Search
  • Follow NativePlanet
Share
» »தமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!

தமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!

தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் க

By Udhaya

தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகள் நிரம்பிய மாவட்டமாக தெமங்லாங் உள்ளது. அரிய வகை ஆர்கிட் பூக்கள், கறைபடாத கானகங்கள், அரிய உயிரினங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளும் உள்ள தெமங்லாங், ஹார்ன்பில் பறவைகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. சரி வாருங்கள் தெமலாங்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு, கட்டாயம் தவற விடக் கூடாத பத்து இடங்களை பற்றியும் பார்க்கலாம்.

 அறிமுகம்

அறிமுகம்

மணிப்பூரின் மேற்குப் பகுதியில் இருக்கும் தெமங்லாங் மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் சேனாபதி மாவட்டமும், தெற்கில் சூரசந்த்பூர் மாவட்டம் மற்றும் மேற்கில் இம்பால் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளும் சூழ்ந்துள்ளன. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெமங்லாங் மணிப்பூரிலேயே மிகவும் குறைந்த மக்கள் தொகையையுடைய மாவட்டமாகும். குன்றுகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு நடுவில், சிறு சிறு கிராமங்களின் அணிவகுப்புகள் இருப்பது இந்த இடத்தின் மந்திர மகிழ்ச்சியை வரவழைப்பதாக உள்ளது.

Dangmei

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


தெமங்லாங்கின் நிலப்பகுதிகளில் உள்ள மணல்கற்கள், ஸ்கிஸ்ட் மற்றும் ஷேல் ஆகியவற்றால் இங்கிருக்கும் மணலும், பாறைகளும் கடினமானதாக இல்லை. இதன் விளைவாக தெமங்லாங்கில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. தெமங்லாங்-ஐ சுற்றியிருக்கும் சுற்றுலாப் பகுதிகள் பாரக் நதி மற்றும் ஏழு நீர்வீழ்ச்சிகள், தாரோன் குகை, ஸெய்லாட் ஏரி மற்றும் புனிங் புல்வெளி ஆகியவை தெமங்லாங்கை சுற்றியுள்ள சில சுற்றுலா தலங்களில் முக்கியமானவையாகும்.

Dangmei

விலங்குகள் பறவைகள்

விலங்குகள் பறவைகள்

உயிர்-பன்முகதன்மையின் உறைவிடம் தெமங்லாங் பகுதிகள் சில வகையான மிகப்புதுமையான மற்றும் அரிய உயிரின வகைகளைச் சேர்ந்த பறவைகளும் மற்றும் விலங்குளும் இருப்பதால் இவ்விடம் உயிர்-பன்முக தன்மையின் உறைவிடமாக கருதப்படுகிறது. தெமங்லாங் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹாக் மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகளை காணும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இதன் வனப்பகுதிகளில் புலிகளையும் காண முடியும்.

Dangmei

 பழங்குடியினர்

பழங்குடியினர்

இந்த வனப்பகுதிகள் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள், மூங்கில் காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல காடுகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஸேலியாங்ரோங் நாகாஸ் மற்றும் குகிஸ் இனத்தவர் தெமங்லாங்கின் முக்கியமான பழங்குடியினராக உள்ளனர்.

Dangmei

 முக்கிய திருவிழாக்கள்

முக்கிய திருவிழாக்கள்


ஆரஞ்ச் திருவிழா, ரிஹ்-ங்காய் (சாகா ங்காய்), குடுய்-ங்காய், பன்ருஹ்மெய் மற்றும் டாரங் என பல்வேறு திருவிழாக்களும் தெமங்லாங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Dangmei

 தெமங்லாங்கை அடையும்வழிகள்

தெமங்லாங்கை அடையும்வழிகள்

தெமங்லாங் வர திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் வந்து சேரலாம்.

சாலை

39 மற்றும் 53வது தேசிய நெடுஞ்சாலைகள் மணிப்பூரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. தெமங்லாங் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 53வது தேசிய நெடுஞ்சாலையில் பழைய கச்சார் சாலை வழியாக வந்து, தெமங்லாங் கோங்சாங் சாலையில் பயணிக்க வேண்டும். இம்பாலிலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் மாநில அரசு பேருந்துகள் தெமங்லாங்கிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இரயில்

மணிப்பூரில் இரயில் நிலையம் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள திமாபூர் இரயில் நிலையம் தான் தெமங்லாங்கிற்கு மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாக உள்ளது. இங்கிருந்து தெமங்லாங் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள் இம்பாலில் ஓய்வெடுத்து, பிறகு 158 கிமீ தொலைவில் உள்ள தெமங்லாங் செல்லலாம். தெமங்லாங்கிற்கு சென்று வர இம்பால் மற்றும் திமாபூரிலிருந்து தொடர்ச்சியான வாகன வசதிகள் உள்ளன.

விமானம்

158 கிமீ தொலைவில் உள்ள இம்பால் மாவட்ட விமான நிலையம் தான் தெமங்லாங் வருவதற்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த விமான சேவைகளை தினமும் கொண்டுள்ளது. இங்கிருந்து தெமங்லாங் சென்று வருவதற்கான வாகன வசதிகள் எளிதில் கிடைக்கின்றன.

Dangmei -

 தெமங்லாங் வர மிகவும் ஏற்ற பருவம்

தெமங்லாங் வர மிகவும் ஏற்ற பருவம்


மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் தெமங்லாங் சுற்றுலா வர ஏற்ற பருவமாகும். அந்நேரங்களில் போதுமான அளவு குளிர் பாதுகாப்பு உடைகளை கொண்டு வருதல் நலம். மேலும் சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தின் இறுதியிலும் சுற்றுலா வரலாம். எனினும், மழைக்காலங்களில் போக்குவரத்து மிகவும் கடினமாக மாறிவிடுவதால், மழைக்காலங்களை சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

Dangmei

Read more about: manipur travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X