Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் டாப் 5 சுற்றுலாத்தலங்கள்

தமிழ்நாட்டின் டாப் 5 சுற்றுலாத்தலங்கள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள் உள்ள அற்புத மாநிலம் என்றும் குன்றா தித்திப்புடன் தமிழ் தவழும் தமிழகம் ஆகும். எகிப்திய பிரமிடுகளுக்கு இணையான தொன்மையும், கட்டிடக்கலை நுட்பத்துடனும் கட்டப்பட்ட கோயில்கள், மனம் முழுக்க பரவசம் நிறைந்திடும் இயற்கை காணிடங்கள், சில்லிடும் குளிர் காற்று வீசும் மலை வாசஸ்த்தலங்கள் என இங்கு சுற்றுலாத்தலங்களுக்கு குறையேதுமில்லை. வாருங்கள், தமிழ்நாட்டின் டாப் 5 சுற்றுலாத்தலங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம்.

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

கோலிவூட் சினிமா, மெரினா கடற்க்கரை, வானுயர்ந்த கட்டிடங்கள், நீங்காத பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் என சென்னை என்னும் சொல்லை கேட்கும் போதேல்லாம் நம் எல்லோர் மனதிலும் ஒரு பிம்பம் எழும். எப்படியிருந்தாலும் எல்லோருக்கும் ஒருவகையில் இல்லையில்லை பலவகையிலும் மிகப்பிடித்த நகரமென்றால் சென்னை தான்.

Photo:Dr. Mithun James

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

மெரினா கடற்க்கரை:

மெரினா கடற்கரையை தவிர்த்துவிட்டு பலராலும் சென்னை வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 13 கி.மீ நீளம் உள்ள இந்த கடற்க்கரை தான் இந்தியாவிலேயே மிக நீளமானதாகும். சென்ட் ஜார்ஜ் கோட்டை முதல் பெசன்ட் நகர் வரை நீண்டிருக்கும் இந்த பீச்சில் அமைதியாக கடலை ரசித்தபடி கடலை போடுவது அத்தனை ஆனந்தமான அனுபவமாக அமையும்.

Photo:Prasenna Sundar

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

இந்த பீச்சை ஒட்டியே அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, நீச்சல் குளம், மிக நன்றாக பராமரிக்கப்படும் நடைபாதைகள் போன்றவை உள்ளன. அதிகாலை சூரியன் உதயமாகும் போதும், மாலையில் சூரியன் தொடுவானில் மறையும் போதும் நிகழும் வர்ணஜாலங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

Photo:Balasubramanian G Velu

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்:

சென்னையில் இருக்கும் முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். சைவக் குறவர்களால் பாடப்பட்ட கோயிலான இங்கு சிவபெருமானை கபாலீஸ்வரராகவும் பார்வதி தேவியை கற்பகாம்பாளகவும் வழிபடலாம்.

Photo:Nagesh Jayaraman

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பண்டையகால திராவிட கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும் இந்தக்கோயிலை ஒட்டியே மிகப்பெரிய கோயில் குளமும் இருக்கிறது. கோயிலில் சுவாமி தரிசனம் முடித்தபிறகு அப்படியே மயிலாப்பூரில் கிடைக்கும் மணம் கமழும் டிகிரி காப்பியை சுவைக்க தவறாதீர்கள்.

Photo:mountainamoeba

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

மயிலாப்பூர் டிகிரி காப்பி.

Photo:Ambarish

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

சென்னையில் ஷாப்பிங்:

படிப்பு, வேலை சார்ந்த விஷயங்களுக்கு அடுத்தபடியாக சென்னையை நோக்கி மக்களை வரத்தூண்டும் ஒரு விஷயமென்றால் அது ஷாப்பிங் தான். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சென்னையின் சில குறுகலான தெருக்களில் நுழையக்கூட முடியாத அளவு மனித தலைகளால் நிரம்பியிருக்கும்.

Photo:McKay Savage

சிங்கார சென்னை:

சிங்கார சென்னை:

இவை தவிரவும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சர்ச்சுகள், நவீன கேளிக்கை பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் என சென்னையில் சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. இதனாலேயே தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரிசையில் சென்னை இடம் பிடிக்கிறது.

Photo:Vinoth Chandar

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

வங்காள விரிகுடாவின் கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் அற்புதங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு நகரம் தான் பாண்டிச்சேரி. பிரஞ்சு காலணியாக இருந்து தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் இந்நகரில் இன்றும் பிரஞ்சு காலச்சார தாக்கத்தை கண்கூடாக காண முடியும்.

Photo:Jean-Pierre Dalbéra

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

ஆரோவில்லே - சமத்துவத்தின் நகரம்:

பாண்டிச்சேரியின் மிக முக்கிய ஈர்ப்பிடமாக திகழ்வது அரவிந்தர் ஆஸ்ரமத்தின் கீழ் இயங்கும் ஆரோவில்லே என்னும் சமத்துவ நகரம் தான். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் பண்மொழி பேசும் மக்கள் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையோடு வாழும்நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே இந்த நகரமாகும்.

Photo:vaiah PA

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

இந்த நகரத்தின் மையத்தில் மாத்ரிமந்திர் என்னும் தங்க பந்து வடிவத்தில் தியான கூடம் ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்களும் குறிப்பிட்ட நேரங்களில் இதனுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Photo:Sudhamshu Hebbar

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

மெர்சலாக்கும் பாண்டிச்சேரி கடற்க்கரை:

பாண்டிச்சேரிக்கு வருபவர்களை வசீகரிக்கும் இடமென்றால் அது ப்ரொமனெட் பீச் எனப்படும் பாண்டிசேரி கடற்க்கரை தான். 1.2 நீளமுள்ள இந்த கடற்க்கரை நெடுகிலும் பாண்டிச்சேரியின் முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. போர் நினைவிடம், தலைமை செயலகம், மகாத்மா காந்தி சிலை, டுபெளிக்ஸ் பூங்கா, லே கபே போன்றவை கடற்கரையை ஒட்டி அமைந்திருகின்றன.

Photo:Vinamra Agrawal

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

குட்டி பிரான்சு - பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியை எப்படி சென்றடைவது என்பது பற்றிய தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். பாண்டிச்சேரியில் நாம் தங்குவதற்கு பிரஞ்சு காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் இயங்கும் ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றை பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Sarath Kuchi

தூங்கா நகரம் - மதுரை :

தூங்கா நகரம் - மதுரை :

மதுரை, காலத்தின் ஓட்டத்தில் எண்ணற்ற நகரங்கள் தனது சுயத்தை இழந்து நின்றாலும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்ப்பட்ட தனது அடையாளங்களை இன்றும் பெருமையுடன் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது முக்கூடல் நகரமான மதுரை.

Photo:Vinoth Chandar

தூங்கா நகரம் - மதுரை :

தூங்கா நகரம் - மதுரை :

மீனாட்சி அம்மன் கோயில்:

நவீன கட்டிடக்கலைக்கு சவால் விடும் வகையில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது பாண்டியர் கட்டியெலுப்பிய மீனாட்சி அம்மன் கோயில். மதுரை பேருந்து நிலையத்தை ஒட்டியே அமைந்திருக்கும் இக்கோயிலில் பேரழகு பொருந்திய மீனாட்சி அம்மன் பச்சை பட்டுடுத்தி காட்சி தருகிறார்.

Photo:Simply CVR

தூங்கா நகரம் - மதுரை :

தூங்கா நகரம் - மதுரை :

நாயக்கர் மஹால்:

மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் கலவையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் முற்கால மன்னர்கள் வாழ்ந்த இடங்களில் எஞ்சியிருக்கும் சிலவற்றில் இந்த நாயக்கர் மஹால் முக்கியமானது.

Photo:Vinay Datta

தூங்கா நகரம் - மதுரை :

தூங்கா நகரம் - மதுரை :

மதுரை ஸ்பெஷல்:

மதுரையில் கிடைக்கும் உணவை ஒரு முறை ருசித்தவர்கள் பின் வாழ்க்கை முழுக்க அதுபோல ருசித்து சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி சுவைக்கு அடிமையாக்கவல்லது மதுரையில் கிடைக்கும்கையால் அரைத்த மசாலாவில் செய்த உணவுகளும், உயிரை குளிரவைக்கும் ஜிகிர்தண்டாவும். மதுரை ஸ்பெஷல் சிக்கன் குருமா, பரோட்டாவை கண்டிப்பாக சுவைத்து மகிழுங்கள்.

Photo:KARTY JazZ

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

வருடம் முழுவதும் சுட்டெரிக்கும் வெய்யிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டில் ஓரிடம் இருக்குமானால் அது ஊட்டி தான். ஆங்கிலேயர் காலத்தில் முறையான நகரமாக வளர்ச்சி பெற்ற இங்குகாதல் கணவருடனோ மனைவியுடனோ சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

Photo:Vinoth Chandar

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

தொட்டபெட்டா மலை சிகரம், ஊட்டி ஏரியில் நடக்கும் படகு சவாரி, தாவரவியல் பூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களாக இருக்கின்றன.

Photo:Swaminathan

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

ஊட்டி - இவள் மலைகளின் ராணி:

ஊட்டியை எப்படி அடைவது, ஊட்டியில் இருக்கும் முக்கிய ஹோட்டல்கள் எவை எவை என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Raj

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

அரேபியக்கடல், இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா என முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியா குமரி அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரம். கேரளத்திற்கு பக்கத்தில் இருப்பதால் இங்கு தமிழ் கலாச்சாரமும், கேரளா கலாச்சாரமும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன. நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் அளவிற்க்கு குமரியின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் என தனக்கென தனியொரு அடையாளத்தை கொண்டிருக்கும் இங்கு சுற்றுலா வருவதற்கான இடங்களும் நிறையவே உண்டு.

Photo:M.Mutta

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

கன்னியா குமரிக்கு வருபவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் குமரி முனையில் கதிரவன் தன் பொன்னிற கரங்களை பரப்பி துயில் எழுவதை காண்பதுதான். பறந்து விரிந்த நீலக்கடலின் பின்னிருந்து வர்ணஜாலம் நிகழ்த்தி சூரியன் உதயமாவதை பார்க்க அத்தனை அழகாக இருக்கும். அதே போலவே சூரியன் அஸ்தமனமாவதை பார்க்கவும் ஏராளமானவர்கள் கூடுகின்றனர்.

Photo:rundnd

Photo:Premnath Thirumalaisamy

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

இன்று உலகத்தில் இருக்கும் மொழிகளிலேயே பழமையானதாய் அதே சமயம் எதற்கும் சளைக்காத இளமையுடன் தமிழ் இருக்கிறதென்றால் வள்ளுவன் இல்லாமல் அது நடந்திருக்காது. அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழக அரசால் கட்டப்பட்டு 2000மவாது ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் விதமாக 133 அடி உயரத்தில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள குட்டி தீவு ஒன்றில் கட்டப்பட்டிருக்கிறது.

Photo:Premnath Thirumalaisamy

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

நாஞ்சில் நாடெனும் போதேனிலே ஒரு மகிழ்ச்சி பிறக்குது முகத்தினிலே:

கன்னியா குமரியை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். குமரியில் அமைந்திருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

Photo:kulasekaran Seshadri

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X