Search
  • Follow NativePlanet
Share
» »பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?

பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?

பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?

By Udhay

டெஹ்ரியின் தெற்குப் பகுதியில் 40கிமீ தொலைவில் கைமூர் மலைகளிடையே அமைந்துள்ள இக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 1500மீ உயரத்தில் உள்ளது. ஹரிச்சந்திராவின் மகனான ரோஹித்சவா என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இந்தியாவின் பழங்கால கோட்டைகளில் ஒன்றாகும், வீரம், பலம், ஆளுமையின் சின்னமாக இக்கோட்டை உயர்ந்து நிற்கிறது. விநாயகர் கோவில், எலிஃபண்ட் கேட், ஹதியா போல் என்ற தொங்கு வீடு, ஐனா மகால், ஹஸ்ப் கான் முசோலியம், ஜம்மி மஸ்ஜித், திவான் - ஈ - காஸ், திவான் ஈ ஆம், ரோஹ்டஸான் கோவில், தேவி கோவில் போன்ற பல சுற்றுலா தளங்கள் உள்ளேயே அமைந்துள்ளன.

சுமேஷ்வர் மலைகளில் உள்ள இக்கோட்டை நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கூர்மையான மலைமுகட்டில் நிற்கும் இந்தக் கோட்டையின் சிதைவுகளை இப்போது காணலாம். தெளலகிரி, கோசைந்தான் மற்றும் கவுரிஷங்கர் ஆகிய இமயமலை சிகரங்களை இங்கிருந்து காணலாம்.

பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?

Virajsingh7

காந்தி ஸ்மர்க்

1972-ல் காந்தியவாதி உயர்திரு.வித்யாகர் கவி அவர்களால் நாட்டிற்கு அற்பணிக்கும் வகையில் இந்த காந்தி நினைவக அடிக்கல் நிறுவப்பட்டது. சம்பரனை சேர்ந்த உழவர்களுக்கு எதிராக நடந்த வெள்ளையர்களின் கொடுமையை எதிர்த்து குரல் கோசுக்க காந்தியடிகள் தொடங்கிய சம்பரன் சத்யக்ரஹாவின் நினைவாக இந்த நினைவக தூண் நிற்கிறது.

அஜத்ஷத்ரு கோட்டை

மகதாவை ஆண்ட அஜத்ஷத்ரு அரசரால் கட்டப்பட்டதே அஜத்ஷத்ரு கோட்டை. தனித்துவத்துடன் விளங்கும் இந்த கோட்டையை ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும்

பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?

Virajsingh7

முங்கர் கோட்டை

முங்கரின் வசீகரமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான முங்கர் கோட்டை கட்டப்பட்ட தேதி துல்லியமாக தெரியாவிட்டாலும், இது அடிமை ராஜ்ஜியத்தின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கோட்டை இரு பிரபலமான மலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்று கர்ணசௌரா என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நீள்சதுர குன்றின் மேல் அமைந்துள்ள மற்றொன்று, ஏறத்தாழ ஒரு கோட்டையின் வடிவில் காணப்படுகிறது. இது பழங்காலத்தில் மக்கள் கூடும் மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்திருக்கிறது. இக்கோட்டை கடலில் எழும்பும் அலைகளைப் போல் துக்ளக்கள், கில்ஜிக்கள், லோதிக்கள், வங்காள நவாப்கள், முகலாய ஆட்சியாளர்கள், கடைசியாக ஆங்கிலேயப் பேரரசு போன்ற ஏராளமான ஆட்சியாளர்களைக் கண்டுள்ளது.

இது இக்கோட்டையின் ஆன்மாவின் மேல் நீங்காத பல நினைவுகளைப் படியச் செய்துள்ளது. இக்கோட்டை பல்வேறு முக்கிய ஆன்மீக மற்றும் வரலாற்று நினைவகங்களான பீர் ஷா நுஃபா மற்றும் முல்லா முஹமது சயீத்தின் கல்லறை போன்றவற்றின் உறைவிடமாகத் திகழ்வதிலேயே அதன் அழகு அடங்கியுள்ளது.

Read more about: travel forts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X