Search
  • Follow NativePlanet
Share
» »தேசிய விலங்கு சவாரிக்கு ஏற்ற அந்த ஆறு இடங்கள்..!

தேசிய விலங்கு சவாரிக்கு ஏற்ற அந்த ஆறு இடங்கள்..!

நம் நாட்டில் ஏராளமான புலிகள் சரணாலயங்கள் இருந்தாலும், அவற்றில் சவாரிக்கு ஏற்ற சில வனவிலங்கு சரணாலயங்களுக்கு இந்த கோடை விடுமுறையில் பயணிக்கலாம் வாங்க.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அதனை காப்பதற்காகவே பல பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான சரணாலயங்கள் அமைத்து புலிகளை காத்துவருவது நாம் அறிவோம். அங்கே சென்று புலிகளைக் கண்டு ரசிக்கவும் சுற்றுலாத் துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளத. இதுபோன்ற சரணாலயங்களில் சபாரி என்ற வார்த்தை மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் ஒப்பிடுகையில் புலிகளை ஒரே பகுதியில் பாதுகாப்பாக கண்டு ரசிக்கவும், அதனைக் கண்டவாறே காட்டில் சவாரி செய்வதும் இந்தியாவில் முதன்மையான சுற்றுலா அனுபவமாகும். இதற்காகவே உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள புலிகள் காப்பகங்களுக்கு பயணம் செய்கின்றனர். இவ்வாறு, நம் நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களில் புலிகள் மட்டுமின்றி மேலும் பல விலங்குகள், காட்டுயிர்கள், அடர் காடுகள் நம்மை ஈர்க்கின்றன. இத்தகைய இந்தியாவில் சவாரிக்கு ஏற்ற சில வனவிலங்கு சரணாலயங்களுக்கு இந்த கோடை விடுமுறையில் பயணிக்கலாம் வாங்க.

ரணதம்போர் தேசிய பூங்கா

ரணதம்போர் தேசிய பூங்கா


ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்தது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1973ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் முதல் வனச்சரகமாக அறிவிக்கப்பட்டு, இறுதியாக 1980ம் ஆண்டில் இது தேசிய காட்டுயிர்ப்பூங்கா எனும் சிறப்பை பெற்றது. முக்கிய விலங்கான புலி மட்டுமல்லாமல், குள்ளநரி, சிறுத்தை, கழுதைப்புலி, சதுப்புநில முதலை, காட்டுப்பன்றி மற்றும் பலவகை மான்கள் போன்ற விலங்குகளும் இந்த காட்டுயிர்ப்பூங்காவில் வசிக்கின்றன. இவை தவிர பலவகை தாவரவகைகளும் இங்கு காணப்படுகின்றன. அல்லிகள், லெம்னா மற்றும் தாமரை போன்றவற்றை இங்குள்ள நீர்நிலைகளில் அதிகம் பார்க்கலாம். புலிகள் அதிகம் வசிக்கும் காட்டுப்பகுதியாக பிரசித்தி பெற்றுள்ள இந்த வனப்பகுதி இந்தியாவில் மிகச்சிறந்த காட்டுயிர்ப்பூங்காவாக புகழ் பெற்றுள்ளது. இதனுள்ளே வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். புகைப்படமெடுத்தல் மற்றும் படம் பிடித்தல் போன்றவற்றுக்கு உரிய ஏற்பாடுகளையும் வனத்துறை செய்து தருவது ஒரு விசேஷமான அம்சமாகும்.

Farhan Khan

கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா


கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப் பார்க்கும் வாய்ப்பினை கொடுக்கும். பழக்கப்படுத்தப்பட்ட யானைகளில் இந்த தேசியப் பூங்காவின் இண்டு இடுக்குகளையும் நன்றாக அறிந்த திறமையான பாகன்கள் உங்களை யானை சவாரிக்கு அழைத்துச் செல்வார்கள். பிஜ்ரானி மற்றும் திக்காலா பகுதிகளில் நியாயமான விலைகளில் யானை சவாரி செய்யும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளான இந்த தேசிய பூங்காவின் குமேரியா மற்றும் ரிங்கோடா ஆகிய இடங்களிலும் சவாரியை நீங்கள் அனுபவித்திட முடியும்.

Deepti Dhamal

சாத்பூரா தேசிய பூங்கா

சாத்பூரா தேசிய பூங்கா


புலிகளின் பிரதான சரணாலயமாக ஹோசாங்காபாத்தில் உள்ள சாத்பூரா தேசிய பூங்கா, அதன் மாறுபட்ட வகையான தாவர மற்றும் விலங்கினங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக இந்த இடம் விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்கா புலிகள் பாதுகாப்பகமாகவே இருந்து வந்தது. இங்கு நீர்வீழ்ச்சிகள் மற்றும் குறுகலான மலைச்சரிவுகள் ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் ஊர்ந்து செல்லும் போது படிவுப்பாறைகளால் உருவான சிகரங்கள், அடர்ந்த சால் மரக்காடுகள் மற்றும் தாவா பாதுகாப்பிடம் ஆகியவற்றைக் நீங்கள் ஆச்சரியமின்றி கண்டிட முடியும். இந்த சாத்பூரா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக புள்ளி மான்கள், முள்ளம்பன்றிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சேற்றிலுள்ள முதலைகள் ஆகியவற்றை காணும் வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் இயற்கை நடைபயணத்திற்கு வாய்ப்பளிக்கும் ஒரே புலிகள் சரணாலயமாக இந்த பூங்கா உள்ளது. இதன் படி, 4 பேர் கொண்ட குழுவினராக, தகுந்த பயிற்சி பெற்ற பாதுகாப்பு அதிகாரியுடன் இந்த வனப்பகுதிகளில் நடமாடலாம். இந்த பூங்காவிற்கு வருவதற்கு சிறந்த காலமாக ஜனவரி முதல் ஜுன் வரையிலான மாதங்கள் உள்ளன.

Devyaani Bhatnagar

பெஞ்ச் நேஷனல் பார்க்

பெஞ்ச் நேஷனல் பார்க்


பெஞ்ச் நேஷனல் பார்க் மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது வடக்கே முறையே சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் கிட்டத்தட்ட சம மேற்கு மற்றும் சம கிழக்கு பகுதிகளில் இருக்கிறது. அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதிகளில் அரசு பூங்காவை ஆரம்பித்தது. இந்த பூங்காவை ஒட்டி ஆறு ஒன்றும் பாய்கிறது. அடர்ந்த காடுகளில் இருந்து தெற்கில் அமைந்துள்ள தேசிய பூங்கா வழியாக இந்த நதி பாய்கிறது. இதற்கு பெஞ்ச் ஆறு என்று பெயர். தற்போது இந்த இடம் இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் காப்பகமாக அறியப்படுகிறது. இந்த பூங்கா அதிகமான தாவரவளம் மற்றும் விலங்கின வளத்தால் நிறைந்துள்ளது. கருஞ்சிருத்தைகள் மற்றும் புலிகள் போக, இந்த தேசியப் பூங்காவில் மான்கள், முயல்கள், கழுதைப் புலிகள், பறக்கும் அணில்கள், நரிகள், காட்டு பன்றிகள், முள்ளம்பன்றிகள், குள்ளநரிகள் மற்றும் எருமைகளை இங்கு காணலாம்.

Ruchika Sandolkar

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

நாகர்ஹொளே தேசியப் பூங்கா


நாகர்ஹொளே தேசியப் பூங்கா 1955-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக ஆரம்பிக்கப்பட்டது. பின் 1999-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு காடுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆதி காலத்திலிருந்தே வனவிலங்குகளுக்காக பிரபலமாக இருந்து வரும் வனக் காடாகும். அந்த காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டையாடி வந்தார்கள். நாகர்ஹொளே தேசியப் பூங்கா பல்வேறு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புதிண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

Davidvraju

பந்திப்பூர் தேசிய பூங்கா

பந்திப்பூர் தேசிய பூங்கா


பந்திப்பூரில் அமைந்துள்ள இந்த பந்திபூர் தேசிய வனவிலங்கு பூங்கா சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற தலமாகும். 1931ம் ஆண்டு முதன் முதலில் மைசூர் மஹாராஜாவால் இந்த வனப்பகுதி வனவிலங்கு பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள உள்ளூர் தெய்வமான வேணுகோபாலஸ்வாமியை குறிப்பிடும் விதத்தில் வேணுகோபாலா வனவிலங்கு பூங்கா என்றும் மறுபெயரிடப்பட்டது. நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உட்சென்று பார்த்து ரசிக்கலாம். இந்த வனவிலங்கு பூங்காவில் புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் வசிக்கின்றன.

Amit Das

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X