Search
  • Follow NativePlanet
Share
» »மேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை! இன்னிக்கு விஷ்ணுவ வழிபடுங்க!

மேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை! இன்னிக்கு விஷ்ணுவ வழிபடுங்க!

திருப்பதி மட்டுமில்ல இந்த கோவில்களுக்கு போனவங்களும் நிச்சயம் பணக்காரனாவாங்க!

இன்னிக்கு விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள். இன்னிக்கு விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடி, வாழ்வில் வசந்தம் வீசும். அர்த்த ராத்திரியில் கொட்டோ கொட்டென்று அதிர்ஷ்டம் கொட்டினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. முக்கியமாக நல்ல செய்திகள் பல வந்து சேரும் என்கிறார்கள் ஆன்மீக வாதிகள். சரி எந்த கோவில்களுக்கெல்லாம் செல்லலாம்?

ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!

விஷ்ணு பகவான் பற்றி அரிய தகவல்களையும், விஷ்ணு கோவில்களுக்கு செல்லும் ஆன்மீக சுற்றுலா பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

விஷ்ணு கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள்

விஷ்ணு கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள்

முதலில் விஷ்ணு கோவில்கள் இருக்கும் இடங்களின் அருமை பெருமைகளையும், அந்த கோவில்களின் சிறப்புகளையும் காண்போம். தொடர்ந்து நாம் அந்தந்த கோவில்களுக்கு எப்படி செல்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலைவிட சிறந்த கோவில் தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா?திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலைவிட சிறந்த கோவில் தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா?

Shanze1

 திருப்பதி

திருப்பதி


ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த திருப்பதி நகரம்.

திருப்பதிக்கு சென்னையிலிருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் மிக எளிதில் செல்லமுடியும்.

திருப்பதி ஏழுமலைக்கு மேல் இருக்கும் நாராயணகிரி மலையில் ஏழு மலையானின் பாதச் சுவடுகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானின் பாதச் சுவடுகளுக்கு சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.

திருப்பதியில் யாருக்கும் தெரியாமல் நடந்துவரும் மர்மங்கள்.. வெளியில் கசிந்த ரகசியம்திருப்பதியில் யாருக்கும் தெரியாமல் நடந்துவரும் மர்மங்கள்.. வெளியில் கசிந்த ரகசியம்

Nikhilb239

 திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அல்லது வெங்கடேஸ்வரா கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை தலமாகும்.

இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய கோயிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

எப்படி அடைவது

ரயில்கள் மூலம்

ரயில்களின் எண்ணிக்கை - 3

1.சப்தகிரி விரைவு (காலை 6.25மணி)
2.திருப்பதி விரைவு(மதியம் 2.10மணி)
3.திருப்பதி விரைவு(மாலை 4.35மணி)

மூன்று ரயில்களும் 3.30 மணி நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதியை அடைந்துவிடும்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

ஆந்திர மாநில பேருந்தில் 273 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.

தனியார் பேருந்துகளில் 450 முதல் 850ரூபாய் வரை வசதிக்கேற்ப ஆகின்றது.

விஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றிய ஈசன்.. கண் திறந்து பார்த்ததாக புரளிவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றிய ஈசன்.. கண் திறந்து பார்த்ததாக புரளி

rajaraman sundaram

திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோவில்

திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோவில்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது. இது மிகவும் சிறப்பாக இந்த பகுதியில் பார்க்கப்படுகிறது.

திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்

எப்படி அடைவது

கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.

திருவட்டாறுக்கு ரயிலில் பயணிப்பவர்கள் குமரி, நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை வண்டிகளில் பயணிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் கேரள அரசு பேருந்துகள் இங்கு சேவை செய்கின்றன.

திருவட்டாறுல இவ்ளோ விசயம் இருக்கா? இது தெரியாம போச்சேதிருவட்டாறுல இவ்ளோ விசயம் இருக்கா? இது தெரியாம போச்சே

Infocaster

 நெல்லையப்பர் கோவிலில் பெருமாளின் சிறப்பு

நெல்லையப்பர் கோவிலில் பெருமாளின் சிறப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருக்கும் பெருமாள் சிலையில் ஒரு வியக்கத்தக்க அடையாளம் காணப்படுகிறது. அந்த அடையாளம் சிவலிங்கம் ஆகும். பெருமாளின் மார்பில் அந்த குறியீடு காணப்படுகிறது.

நெல்லையப்பர் கோவிலின் மற்ற ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்நெல்லையப்பர் கோவிலின் மற்ற ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

arunpnair

உடுப்பி கிருஷ்ணரின் பெருமைகள்

உடுப்பி கிருஷ்ணரின் பெருமைகள்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் பெரிய சுற்றுலாத் தலம் கிருஷ்ணர் கோவில். இங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு நவராத்திரி நாட்களில் ஒன்பது நாட்களும் புதுப் புடவை உடுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் பெண் போல அலங்கரிக்கப்படுகிறார் விஷ்ணு பகவான்.

மேஷ ராசிக்கு உகந்தது

உடுப்பியில் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகள்

Avinashisonline

பத்ராச்சலம்

பத்ராச்சலம்

ஆந்திர மாநிலம் பத்ராசலம் எனும் தலத்தில் ராமர் வீற்றிருக்கிறார். இங்குள்ள ராமர் சிலை கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இது மிகவும் ஆச்சர்யமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது.

இன்னும் பல அதிசயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Kalyan

 திருவரங்கம் ரங்கநாதர் கோவில்

திருவரங்கம் ரங்கநாதர் கோவில்

இடம் - இது திருச்சி மாவட்டம் திருவரங்கம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

திருவிழா - வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு நேரங்கள் - காலை 6 முதல் 7.15 மணி வரை, காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும்.

சிறப்புகள் - இந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரம் கொண்ட கோவில் இதுவாகும்.

ஸ்ரீரங்கம் கோவிலால் இறந்து போன நூற்றுக்கணக்கானோர்... திடுக்கிடும் வரலாறுஸ்ரீரங்கம் கோவிலால் இறந்து போன நூற்றுக்கணக்கானோர்... திடுக்கிடும் வரலாறு

Richard Mortel

உறையூர் அழகிய மணவாளர் திருக்கோவில்

உறையூர் அழகிய மணவாளர் திருக்கோவில்

எங்குள்ளது

திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ளது இந்த கோவில். திருச்சியிலிருந்தும் தஞ்சாவூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

திருவிழா

நவராத்திரி மற்றும் திருப்பாணாழ்வார் திருநாள் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும். நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

மிதுன ராசிக்கு உகந்தது

சிறப்பம்சம்

திருப்பாணாழ்வார், கோச்செங்கட்சோழர் ஆகியோர் பிறந்த தலம் இதுவாகும்.

பிறக்கும் முன்னரே மன்னராக முடிசூட்டப்பட்டவர் இவர்பிறக்கும் முன்னரே மன்னராக முடிசூட்டப்பட்டவர் இவர்

Ssriram mt

 உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோவில்

உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோவில்

எங்குள்ளது

திருச்சி மாவட்டம் உத்தமர் கோவிலில் அமைந்துள்ளது இந்த கோவில். இதற்கு உத்தமர் கோவில் என்றே பெயர். இதன் காரணமாகவே இந்த ஊருக்கும் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

திருவிழா

சித்திரை மற்றும் வைகாசி இரண்டு மாதங்களிலும் இந்த கோவிலில் சிறப்பு பூசைகளும் விழாக்களும் நடைபெறுகிறது.

சித்திரை மாதம் பெருமாளுக்கு தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. சிவனுக்கு வைகாசியில் நிகழ்த்தப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் அதிசய தலம் இதுவாகும். இங்கு சென்றால் வேண்டிய வரம் கிடைத்து விரைவில் பணக்காரர் ஆகமுடியும்.

வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!

Nsmohan

திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவில்

திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவில்


எங்குள்ளது

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் அமைந்துள்ளது

திருவிழா

சித்திரை கோடை திருநாள், சித்ராபவுர்ணமி விழா, ஆவணி விழா, பங்குனி திருவோணம் ஆகியன இங்கு முக்கிய நிகழ்வுகளாகும்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

கல் அறைகள் கொண்ட இந்த கோவில் கோட்டை போல அமைக்கப்பட்டிருக்கிறது. தெளிவாக கேட்கும் எதிரொலி எழுப்பும் வகையில் இந்த கோவில் இருக்கிறது.

Ssriram mt

சுந்தராஜ பெருமாள் கோவில்

சுந்தராஜ பெருமாள் கோவில்

எங்குள்ளது

திருச்சி மாவட்டம் அன்பில் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த கோவில்.

திருவிழா

மாசித் திருவிழாவும், வைகுண்ட ஏகாதசியும் இங்கு மிகச் சிறப்பான விழாவாகும்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

சிறப்பம்சம்

கோவிலின் விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பாக காணப்படுகிறது.

அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்

Nsmohan

அப்பக்குடத்தான் திருக்கோவில்

அப்பக்குடத்தான் திருக்கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் கோவில் என்று நம்பப்படுகிறது.

திருவிழா

பங்குனி உத்தரம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணர் பிறந்த நாள்களின்போது மிகவும் சிறப்பாக இங்கு விழா கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

உலகில் இரவு நேரத்தில் அப்பம் செய்து படைக்கப்படும் ஒரே கோவில் இதுதான்

பஞ்சரங்கத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

காவு வாங்கும் மர்மப் பிரதேசம்... தில் இருந்தா போய்தான் பாருங்களேன்..!காவு வாங்கும் மர்மப் பிரதேசம்... தில் இருந்தா போய்தான் பாருங்களேன்..!

Ssriram mt

ஹரசாப விமோசன பெருமாள்

ஹரசாப விமோசன பெருமாள்

முன் ஜென்மத்தில் நிகழ்ந்த சாபங்களைத் தீர்க்க உதவும் கோவில் இதுவாகும்.

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் அமைந்துள்ளது இந்த கோவில். இது 7 வது திவ்யதேசம் கோவில் ஆகும்.

திருவிழா

பங்குனி மாதம் பிரமோற்சவம் விழா மிக சிறப்பாக நடைபெறும். மேலும் ஐப்பசி, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீப திருவிழா ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு இருக்கிறார்கள்.

Jamstechs

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோவில்

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கூடலூர் அருகே அமைந்துள்ளது இந்த கோவில்.

திருவிழா

வைகாசி விசாகம் நாள்களில் 10 நாட்கள் மொத்தமாக சிறப்பான திருவிழா கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

கருவறைக்கு பின்புறத்தில் இருக்கும் பலா மரத்தில் இயற்கையான சங்கு வடிவம் தோன்றியுள்ளது.


Ssriram mt

கஜேந்திர வரதன் திருக்கோவில்

கஜேந்திர வரதன் திருக்கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் எனும் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு கஜேந்திரர் எனும் பெயரில் பெருமாள் தரிசனம் தருகிறார்.

திருவிழா

ஆடி பவுர்ணமி, வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை

Sundarstravels

வல்வில் ராமன் கோவில்

வல்வில் ராமன் கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புள்ளம்பூதங்குடி எனும் கிராமத்தில் வல்வில் ராமன் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வல்வில் ராமன் எனவும், சக்ரவர்த்தி திருமகன் எனவும் அழைக்கப்படுகிறார்.

திருவிழா

வைகுண்ட ஏகாதசி நாளில் இங்கு திருவிழாக் கோலம் பூண்டு, கோவில் களைகட்டி நிற்கும்.

கும்ப ராசிக்கு உகந்தது

சுற்றுவட்டாரத்திலிருந்து பொதுமக்களும் பக்தர்களும் சேர்ந்து வந்து வழிபடுகிறார்கள்.

நடைதிறப்பு

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

ராமர் பொதுவாக கோவில்களில் நின்றபடியே அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த கோவிலில் சயன கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.

சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 10 வது ஆகும்.

Ssriram mt

ஆண்டளக்கும் அய்யன் கோவில்

ஆண்டளக்கும் அய்யன் கோவில்

எங்குள்ளது

தஞ்சை மாவட்டம் ஆதனூரில் அமைந்துள்ள இந்த கோவில் ஆண்டளக்கும் அய்யனான ரங்கநாதருக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அம்மன் தாயார் பார்க்கவி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

திருவிழா

வைகாசியில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும்

நடைதிறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


சிறப்பம்சம்

காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் இந்த கோவில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

Ssriram mt

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவிலில் ஆராவமுதன் எனும் பெயரில் பெருமாள் அருள் தருகிறார்.

திருவிழா

சித்திரை திருவிழா, தை மாதத்தில் நடைபெறும் உற்சவம், வைகாசியில் நடைபெறும் உற்சவம், மாசி மகம், வைகுண்ட ஏகாதசி எனும் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

நடைதிறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

Adam63

 ஒப்பிலியப்பன் திருக்கோவில்

ஒப்பிலியப்பன் திருக்கோவில்

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த ஒப்பிலியப்பன் திருக்கோவில்.

திருவிழா

புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கடகராசிக்கு உகந்தது


சிறப்பம்சம்

திருநாகேஸ்வரம் கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு திருப்பதியைப் போல தனித்துவமான சுப்ரபாதம் உண்டு

Arunasank

Read more about: temple tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X