Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

நாம் குழந்தைகளாக இருந்தப் போது வானத்தைப் பார்த்து ரசித்திருப்போம், பல கதைகள் பேசி மகிழ்ந்து இருப்போம். ஏன் இன்றளவும் நமது தாத்தா பாட்டி சொன்ன கதைகளின் இனிமையை வானத்தோடும் நட்சத்திரங்களோடும் நினைவு கூர்ந்து பார்க்கும் பழக்கமுண்டு. இரவின் மடியில் படுத்துக்கொண்டு இருண்ட வானத்தில் மின்னுகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ரசிப்பது என்பது வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான அனுபவமாகும். உங்களது மனதை ஒரு ஆனந்த நிலைக்கு கொண்டுப் போகும் இந்த மாயாஜாலத்தில் நீந்தி மகிழ இந்தியாவில் பல இடங்கள் உள்ளன. நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை ரசிக்கக்கூடிய இடங்களின் பட்டியல் கீழே உள்ளது, என்னவென்று பாப்போம் வாருங்கள்!

ரான் ஆஃப் கட்ச், குஜராத்

ரான் ஆஃப் கட்ச், குஜராத்

உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனமாக, வெள்ளை உப்பு சதுப்பு நிலத்தின் எல்லையற்ற விரிவாக்கமாக, குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் நீண்ட காலமாக நாட்டின் ஸ்டார்கேஸிங் பட்டியலில் இருந்து வருகிறது. துடிப்பான நாட்டுப்புற கலாச்சாரம், நடனங்கள், இரவு முகாம்கள் வெள்ளை நிற மணல், கோஸ்ட் லைட்ஸ் என இங்கு இரவைக் கழிப்பது மிகவும் ஒரு அருமையான காட்சி விருந்தாக அமையும். மேலும் வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் வெறும் கண்ணால் கிட்டத்தட்ட 6 மேக்னிடியுட் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள்.
குளிர்காலத்தில், அதாவது அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ரான் ஆஃப் கட்ச் செல்ல சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. ரான் ஆஃப் கட்ச்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம், 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள புஜ் விமான நிலையம் ஆகும். புஜ்ஜில் இருந்து வாடகை வண்டி மூலமாகவோ அல்லது அகமதாபாத்தில் இருந்து வாடகை வண்டி அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி ரான் ஆஃப் கட்ச்சை சென்றடையலாம்.

 பாங்காங் த்ஸோ மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு, லடாக்

பாங்காங் த்ஸோ மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு, லடாக்

இந்தியாவில் ஸ்டார்கேஸிங் செய்வதற்கான சிறந்த இடங்களில் லடாக்கின் பாங்காங் த்ஸோ மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு முதன்மை வகிக்கிறது. அழகான ஏரிகள் மற்றும் வியத்தகு நிலப்பரப்புகளால் அலங்கரிக்கப்பட்ட லடாக், பகலில் ஸ்தூபிகள் மற்றும் மடாலயங்கள் எனவும் இரவில் வியக்கத்தக்க காட்சி மற்றும் வண்ணங்களை மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமானது. பலர் இந்த இடங்களுக்கு ட்ரெக்கிங் செய்து பால்வெளியில் மின்னுகின்ற மில்லியன் கணக்கான நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக ஏரியைச் சுற்றி முகாமிடுகிறார்கள்.
லடாக்கிற்கு மக்கள் பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் வருகைத் தர விரும்புகின்றனர். புது டெல்லியில் இருந்து லேக்கு நேரடி விமான சேவை உண்டு. லேவில் இருந்து வாடகை சார் மூலமாக நீங்கள் இந்த இடங்களை எளிதில் அடையலாம்.

 ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, அதன் உயரம், தெளிவான வானம் மற்றும் தூய்மை காரணமாக இந்தியாவில் ஸ்டார்கேஸிங் செய்வதற்கான மற்றொரு பிரபலமான ஹாட்ஸ்பாட் ஆக திகழ்கிறது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள கிப்பர் நகரம் உலகின் மிக உயரமான வாகனம் செல்லக்கூடிய கிராமமாக கருதப்படுகிறது. 14000 அடி உயரத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு இந்தியாவில் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாகவும் மற்ற எல்லாவற்றிலும் தனித்து நிற்கும் இடமாகவும் கருதப்படுகிறது. ஸ்பிட்டியில் உள்ள மற்ற ஸ்டார்கேஸிங் இடங்களான தபோ, லோசர், தங்கர் மற்றும் கோமிக் ஆகியவை இரவு வானத்தின் மிகவும் வசீகரிக்கும் காட்சியைக் கொடுக்கின்றன.
மே முதல் ஜூன் வரையிலும் மற்றும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலுமான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இமாச்சலுக்கு செல்லலாம். சாலை வழியாக ஸ்பிட்டிக்கு செல்ல பூந்தர் விமான நிலையத்திலிருந்து 6 மணிநேரமும், சண்டிகர் விமான நிலையத்திலிருந்து சுமார் 13 மணிநேரமும் ஆகிறது.

 நீல் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார்

நீல் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார்

அந்தமான் மற்றும் நிக்கோபாரின் 572 தீவுகளில் ஒன்றான நீல் தீவு பசுமையான காடுகள், அழகான கடற்கரைகள், தூய்மையான காற்று மற்றும் அமைதியான சூழல்களுக்கு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். மாலைக்குப் பிறகு நீலமான நீர், பளபளக்கும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவு, வானத்துடன் ஒன்றிணைந்து நம்மை பயப்பில் ஆழ்த்தும் இயற்கைக்காட்சியை உருவாக்குகிறது. மாசு மற்றும் இரைச்சல் இல்லாததால் நீல் தீவைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் சுத்தமாகவும், விண்வெளி ஆர்வலர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஸ்டார்கேஸிங் பார்வையாளர்கள் இந்த மாயாஜாலத்தை அனுபவிக்க இங்கு வருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் தீவு கண்கவர வைக்கும் வகையிக் இருந்தாலும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை வானம் தெளிவாகத் தெரிவதால், நீல் தீவில் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு இது சிறந்த நேரமாகக் கூறப்படுகிறது. போர்ட் பிளேயருக்கு விமானம் அல்லது கப்பல் மூலமாக சென்று அங்கிருந்து இந்த தீவை அடையலாம்.

குடகு, கர்நாடகா

குடகு, கர்நாடகா

ஸ்டார்கேஸிங் செய்ய வட இந்தியாவிற்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தென்னிந்தியாவிலும் மிக அற்புதமான ஸ்டார்கேஸிங் இடமொன்று உள்ளது. பிரமிக்க வைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மத்தியில், கண்ணைக் கவரும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகான காபி தோட்டங்களுக்கு நடுவே அமர்ந்துக் கொண்டு அமைதியாக நாம் நட்சத்திரங்களை ரசிக்கலாம். பல சாகச விரும்பிகள் குடகின் காடுகளில் முகாமிட்டு, மலை சிகரங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்க்கும் நட்சத்திரங்களின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறார்கள்.
அக்டோபர் முதல் மார்ச் வரை நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு கூர்க்கிற்குச் செல்ல சிறந்த நேரமாகும். குடகு கர்நாடாகாவின் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் எளிதாக பேருந்து அல்லது டாக்சி மூலம் குடகை அடையலாம்.

சோன்மார்க், காஷ்மீர்

சோன்மார்க், காஷ்மீர்

தங்கத்தின் புல்வெளி என்றழைக்கப்படும் சோன்மார்க் பனி படர்ந்த இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கிராமமாகும். பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த நிலப்பரப்பு சாகசப் பயணிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு இடமாகும். இந்த இடத்தில் உள்ள தூய்மை மற்றும் இரைச்சல் இல்லாத வளிமண்டலமானது, இரவு வானத்தை மில்லியன் கணக்கான மின்னும் நட்சத்திரங்களுடன் ஒரு வெளிப்படையான நிழலாக மாற்றுகிறது.
கேம்பிங், ஸ்டார்கேஸிங், ட்ரெக்கிங், ராஃப்டிங் மற்றும் பல சிலிர்ப்பூட்டும் செயல்களுக்கு ஏற்ற சோன்மார்க், உலகெங்கிலும் உள்ள பயணிகளின் ஒரு கனவு இடமாகும். ஸ்ரீநகரிலிருந்து 7௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள சோன்மார்க்கை சாலை வாயிலாக அடையலாம். சோன்மார்க்கை ஆண்டு முழுவதும் பார்வையிடலாம், இருப்பினும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் பள்ளத்தாக்கின் சிறந்த அனுபவங்களை வழங்குகிறது.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்

ஜெய்சல்மர், ராஜஸ்தான்

தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள ஜெய்சல்மர் கோட்டையில் ஸ்டார்கேஸிங் செய்வது மிகவும் விசேஷமான ஒன்றாகும். இந்த பிரபலமான சுற்றுலாத் தலத்திற்கு மக்கள் பாலைவன முகாம், ஒட்டக சஃபாரி மற்றும் ஜீப் சஃபாரி ஆகியவற்றிற்காக இங்கு வருகிறார்கள். ஆனாலும் அமைதியான பாலைவன வளிமண்டலத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்து ரசிக்கவும் நமக்கு இங்கு ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதற்கு குளிர்காலமே சிறந்த பருவமாகும், மேலும் ஜோத்பூரிலிருந்து இங்கு செல்ல நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்தோ அல்லது பொது பேருந்திலோ செல்லலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X