Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 5 அதிவேக ரயில்கள்!

இந்தியாவின் 5 அதிவேக ரயில்கள்!

By

இந்தியாவின் முதல் ரயிலாக டிசம்பர் 22 1851-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இயக்கப்பட்ட கூட்ஸ் வண்டியை சொல்லலாம். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 16, 1853-ஆம் ஆண்டு போரி பந்தர்-பாம்பே-தானே வழித்தடத்தில் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

தற்போது உலக அளவில் இந்திய ரயில்வே மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் போக்குவரத்து துறையாக அறியப்படுகிறது. எனினும் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரயில்வேயில் அந்த அளவுக்கு அதிவேக ரயில்கள் இல்லை.

ஆனால் 150 கி.மீ வேகத்துக்கு ஓடக்கூடிய சில அதிவேக ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுவது பெருமைகொள்ள வேண்டிய விஷயம்தான். அந்தவகையில் இந்தியாவின் அதிவேக ரயில்களாக அறியப்படும் 5 ரயில்களை பற்றி இப்போது பார்ப்போம்.

போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்

போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் அதிவேக ரயிலாக போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கருதப்படுகிறது. போபாலிலிருந்து புது டெல்லி வரை பயணம் செய்யும் இது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் செல்வதுடன், டெல்லி-ஆக்ரா பாதையில் செல்லும்போது 161 கி.மீ வேகத்தை தொடுகிறது.

படம் : Bahnfrend

கான்பூர் ரிவர்ஸ் சதாப்தி

கான்பூர் ரிவர்ஸ் சதாப்தி

கான்பூர் மற்றும் புது டெல்லி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் கான்பூர் ரிவர்ஸ் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 88 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. 874 கி.மீ தூரம் நான்-ஸ்டாப்பாக ஓடும் இந்த ரயில் இலக்கை 9 மணி மற்றும் 55 நிமிடங்களில் அடைகிறது.

படம் : Vishalkh

சியல்டா-துரந்தோ எக்ஸ்பிரஸ்

சியல்டா-துரந்தோ எக்ஸ்பிரஸ்

சியல்டாவிலிருந்து புது டெல்லி வரை மொத்தம் 2907 கி.மீ தூரம் நான்-ஸ்டாப்பாக ஓடுகிறது சியல்டா-துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில். 88 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் 32 மணி மற்றும் 40 நிமிடங்களில் இலக்கை அடைகிறது.

படம்

அலஹாபாத்-துரந்தோ எக்ஸ்பிரஸ்

அலஹாபாத்-துரந்தோ எக்ஸ்பிரஸ்

அலஹாபாத் மற்றும் புது டெல்லி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அலஹாபாத்-துரந்தோ எக்ஸ்பிரஸ்
ரயில் மணிக்கு 86 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. 1268 கி.மீ தூரம் நான்-ஸ்டாப்பாக ஓடும் இந்த ரயில் இலக்கை 14 மணி மற்றும் 45 நிமிடங்களில் அடைகிறது.

படம் : Superfast1111

 மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

மும்பையிலிருந்து புது டெல்லி வரை மொத்தம் 2768 கி.மீ தூரம் நான்-ஸ்டாப்பாக ஓடுகிறது மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில். 86 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் 31 மணி மற்றும் 55 நிமிடங்களில் இலக்கை அடைகிறது.

படம் : Superfast1111

Read more about: ரயில்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X