Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டிலேயே டாப் 5 ஸ்டேடியங்கள் இதுதானாம்!

நாட்டிலேயே டாப் 5 ஸ்டேடியங்கள் இதுதானாம்!

உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடுள இந்தியா முதலிடம். இப்படியிருக்கையில் நாட்டிலேயே டாப் 5 விளையாட்டு மைதானங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?

பிற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகளவிலான விளையாட்டு மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உள்ளூரைப் பொருத்தவரை பல விளையாட்டுக்கள் இருந்தாலும் உலகம் முழுவதும் ரசிக்கக் கூடியதான கிரிக்கெட் மீது இங்கு தனியாக ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இதற்காகவே நூலகம் இல்லாத ஊரில் கூட ஒரு கிரிக்கெட் மைதானத்தையேனும் பார்த்துவிட முடியும். இதன் காரணமாகத்தான் உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இப்படியிருக்கையில் நாட்டிலேயே டாப் ஐந்து இடங்களை வகிக்கும் விளையாட்டு மைதானங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?

சால்ட் லேக் ஸ்டேடியம்

சால்ட் லேக் ஸ்டேடியம்


சால்ட் லேக் ஸ்டேடியம் என்று பிரபலமாக அறியப்படும் தி-யுவ பாரதி க்ரீடாங்கன் விளையாட்டு மைதானம் கொல்கத்தாவின் பிதான் நகரில் அமைந்துள்ளது. இந்த மைதானம் இந்தியாவின் மிகப்பெரிய மைதானமாகவும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கால்பந்து மைதானமாகவும் கருதப்படுகிறது. சுமார் 1,20,000 பேர் அமரக்கூடிய வகையில் இங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Debnathsonu1996

ஈடன் கார்டன் ஸ்டேடியம்

ஈடன் கார்டன் ஸ்டேடியம்


நாட்டின் மிகப்பெரியதும், உலகின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக ஈடன் கார்டன் மைதானம் திகழ்கிறது. அதோடு இந்தியாவின் மிகப்பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஈடன் கார்டன் மைதானத்தில் 90,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

JokerDurden

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்


டெல்லியின் முக்கியமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தான் 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த்விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கு பல விளையாட்டுகள் நடத்தப்படுவதுடன் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். 60 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.

Tigerson1995

டி.ஒய். பட்டேல் ஸ்டேடியம்

டி.ஒய். பட்டேல் ஸ்டேடியம்


நவி மும்பையின் நெருள் பகுதியில் அமைந்திருக்கும் டி.ஒய். பட்டேல் கிரிக்கெட் மைதானம் 60 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு 9 டென்னிஸ் அரங்கும், 4 உள்ளரங்கு பேட்மிட்டன் கோட்டுகளும், ஒரு ஒலிம்பிக் அளவு நீச்சல் குளமும் இருக்கின்றன. இந்த மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான இசையமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற வசதி செய்யப்பட்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானமாகவும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sankarshan Mukhopadhyay

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்


சத்தீஸ்கரின் நயா ராய்பூர் பகுதியில் அமைந்திருக்கும் ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 65 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

MohitSingh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X