Search
  • Follow NativePlanet
Share
» »வாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டிய நாட்டில் சிறந்த 25 மலைப் பிரதேசங்கள்!

வாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டிய நாட்டில் சிறந்த 25 மலைப் பிரதேசங்கள்!

இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்க பகுதிகளாக அமைந்துள்ளது. காஷ்மீரில் பஹல்கம், குல்மார்க், ஸ்ரீநகர், சோன்மார்க் உள்ளிட்ட தலங்கள் அழகும், செழிப்பும் நிறைந்து வெளிநாட்டு பயணிகளையும் ஈர்க்கும வகையில் உள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு பயணிக்கும் சுற்றுலாவாசிகள் அதிகமாக சிம்லா, மணாலி, டல்ஹௌசி உள்ளிட்ட மலைப் பிரதேசங்களை விரும்பி பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் உள்ள முசூரி, நைனித்தால் போன்றவையும் மிகப் பிரபலம். தென்னிந்தியாவில் கூர்க், ஊட்டி, கொடைக்கானல் போன்றவை பசுமை நிறைந்த மலைப் பகுதிகளாக காட்சியளிக்கின்றன. ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் உள்ள தலைசிறந்த 25 மலைப் பிரதேசங்கள் எது ? அங்கே என்ன சிறப்பு என தெரியுமா ?

மணாலி

மணாலி

மனதை மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனி முடிய மலைச் சரிவுகள் என பல அழகம்சங்களைக் கொண்டது தான் மணாலி. காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வரும் இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு திருவிழாவின் போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ரோஹ்தங் பாஸ் எனப்படும் உயரமான மலையேற்றப்பாதை இப்பகுதியில் முக்கியமான பிக்னிக் தலமாக பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

Saurc zlunag

லே லடாக்

லே லடாக்


அழகிய ஏரிகளும், ஆன்மீக மடங்களும், மதி மயக்கும் மலை முகடுகளும் லே லடாக்கின் முக்கிய ஈர்ப்புகளாக உள்ளது. உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். கூடுதலாக, இணைத்தொடர்களான சன்ஸ்கர் மற்றும் லடாக், லடாக் பள்ளத்தாக்கை சுற்றி உள்ளது. இங்கே கௌதம புத்தரின் பிறந்த நாளான புத்தாஹூட்டையும், உடல் இறப்பையும் சேர்த்து விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

Vinay Goyal, Ludhiana

ஊட்டி

ஊட்டி


தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள புளூ மவுண்டைன் எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகும், பெருமையும் சேர்க்கிறது. பொடானிக்கல் கார்டன், தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. பிரிட்டிஷ் பண்பாடும் நடைமுறைகளைகளும் உள்ளூர் மக்கள் வாழ்வில் ஆழமாக பதிந்து இருக்கிறது. உள்ளூர் உணவில் கூட ஆங்கில உணவுகளின் தாக்கம் தெரிகிறது. இதன் விளைவாக, ஊட்டியின் சிறந்த உணவில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை காணலாம்.

San95660

டார்ஜிலிங்

டார்ஜிலிங்


டார்ஜீலிங் நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான அம்சங்கள் உள்ளன. இவற்றில் ஹேப்பி வேலி டீ எஸ்டேட், லாயிட்ஸ் பொட்டானிகள் கார்டன், டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, படாஸியா லூப், ஹிமாலயன் மவுண்டனீரிங்க் இன்ஸ்டிடியூட் அன்ட் மியூசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சிறிய தெருக்களில் உள்ள கிளப்களிலும் கூட இங்கு இசைக்குழுவினர் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை காண முடியும். இசை என்பது இவர்களது கலாச்சாரத்தோடு ஒரு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதை பயணிகள் புரிந்து ரசிக்க முடியும்.

Kristian Frisk

கேங்டாக்

கேங்டாக்


கேங்டாக் நகரமானது பல பெருமைக்குரிய அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு சிக்கிம் பகுதியின் தலைநகரமாகவும், முக்கியமான சுற்றுலா கேந்திரமாகவும் இது மாறியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக விளங்குவதால் கேங்டாக் பல்வேறு சுவாரசியமான சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. என்ச்சே மடாலயம், நாதுல்லா பாஸ் என்னும் கணவாய், டோ ட்ருல் சோர்ட்டென், ஹனுமான் தோக், ஒயிட் வால், தி ரிட்ஜ் கார்டன், ஹிமாலயன் ஜூ பார்க் உள்ளிட்டவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. சிக்கிம் மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை வருடத்திற்கு ஒரு முறை டிசம்பர் மாதத்தில் உணவுத்திருவிழா ஒன்றையும் கேங்டாக் நகரத்தில் நடத்துகிறது.

Subhrajyoti07

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்


ஸ்ரீநகர். அழகிய நகரமாக மட்டுமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பலவகை அம்சங்களை ஸ்ரீ நகர் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கும் தால் ஏரி, நகீன் ஏரி, அச்சார் ஏரி, மனஸ்பால் ஏரி உள்ளிட்டவை புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இணையில்லாத இயற்கையழகும், அழகான சுற்றுச்சூழலும் இந்த ஏரிகளை சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இடங்களாக மாற்றுகின்றன. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் துலிப் திருவிழா பிரபலமான பண்டிகையாகும். நாடு முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் வர வைக்கும் திருவிழாவாக இது உள்ளது.

Kreativeart

நைனித்தால்

நைனித்தால்


வெகு அமைதியான சூழலும் சொர்க்கம் போன்ற இயற்கை அழகும் வாய்க்கப் பெற்றிருக்கும் நைனித்தால் சுற்றுலாப் பயணிகளிடையே பரவலாக புகழ் பெற்றுள்ளது. நைனித்தால் நகரத்திற்கு அருகிலேயே கில்பரி எனும் அழகிய பிக்னிக் தலமும் அமைந்துள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்கள் அடர்ந்த பசுமையான இந்த காட்டுப்பகுதி இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதை போக்க ஏற்ற இடமாகும்.

Incorelabs

சிம்லா

சிம்லா


புகழ்பெற்ற பனிச்சறுக்குத் தலமாக விளங்கும் சிம்லா குளிர்காலத்தில் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். மலையேற்றத்திற்கு பெயர்பெற்ற இங்கு ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் மற்றும் குல்லு போன்ற இடங்கள் பிரபலமானவை. இந்த கட்டிடம் சுற்றுலா பயணிகளுக்கு, ஒரு பாரம்பரியமும் பழைமையும் வாய்ந்த மற்றும் நவீன கலைப்படைப்புக்களின் தொகுப்பைப்பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.

Smitanarang

கூர்க்

கூர்க்

பசுமையான காடுகள், வியப்பூட்டும் பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள், உரைந்து ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ள கூர்க் கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

Srichakra Pranav

டல்ஹவுசி

டல்ஹவுசி

டல்ஹவுசியில் இஸ்காட்டிய மற்றும் விக்டோரிய கலை நுணுக்கங்களுடன் கூடைய பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. பண்டைய இந்து மதத்தின் கலாச்சார அடையாளங்களான கலைகள், கோவில்கள், மற்றும் கைவினை பொருட்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வரும் களஞ்சியமாகவும் கலாச்சார மையமாகவும் இது விளங்குகிறது. புல்வெளிகள், மலைச்சரிவுகள் உள்ளிட்டவை பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை இப்பகுதியை நோக்கி ஈர்க்கிறது.

Wittystef

மெக்லியோட்கஞ்ச்

மெக்லியோட்கஞ்ச்


தலாய் லாமாவின் உறைவிடமாக உள்ள மெக்லியோட்கஞ்ச், திபெத்தியரின் பழங்கால கைவினைப் பொருட்களுக்கும், துணி வகைகளுக்கும் புகழ்பெற்றது. இவ்விடம் முழுவதும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இவற்றில் ஓக், பைன், தேவதாரு மற்றும் ரோடோடென்ரான் வகை செடியினங்களைக் காணலாம். பனியை தொப்பி போல் ஏற்றிருக்கும் குன்றுகளுடைய மெக்லியோட்கஞ்ச், வருடம் முழுவதும் குளிர்ச்சியான, இதமான வெட்ப நிலையை கொண்டுள்ளது மெக்லியோட்கஞ்ச்.

Derek Blackadder

மூணார்

மூணார்


மூணார் மலைப் பிரதேசம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப் பிரதேசத்தில் இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் தலத்தின் விசேஷமாகும். இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த தலம் இருக்க முடியாது.

Manojk

முசூரி

முசூரி

முசூரியின் லால் டிப்பா மலை உச்சியே முசூரியின் மிகவும் உயரமான முனையாக கருதப்படுகிறது. லால் டிப்பா பகுதியில் டிப்போ எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும். கடல் மட்டத்தில் இருந்து 4500கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது.

RajatVash

காசோல்

காசோல்


மனிதனின் சுவடுகள் அதிகம் தடம் பதிக்காத இந்த காசோல் சமீப காலமாக மலையேற்றம் மற்றும் கேம்பிங் போன்ற அம்சங்களுக்காக பிரபலமாகி வருகிறது. இந்தியர்களைக் காட்டிலும் வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்த ஊர் மிகவும் விரும்பப்படுகிறது. வானுயர்ந்த மலைகளும், பாய்ந்தோடும் நதிகளும், மரங்களும், வன உயிரினங்களும் நாம் வேறு ஏதோ மாய உலகுக்குள் வந்துவிட்டது போன்ற உணர்வை தரும்.

Alok Kumar

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர்


சொக்க வைக்கும் மலைச் சரிவுகளின் இயற்கை எழிலை பார்க்க வசதியாக 30 மலைக் காட்சித் தளங்கள் மஹாபலேஷ்வரில் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரினங்கள் போன்றவற்றை மிக அருகில் கண்ணுக்கு விருந்தாக காணலாம்.

Karthik Easvur

கொடைக்கானல்

கொடைக்கானல்

தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கொடைக்கானலும் ஒன்று. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய தலம்.

Ramkumar

குல்மார்க்

குல்மார்க்


இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை அம்சங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் குல்மார்க் உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை தன்னருகில் கவர்ந்திழுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணப்படும் பசுமை, அமைதியான சூழல் ஆகியவை இவ்விடத்தை ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.

Sara Kothari

மாத்தேரான்

மாத்தேரான்


பிற மலைப் பிரதேசங்களைப் போன்றே இந்த மாத்தேரான் மலையும் பல மலைக்காட்சிகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை காணமுடிகிறது. அடர்ந்து காணப்படும் மாத்தேரான் காட்டுப்பகுதி சில இடங்களில் உள்யே நுழைய முடியாதபடி உள்ளது. இந்த பிரதேசம் முழுக்க குரங்குகள் சுதந்திரமாக திரிவதை பயணிகள் ஆச்சரியமாக பார்க்கலாம்.

Udaykumar PR

தர்மஷாலா

தர்மஷாலா


காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் தர்மஷாலாவில் எங்கு பார்த்தாலும் வியப்பை ஏற்படுத்தும் அழகு நிரம்பியிருக்கும். தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப்படுத்துகிறது. தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம்.

Karanparekh2298

பாட்னிடாப்

பாட்னிடாப்


கடல் மட்டதிலிருந்து 2024 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாட்னிடாப் அடர்த்தியான தியோதர் மரங்கள் நிறைந்த கானகங்களுக்கு மத்தியில், மடிந்து செல்லும் மலைகளின் ஊடாக, மூச்சை திணறடிக்கும் கண்கவர் காட்சிகள் மற்றும் மனதை மயக்கும் அமைதி என அனைத்து அம்சங்களும் குடி கொண்டுள்ள அற்புத மலை வாழிடமான உள்ளது. குளிர்காலங்களில் இங்கு நடக்கும் வெளிப்புற விளையாட்டுகளான ஸ்கையிங் மற்றும் ட்ரெக்கிங் போன்றவற்றை விளையாட சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவது வழக்கம்.

Extremehimalayan

லாண்ஸ்டவுன்

லாண்ஸ்டவுன்


சாகசத்தை விரும்பும் பயணிகள் லாண்ஸ்டவுன் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலாவியும் மகிழலாம். இங்கே உள்ள காதலர்களின் பாதை தலைசிறந்த மலைப் பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது. இப்பகுதியில் உள்ள பச்சைப்பசேல் காடுகள், பலவகையான தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிரம்பியுள்ளது.

Sudhanshu.s.s

ஷில்லாங்

ஷில்லாங்


ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் அழகான மலை உச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஷிலாங் மிகுந்த எழிலுடன் விளங்குகிறது. எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, ஷில்லாங் மலைச்சிகரம், லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி, போலீஸ் பஜார் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.

Vedadesh

வயநாடு

வயநாடு

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசத்தில் எங்கு திரும்பினாலும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் தரிசிக்கலாம். வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த வயநாடு பகுதிக்கு gயணம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Vinay Robin Antony

குதுரேமுக்

குதுரேமுக்


குதுரேமுக், மழைப்பொழிவுடன் நீர் சேகரிப்பு தன்மை கொண்ட புல்வெளிப் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதால் வற்றாத ஆறுகளான துங்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன. குதுரேமுக் பகுதியில் ஏராளமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் லக்யா அணை, கங்கமூலா மலை, ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Karunakar Rayker

அல்மோரா

அல்மோரா


அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிப்பது அத்தனை அழகாக இருக்கும். உலகம் முழுவதும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் இதற்காகவே இங்கு பயணம் செய்கின்றனர். கோபிந்த் பல்லப்பந்த் பொது அருங்காட்சியகம் மற்றும் பின்சார் வனவிலங்கு சரணாலயமும் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். இங்கே மலை ஏறுதல் மற்றும் பைக் சவாரி ஆகிய சாகசங்களில் ஈடுபடுவது புதுவித அனுபவத்தை பயணிகளுக்கு அளிக்கும்.

Rajarshi MITRA

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X