார்சூலாவுக்கு பயணிக்கமுடியும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் - டானக்பூர்

சிறந்த பருவம் - தார்சூலாவுக்கு செல்ல சிறந்த பருவம் குளிர் காலம் தான். என்றாலும் கோடை விடுமுறை நாட்களிலும் மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

முக்கிய இடங்கள் - சிர்க்கிலா அணைக்கட்டு, காளி ஆறு, ஆஸ்காட் மான்கள் சரணாலயம், ஓம் பர்வதம்

சிர்க்கிலா அணைக்கட்டு - தார்சூலாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள நீர்மின் சக்தி திட்டப் பகுதிதான் சிர்கிலா அணைக்கட்டாகும். காளி நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் இந்த அணைக்கட்டு 1500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள இடமாகும். இந்த அணைக்கட்டுடன், ஒரு ஏரி இணையும் அற்புத காட்சியையும் சுற்றுலாப் பயணிகள் இங்கே காண முடியும். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும புகழ் பெற்ற இடமாகும்.

காளி ஆறு - மாபெரும் இமயமலையில் உள்ள கலாபானி என்ற இடத்தில் காளி ஆறு உற்பத்தியாகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3600 மீ உயரத்தில் பித்தோரகார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆற்றிற்கு அருகில் இருக்கும் காளி கோவிலின் பெயரால் தான் இந்த ஆற்றிற்கு காளி ஆறு என்று பெயர் வழங்கப்பட்டது. இந்த ஆறு இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இயற்கையான எல்லையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது;

ஓம் பர்வதம் - இமயமலைத் தொடரில் 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள மலையாக ஓம் பர்வதம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு லிட்டில் கைலாஷ், ஆதி கைலாஷ், பாபா கைலாஷ் மற்றும் ஜோங்லிங்கோங் சிகரம் என்ற பெயர்களும் உண்டு. 'ஓம்' அல்லது 'அம்' என்ற வடிவத்தில் பனி படர்நதிருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

Prateek

 சௌகோரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

சௌகோரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்


எங்கே உள்ளது - கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் அமைந்துள்ளது இந்த சௌகோரி பகுதி. இதுவும் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதிதான்.


எப்படி செல்வது - டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து ரயில் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் - கத்கோடம்

சிறந்த பருவம் - கோடைக்காலத்திலும், குளிர் காலத்தின் துவக்கத்திலும் சௌகோரிக்கு சுற்றுலா செல்வது சிறந்தது.

முக்கிய இடங்கள் - பாதாள் புவனேஸ்வர், கங்கோலிஹாட், குன்சேரா குகைகள்

பாதாள் புவனேஸ்வர் - குகைக்கோயிலுக்கு செல்லும் சுரங்கப்பாதையில் பல அற்புதமான கடவுள் சிற்பங்களையும், ஸ்டாலக்மைட் எனும் பாறைப்படிம அமைப்புகளையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். கங்கோலிகாட் எனும் இடத்திலிருந்து வடகிழக்கே 16 கி.மீ தூரத்திலுள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் கோயில் ஸ்தலத்திலிருந்து ராஜ்ரம்பா, பாஞ்சசுலி, நந்த தேவி மற்றும் நந்த காட் போன்ற சிகரங்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்த ஸ்தலத்தின் ஆன்மீக முக்கியத்துவமானது சார் தாம் ஸ்தலத்திற்கு ஈடானதாக கருதப்படுகிறது.

கங்கோலிகாட் - சௌகோரியிலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள கங்கோலிகாட் எனும் இடத்தில் இந்த பிரசித்தமான மஹாகாளி கோயில் அமைந்துள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் சக்தி பீடம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாகவும் இது புகழ் பெற்றுள்ளது. இக்கோயிலில் பக்தர்களால் ஆடுகள் போன்றவை நேர்த்திக்கடனுக்காக பலியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஹாத் காளிகா மந்திர் என்று உள்ளூர் மக்களால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

குன்சேரா குகை - மலையுச்சியில் உள்ள குன்சேரா குகைகளின் உள்ளே இந்த குன்சேரா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகிலேயே அசுர்சுலா எனும் கோயிலும் உள்ளது. இவ்விரண்டு கோயில்களிலும் பல்வேறு தெய்வங்களின் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. கார்த்திகேயபுராவை சேர்ந்த கோல் மன்னர்கள் இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சிற்பங்களில் இரண்டு குப்தர் காலத்தை சேர்ந்தவை எனும் கண்டறியப்பட்டிருக்கிறது

Parthasarathi Chattopadhyay

கனாட்டல் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

கனாட்டல் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்


எங்கே உள்ளது - உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தின் சம்பா - முசூரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது - இங்கிருந்து 92 கிமீ தொலைவில் டேராடூன் அமைந்துள்ளது. இங்குள்ள விமான நிலையம் இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து சுற்றுலாவை இணைக்கிறது. இங்கு மற்றும் அருகிலுள்ள ரிஷிகேஸ் ஆகிய இடங்களுக்கு ரயில் மூலமாகவும் பயணிக்கமுடியும். பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பருவம் - கோடை மற்றும் குளிர் ஆகிய இரு பருவங்களுமே சிறந்ததாகவே இருக்கிறது. கோடைக் காலத்தில் இங்கு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. குளிர்காலங்களில் இங்கு சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

முக்கிய இடங்கள் - கொடியா காடு

கொடியா காடு - கொடியா வனம் ஏராளமான நீரூற்றுகள் நிறைந்த ஒரு அமைதியான காட்டுப்பகுதியாகும். குரைக்கும் மான்கள், காட்டுப் பன்றிகள், இந்திய வகை மான்கள், மற்றும் கஸ்தூரி மான்கள் போன்றவை இக்காட்டில் வசிக்கின்றன. இந்த இடம் பறவை கண்காணிப்பு, இயற்கை புகைப்படக்கலை மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றுக்கு சரியான தேர்வாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுமார் 6 கி.மீ வரை இக்காட்டினுள் நடைப்பயணம் மேற்கொண்டு இதன் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசித்துத் திரும்பலாம்.

Stuti sharma 09

 கல்சி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

கல்சி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

எங்கே உள்ளது - உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம்,. இது கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் அழகான காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு பண்டைய நினைவுச் சின்னங்களும், சாகச விளையாட்டுத் தளங்களும் சிறப்பு.

எப்படி செல்வது - டேராடூன் விமானநிலையம் இந்த பகுதிக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். மேலும் புதுடில்லி போன்ற நகரங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

சிறந்த பருவம் - அக்டோபர் - நவம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் புலம் பெயர்ந்து வரும் பதினொறு வகை பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம். இதுவே இங்கு செல்ல சிறந்த பருவமாக இருக்கும்.

முக்கிய இடங்கள் - விகாஸ் நகர், அசோகன் பாறை, திமிலி கணவாய்

விகாஸ் நகர் - உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பரப்பரப்பான இடம் விகாஸ்நகரம். வெளிநாட்டு பொருட்களுக்கான ஷாப்பிங் அத்துடன் பாரம்பரிய சல்வார் கமிஸ் போன்றவைகளை இங்கு சுற்றுலாப் பயணிகள் வாங்க முடியும். அதோடு, சிறந்த பித்தளை, செப்பிளான தாரை, உள்ளூர் ஜான்சரி மேளம், மிகவும் நியாயமான விலையில் டிரம்ஸ் மற்றும் ஊதுகுழல் போன்றவைகளையும் நல்ல விலைக்கு இங்கே பயணிகள் வாங்கிச் செல்லலாம்.

அசோகன் பாறை - கல்சியில் உள்ள இந்த கல்வெட்டில் மெளரிய அரசனான அசோகனுடைய 14-வது அரசாணை பொறிக்கப்பட்டுள்ளது. அரசானை என்பது அடிப்படையில் அரசனின் மாற்றம்செய்யப்பட்ட ஆணைகளும் அறிவுறைகளும் அடங்கிய தொகுப்பாகும்.

பாறையில் ஒரு யானையின் உருவம் பொறிக்கப்பட்டு அதன் இரண்டு கால்களுக்கிடையில் "கஜாதம்" என்று செதுக்கப்பட்டிருக்கும். ஆண்டியொகஸ், மாகுஸ், ஆண்டிகோனுஸ், தாலமி மற்றும் அலெக்ஸாண்டர் என்ற ஐந்து கிரேக்க அரசர்களின் பெயர்களை இக்கல்வெட்டு தாங்கியுள்ளதால் இது கிமு 253 ஆம் ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

திமிலி பாஸ் - கல்சி அருகே அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலாத்தலம் இது. இந்த இடத்தில் ப்ரிட்டிஷ் ராணுவம், மேஜர் ஜெனரல் ஆச்டர்லோனிக்கு ஆதரவாக கூர்க்கா இனத்திற்கு எதிரான போரில் அணிவகுத்ததாக வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்படுகிறது.

"Nipun Sohanlal"

ஜோஷிமத் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

ஜோஷிமத் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

எங்கே உள்ளது - இது உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது - டேராடூன் விமான நிலையத்திலிருந்து இது அருகில் உள்ளது. இதன் அருகில் இருக்கும் ரயில் நிலையம் ரிஷிகேஷ். மேலும் இங்கிருந்து வாடகை வண்டிகளில் எளிதில் ஜோஷிமத்தை அடையமுடியும்.

சிறந்த பருவம் - ஜோஷிமத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், இதமான வானிலை நிலவக்கூடிய கோடைகாலங்களில் இங்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய இடங்கள் - நந்தாதேவி தேசிய பூங்கா, செனாப் ஏரி, நரசிங்கர் கோவில்

நந்தா தேவி தேசிய பூங்கா - இது ஜோஷிமத்தில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கியமான தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும். நந்தா தேவி மலைத்தொடரில் அமைந்துள்ளதன் காரணமாக இப்பெயர் பெற்றுள்ளது. இந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

செனாப் ஏரி - செனாப் ஏரி, டங் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாகும். சரியாக செப்பனிடப்படாத ஓர் பாதை வழியே நடந்து சென்று இவ்வேரியை அடையலாம்.

நரசிங்கர் கோயில் - நரசிங்கர் கோயில் மஹா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படும் நரசிங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். குளிர்காலங்களின் போது இக்கோயிலில் ஸ்ரீ பத்ரிநாத் முனிவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நரசிங்கரின் திருவுருவச்சிலை கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சிலையின் இடது மணிக்கட்டு ஒவ்வொரு நாளும் மெலிந்து கொண்டே வருகிறது.

Dinesh Valke

கங்கோத்ரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

கங்கோத்ரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்


எங்கே உள்ளது - கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் ஏற்படுத்தபட்ட `சார் தாம்', மற்றும் `டோ தாம்' ஆகிய புனித யாத்திரைகளில், கங்கோத்ரி முக்கிய இடம் பெறுகிறது.

எப்படி செல்வது - கங்கோத்ரியை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதாக அணுகலாம். விமானம் மூலம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து டாக்சிகள் மூலம் கங்கோத்ரியை அடையலாம். டேராடூனிற்கு, புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் மூலமும் கங்கோத்ரியை அணுகலாம். அருகில் உள்ள நகரங்களில் இருந்து கங்கோத்ரிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறந்த பருவம் - ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த இடத்துக்கு சுற்றுலா செல்வது சிறந்தது.

முக்கிய இடங்கள் - கங்கோத்ரியை சுற்றியுள்ள, கங்கை பனியாறு, மானேரி, கேதார் தால், நந்தவனம், தபோவனம், விஸ்வநாதர் ஆலயம், டோடி டால், டெஹ்ரி, குதிதி தேவி ஆலயம், நஷிகேதா டால், மற்றும் கங்கானி, போன்றவை பிரபலமான சுற்றுலா பகுதிகளாக விளங்குகின்றன.

Pranab basak

அல்மோரா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

அல்மோரா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

எங்கே உள்ளது - உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே அமைந்துள்ள மலை நகரமான அல்மோரா பசுமையான காடுகள் சூழ அழகுற நம்மை வரவேற்கின்றது.

எப்படி செல்வது - விமானம், சாலை, ரயில் போன்ற அனைத்து வித போக்குவரத்து மூலமாகவும் இவ்விடத்தை அடையலாம். பந்த் நகர் விமான நிலையம் மற்றும் கத்கோடம் ரயில் நிலையம் அல்மோராவிலிருந்து மிக அருகில் உள்ளது.

சிறந்த பருவம் - அல்மோராவின் அழகை முழுமையாக ரசிக்க ஏதுவான பருவம் கோடைக்காலமே. கோடைக்காலத்தில் அல்மோராவின் காலநிலை சாதமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

முக்கிய இடங்கள் - புகழ் பெற்ற ஸ்தலமான கசார் தேவி கோவில் அல்மோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இகோவிலில் சுவாமி விவேகானந்தர் தவம் மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு, அழகிய காட்சியான சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் துள்ளியமாக காண வசதி செய்யப்பட்டிருக்கின்றது. சிம்தோலா மற்றும் மர்தோலா சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்றது. அல்மோராவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுற காட்சியளிக்கும் மான் பூங்கா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்பூங்காவில் மான், சிறுத்தை, மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் இது போன்ற பல விலங்குகள் உள்ளன.

Rajarshi MITRA

லாண்ஸ்டவுன் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

லாண்ஸ்டவுன் | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

எங்கே உள்ளது - போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி உணவகம் 1888 இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்று. கார்வாலி உணவகம் தற்போது ஆசியாவின் மிக முக்கியமான அருங்காட்சியமாக திகழ்கிறது. புல்லா டால், லாண்ஸ்டவுனில் உள்ள மற்றொரு முக்கியமான இடமாகும். இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான செயற்கை ஏரி. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.

எப்படி செல்வது - லாண்ஸ்டவுனை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதில் அணுகலாம். டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் லாண்ஸ்டவுனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். கோட்வாரா ரயில் நிலையம் லாண்ஸ்டவுனுக்கு மிக அருகில் உள்ளது

சிறந்த பருவம் - மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள 9 மாதங்கள் லாண்ஸ்டவுனை சுற்றி பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவமாகும். அச்சமயங்களில் இப்பகுதியில் சாதகமான சூழ்நிலை நிலவும்

முக்கிய இடங்கள் - சுதந்திர காலத்திற்கு முந்தய இந்தியாவின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ராணுவ அருங்காட்சியகம், துர்கா தேவி கோவில், புனித ஜான் சர்ச், ஹவாகர், மற்றும் டிப்-ன்-டாப் ஆகியன குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகும். சாகசத்தை விரும்பும் பயணிகள் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலவியும் மகிழலாம். இங்கே உள்ள `காதலர்களின் பாதை' தலைசிறந்த மலைப்பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது.

Sudhanshu.s.s

கார்பெட் தேசிய பூங்கா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

கார்பெட் தேசிய பூங்கா | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்


எங்கே உள்ளது - இயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர்க்கம் கார்பெட் தேசிய பூங்கா! முன்பு ராம்கங்கா தேசிய பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த பூங்கா 1957-ம் ஆண்டு கார்பெட் தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர், இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்படக் கலைஞருமான ஜிம் கார்பெட்டின் பெயராலேயே இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.

எப்படி செல்வது - இந்தியாவின் பல்வேறு நகரங்களுடன் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளால் நன்றாக இணைக்கப்பட்ட இடமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது.

சிறந்த பருவம் - கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம்.

முக்கிய இடங்கள் - காலாதுங்கியில் உள்ள கார்பெட் அருங்காட்சியகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வையிடமாக உள்ளது.

Mridusinha

பவுரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்

பவுரி | உத்தரகண்ட்டில் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள்


எங்கே உள்ளது - உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. கண்டோலியா மலைகளின் வடக்குச் சரிவில் அமைந்திருக்கும் இந்த பவுரி, காடுகளால் நிறைந்த ஒரு அழகிய பகுதியாகும்.

எப்படி செல்வது - பவுரியிலிருந்து 185 கிமீ தொலைவில் உள்ள டேராடூன் நகரில் ஒரு விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுபோல் பவுரிக்கு அருகில் கோத்வாரா தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி வாடகை டாக்ஸிகள் மூலம் பவுரிக்கு மிக எளிதாகச் சென்று வரலாம். மேலும் ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூன் மற்றும் முசூரி போன்ற நகர்களிலிருந்து பவருரிக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மூலமும் பவுரிக்கு மிக எளிதாக சென்றுவரலாம்.

சிறந்த பருவம் - மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை பவுரி பகுதி மிக மிதமான தட்பவெப்பநிலையைக் கொண்டிருப்பதால் இந்த மாதங்களில் பவுரி பகுதிகளுக்கு சென்று வரலாம்.

முக்கிய இடங்கள் - இந்த பகுதியில் இருக்கும் லல்ட்ஹாங்க், அத்வானி, தாரா குண்ட், கோட்வாரா, பாரத் நகர் மற்றும் சிரிநகர் போன்ற சுற்றுலாத் தளங்களையும் கண்டு களிக்கலாம். தேவல் மற்றும் கண்டல் ஆகிய பகுகிகள் பழங்கால இந்து ஆலயங்களை தரிசிக்க வழிசெய்கிறது.

itznaval

Read more about: travel uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X