Search
  • Follow NativePlanet
Share
» »தற்கொலையைத் தூண்டும் அந்த ஐந்து இடங்கள், இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா ?

தற்கொலையைத் தூண்டும் அந்த ஐந்து இடங்கள், இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா ?

குடும்பச் சுற்றுலா, நண்பர்களுடன் ஜாலியான ரைடு, காதலருக்கான சுற்றுலாத் தலங்கள், ஹனிமூனுக்கு ஏற்ற பகுதிகள் என அன்றாடம் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் சற்று மாறுதலுக்காக ஒரு தற்கொலைச் சுற்றுலாவுக்கு சென்று வருவோமே. அதுவும், நம் இந்தியாவில் தற்கொலைத் தலங்கள் எங்கவெல்லாம் உள்ளது என அறிந்துவைத்துக் கொள்வதும் ஓர் பொது அறிவுதான். பிறரிடம் இருந்து தன்னை தனித்துக் காட்ட விரும்பும் பலர் இச்சமூகத்தில் உலாவும் நிலையில் அவர்கள் நிச்சயம் சவாலான இந்த சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வரலாம்.

கிராண்ட் பாராடி டவர்ஸ், மும்பை

கிராண்ட் பாராடி டவர்ஸ், மும்பை

மும்பையில் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று கிராண்ட் பாராடி டவர்ஸ். இக்கட்டிடத்தில் இருந்து குதித்து பலர் தற்கொலை செய்துகொண்டு தற்போது இப்பகுதியிலேயே ஆவியாக உலாவருவதாக பலரும் கூறுகின்றனர். இதனாலேயே மும்பையில் உயர்ந்த கட்டிடம் என புகழ்பெற்றிருந்த இக்கட்டிடம் தற்போது தற்கொலைக்கும், ஆவிக்கும் புகழ்பெற்றதாக உள்ளது. கெம்ப்ஸ் கார்னரில் உள்ள உயரமான கட்டிடங்களில் வைர வணிகர்களும், பண்ணாட்டு வணிகர்களும் என நகரத்தின் செல்வந்தர்கள் இருந்தனர். இருப்பினும், கட்டிடத்தின் உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு முதிய தம்பதியரின் மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அmதனைத் தொடர்ந்து, அதேப் பகுதியில் அவர்களது மகன் மற்றும் மருமகள் தற்கொலை செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் பேய்கள் நடமாடுகிறது என்று மக்கள் நம்பத் துவங்கினர். சிலர் ஒரு படி மேலே சென்று இரவில் உயிர் இழந்தவர்கள் நடமாடுவதைக் கண்டதாகவும் கூறி திகீல் கிளப்புகின்றனர். 1998 ஆம் வருடம் முதல் இங்கு சுமார் 20 பேர் பல்வேறு மாடிகளில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற இச்சம்பவங்கள் வானுயர்ந்த இந்தக் கட்டிடங்களில் வசிப்பவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. தற்போது ஒரு சில செல்வந்தர்களே வசிக்கும் இப்பகுதியில் இன்று கூட இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இரவில் மக்கள் நடமாடுவதையே தவிர்த்துக் கொள்கின்றனர்.

Leoboudv

ஷானிவர்வாடா கோட்டை, புனே

ஷானிவர்வாடா கோட்டை, புனே

1730-ஆம் ஆண்டில் பஜீயோ ஷானிவார் வாடா பேஷ்வாவின் இடமாக இருந்த இந்தக் கோட்டை 1828-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதுமாக சிதிலமடைந்தது. இதில், கோட்டியில் இருந்த ஒரு இளவரசி உயிர் இழந்ததாகவும், இன்றும், அந்த இளம் இளவரசனின் ஆவி கோட்டையைச் சுற்றி வருவதாகவும் நம்பப்படுகிறது. முழு நிலவு இரவுகளில் முணுமுணுக்கும் சத்தமெல்லாம் கேக்குமாம். ஆனால், இந்த கோட்டைக்கு இன்னொரு மர்மமான வரலாறும் உள்ளது. இப்பகுதியை ஆட்சிசெய்து வந்த இளம் இளவரசன், நாராயணோவை 18 வயதில் கொடூரமாக கொலை செய்ததுதான் அக்கதை. கதையின் படி, தனது இளம் வயதில் அதிகாரத்திற்கு வந்த இளவரசர், அத்தை மகளை விரும்பியுள்ளார். ஆனால், அதை அவரது அத்தை ஏற்க மறுத்து காவலாளிகளைக் கொண்டு இளவரசரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நாராயணோவுக்கு இது தெரியவந்தபோது, அவர் மாமாவிடம் முறையிட சென்றுள்ளார். ஆனால் அதற்குள் காவலர்கள் இளவரசரைக் கொலை செய்தார்கள். அவரது ஆவியே இன்னமும் ஷானிவார் வாடாவை வேட்டையாடி வருகிறது என கூறப்படுகிறது.

Viekrant

சஞ்சய் வான், தில்லி

சஞ்சய் வான், தில்லி

சஞ்சய் வான் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பசுமையான தோட்டமாகும். சஞ்சய் வான் அல்லது அதன் மரங்களின் நிழலில் ஓய்வெடுக்க மிகவும் அழகான சுற்றுலாத் தலம். ஆனால், இரவில் அதே போல் அங்கு ஓய்வெடுக்க ஒரு நாளும் முடிவு செய்யாதீர்கள். நீங்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் கதையுடன் திரும்பி வரக்கூடும். இத்தலத்தைச் சுற்றியுள்ள வனத்தில் இருந்து ஒரு பெண் உட்பட பல ஆவிகள் உலாவருவதாக இங்கே நம்பப்படுகிறது. இங்கு பல புனிதர்களின் கல்லறைகள் மற்றும் கிலா ராய் பித்தோராவின் உடைந்த கோபுரங்களைக் காண முடியும். இரவு இப்பகுதிக்குச் செல்லும காவலர்களும, மக்களும் கூட பல அமானுஷ்யமான குரல்களை கேட்டிருக்கிறார்கள். யாரும் பார்க்கப்படாத நிலையில் அல்லது யாரும் பார்க்காத ஒரு உணர்ச்சியைக் இத்தலத்தில் உணர்கிறார்கள். சஞ்சய்வான் குறித்த முழுத்தகவலும் அறிந்த எவரும் இப்பகுதியில் தலைவைத்துக் கூட படுப்பதில்லை என்பதுதான் கவணிக்கத்தக்கது.

Vishalbhatia93

சவுத் பார்க் தெரு கல்லறை, கொல்கத்தா

சவுத் பார்க் தெரு கல்லறை, கொல்கத்தா

கொல்கத்தாவில் ஒரு பிரபலமான கல்லறை, தென் பார்க் தெரு கல்லறை என்பது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியே உள்ள பெரிய தேவாலய கிறிஸ்துவ கல்லறைகளில் ஒன்றாகும். இன்று, அது பயன்பாட்டில் இல்லை என்றாலும், கல்லறைகளை, புராணங்கள் மற்றும் நினைவுகளை விவரிக்கும் மக்கள் இங்கே உள்ளனர். இங்கு மரபுவழித் தளமான இந்தோ- சாராசெனிக் மற்றும் கோதிக் கட்டிடக்கலை பிரசிதிபெற்றது. இருப்பினும், இங்குள்ள கல்லறைகளில் பல ஆத்மாக்கள் நடமாடுவதாகவும், இங்கு பயணிப்போரை அழிப்பதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், மக்கள் இதுவரை எந்த ஆவி அல்லது பேயையும் இங்கே பார்த்ததில்லை. என்றாலும், இங்கே பயணம் செய்யும் சிலர் மயக்கம் அல்லது மூச்சுத் தினரலை உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். சிலர் தங்கள் கேமராக்களில் வித்தியாசமான, சில அமானுஷ்யமான உருவம் தென்பட்டுள்ளதாகவும் வெளியிடுகின்றனர்.

Priyankardey

டவ் ஹில், குர்ஸொங்

டவ் ஹில், குர்ஸொங்

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சிறிய மலை வாசஸ்தலம், டவ் ஹில். டார்ஜிலிங் மக்கள் குறைவாக வசிக்கும் இப்பகுதி பிரபலமான ஆவிநடமாட்டப் பகுதியாக உள்ளது. இங்கு, பல இயற்கைக் காட்சிகளும், மலைத் தொடர்களும் நம்மை வசீகரித்தாலும், நீர்வீழ்ச்சிகளிலும், பொம்மை ரயில் சவாரிகளிலும் உங்களுடனேயே சில மர்மங்கள் பயணிப்பதையும் உணரலாம். இங்கே உள்ளவர்கள் கூட இந்த ஆவிகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இங்கே வசிக்கும் ஒருசில மக்களிடம் இருந்து பல அதிர்ச்சியூட்டும் கதைகளைக் கேட்க முடியும். அதில், அவர்கள் குறிப்பிட்டு சொல்லும் ஆவிகள் நிறைந்த பகுதியாக இருப்பது நூற்றாண்டு கடந்த பழைய விக்டோரியா உயர்நிலைப் பள்ளி. இங்கே, பாடசாலைகளில் மாணவர்கள் இல்லாதபோதும், விடுமுறையின் போது காலியான வகுப்பறைகளிலிருந்து வரும் அடிச்சுவடுகளையும், கூச்சல்களையும், சிரிப்பையும் கேட்க முடியும்.

குறிப்பாக, இத்தலங்களுக்கு எல்லாம் செல்ல திட்டமிடுவோர் சற்று கவணமாக சென்றுவிட்டு திரும்புங்கள்... அடுத்த முறை செம ஜாலியான சுற்றுலாவுக்கு போகலாம்.

Anup Sadi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X