Search
  • Follow NativePlanet
Share
» »உலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்!

உலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்!

அணைகளின் கட்டமைப்பில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தாலும் பிற நாடுகளே இந்த ஆறு அணைகளைக் கண்டு வியக்குதாம். ஏன்னு தெரியுமா ?

கொட்டும் மலையினாலும், வனத்தின் சேமிப்பினாலும் ஓடையாக உருவாகும் நீர் ஓர் கட்டத்தில் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓடும். இவை அதிகரிக்கும் போது வெள்ளமாக பாதிப்பையும், அல்லது கடலில் கலந்து யாருக்கும் பயனின்றி போவது நாம் அறிந்ததே. ஆற்றில் ஓடும் நீரைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்கவும் அதன் குறுக்கே போடப்படும் தடையே அணை. மிகையான நீரை வெளியிடும் களிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காகவோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும் ஓர் அணையின் கட்டமைப்புகளாகும். இதில், உலக அளவில் அணைக்கட்டுமானத்தில் இந்தியா 5100 அணைகளைக் கொண்டு அணைகள் கட்டுவதில், உலகிலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தாலும் பிற நாடுகளே கண்டு வியக்கும் வகையில் உள்ள அந்த ஆறு அணைகள் எவை எனவும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிந்துவோம் வாங்க.

பக்ராநங்கல்

பக்ராநங்கல்


பக்ராநங்கல் அணை இமாச்சலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சட்லஜ் நதியின் குறுக்கே அமைந்துள்ளது. சுமார், 226 மீட்டர் உயரம் கொண்ட பக்ராநங்கல் அணை, தெஹ்ரி அணைக்கு பிறகு இந்தியாவின் உயரமான அணையாக திகழ்ந்து வருகிறது. 518,25 மீட்டர் நீளமும், 9,34 பில்லியன் கன மீட்டர்கள் கொள்ளளவும் இந்த அணை கொண்டுள்ளது. அணையின் நீர்த்தேக்கமான கோபிந்த் சாகர் ஏரி நாட்டின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த அணை இந்தியாவில் பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு இடையே எல்லையின் அருகில் உள்ளது. உலக நாடுகளே இதைக் கண்டு வியக்கக் காரணம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையாக இது உள்ளதே ஆகும்.

Urdangaray

சர்தார் சரோவார்

சர்தார் சரோவார்


சர்தார் சரோவார் அணை நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் நவகம் என்னும் இடத்தின் அருகில் உள்ள இது நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம், பெரிய நீர்ப்பாசனம் மற்றும் ஒரு தொடர் நதிநீர் கட்டுமானம் உள்ளிட்ட ஒரு பெரிய ஹைட்ராலிக் பொறியியல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாக உள்ளது. கட்டுமான திட்டம் பாசனத்தை அதிகரிக்க மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக 1979-இல் திட்டமிடப்பட்டது. சர்தார் சரோவார் அணை 535 அடி உயரம் கொண்டது.

YashiWong

அரை நூற்றாண்டு கடந்த பணிகள்

அரை நூற்றாண்டு கடந்த பணிகள்


நாட்டின் மிகப்பெரிய அணையான இது மொத்தம் 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மத்தியபிரதேசம், குஜராத்தில் சுமார் 214 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டுள்ளது. இது, அதிகபட்சமாக 16.10 கிலோ மீட்டர் அகலமும், குறைந்தபட்சம் 1.77 மீட்டர் அகலமும் கொண்டதாகும். கடந்த 1961-ல் தொடங்கிய அணை திட்டம் சுமார் ரூ.40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அடைந்துள்ளது.

Nvvchar

தெஹ்ரி அணை

தெஹ்ரி அணை


உத்தரகண்ட் மாநிலத்தில் பகீரதி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள தெஹ்ரி அணை இந்தியாவின் உயரமான அணையாக கருதப்படுகிறது. இந்தியாவின் மிக உயரமான அணை என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. உலகின் 8-வது மிக உயரமான அணையும் இதுதான். உத்தரகண்ட் மாநிலத்தின் பெறும்பகுதி விவசாயத்திற்கும், குடிக்கவும் இந்த நீர் பயன்படுகிறது. பகீரதி நதியில் கட்டப்பட்ட இதில், நீர் மட்டம் 261 மீட்டர் உயரத்துக்கு செல்லும். இதன் மூலம் 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையின் நீளம் 1,886 அடி, அதன் முகடு அகலம் 66 அடி, அடிப்படை அகலம் 1.128 மீட்டர் ஆகும்.

Jeewannegi

நாகார்ஜூன சாகர்

நாகார்ஜூன சாகர்


நாகார்ஜூன சாகர், ஆந்திர பிரதேசம், நலகொண்டா மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கல்கட்டு அணையாக அறியப்படுகிறது. அணையின் திறன் 11.472 மில்லியன் கன மீட்டர்கள் வரை உள்ளது. அணையின் உயர அளவு 490 அடி ஆகும். 1.6 கிலோ மீட்டர் பரந்த அளவு கொண்ட இந்த அணையில் 26 வாயில்கள் உள்ளன. நாகார்ஜூன சாகர் அணை இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்தாக தொடங்கப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பெயரில் அமைக்கப்பட்டது.

Sumanthk

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு


முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள இது எந்த மாநிலத்திற்கு சொந்தம் என பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. 1895-யில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த அணையின் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் pபரபல சுற்றுலாத் தலமான தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

Bipinkdas

அறிவியலின் அதிசயம்

அறிவியலின் அதிசயம்


முல்லைபெரியாறு அணை அக்காலத்தில் சிமெண்ட் உள்ளிட்ட இரசாயனக் கலவையின்றி சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பெரியாறு திட்டத்தின் கீழ் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

ഹൊറേഷ്യോ കിച്ച്നർ

ஆசியாவின் பெரிய வில்லணை

ஆசியாவின் பெரிய வில்லணை


இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வில்லணையாகவும், ஆசியாவின் மிகப்பெரிய வில்லணையாகவும் பெரியார் நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி வில்லணை திகழ்கிறது. மேலும் திருச்சிராப்பள்ளி அருகே காவிரி ஆற்றின் குறுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை உலகின் பழமையான அணையாகவும், நம் பாரம்பரிய பெருமையை எடுத்துரைக்கும் விதமாகவும் திகழ்ந்து வருகிறது.

Nittavinoda

ஹிராகுட் அணை

ஹிராகுட் அணை


மகாநதி ஆறு ஓடும் இந்தியாவின் ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது ஹிராகுட் அணை. 1957-ல் கட்டப்பட்ட இந்த அணை உலகின் மிக நீளமான மண்ணால் ஆன அணைகளில் ஒன்றாகும். ஹிராகுட் அணையின் நீளம் 16 மைல் அதாவது 26 கிலோ மீட்டர் ஆகும். உலகின் மிக நீளமான முழுக்க முழுக்க மனித சக்தியால் கட்டப்பட்ட அணையாக உள்ளது. இது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் முதல் பெரிய பல்நோக்கு நதிகள் திட்டத்தின் கீழ் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

AkkiDa

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X