Search
  • Follow NativePlanet
Share
» »மிசோரமில் ஆதி தமிழர்கள்? அதிர வைத்த ஆய்வு....! அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

மிசோரமில் ஆதி தமிழர்கள்? அதிர வைத்த ஆய்வு....! அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

மிசோரமில் ஆதி தமிழர்கள்? அதிர வைத்த ஆய்வு....! அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

சிந்து சமவெளி மற்றும் மதுரை கீழடி போலவே மிசோரமிலும் ஆதி மனிதர்கள் மிகுந்த பண்பாட்டோடு, பெரும் வசதிகளோடு வாழ்ந்து வந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இவர்களின் வரலாற்றை ஆராய்ந்தால் அவர்கள் ஆதி தமிழர்களாக இருப்பார்களோ அல்லது ஆதி தமிழர்களுடன் உறவில் இருந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தந்துள்ள அறிக்கை முடிவுகள் இந்தியாவின் அதிகார வர்க்கத்தையே ஒரு கணம் ஆடிப்போகச் செய்துவிட்டது. வாருங்கள் அதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்வோம். மிசோரமுக்கு பயணிப்போம்.

 ஆதி தமிழர்களா?

ஆதி தமிழர்களா?

எங்கே ஆய்வு நடந்தாலும், அங்குள்ள பொருள்களையும் எடுத்து வரலாற்றைக் காண்பதுதான் வழக்கம். சிந்து சமவெளியில் முன்பு பல ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்ததைப் போலவே, சில வருடங்களுக்கு முன் கீழடியிலும் கண்டுபிடித்து, தமிழர்களின் தொல்லியலை அதன் வரலாற்றை தேடி பின்னோக்கி பயணித்தோம். அதே நேரத்தில் மத்திய அரசு இடும் முட்டுக்கட்டைகளையும் தெரிந்துகொண்டோம். ஒருவேளை இந்த ஆய்விலும் தடை உள்ளதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சரி வாருங்கள் மிசோரமுக்கு செல்வோம்.

Ezralalsim10

 அழகிய மிசோரம்

அழகிய மிசோரம்


இயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் சிறப்பான அடையாளங்களாகும். அவைகளின் ஊடே புதைந்துள்ள வரலாற்றையும், மிசோரமின் அழகையும் ஒரு சேர பயணத்து அறிந்துகொள்வோம். இது தமிழ் நேட்டிவ் பிளானட்டின் வரலாற்று சுற்றுலா.

DC Saiha

தமிழர்களுக்கும் வடகிழக்கிந்தியர்களுக்கும் தொடர்பு

தமிழர்களுக்கும் வடகிழக்கிந்தியர்களுக்கும் தொடர்பு

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பிரம்மாண்ட புவியியல் அமைப்பில் இந்த வடகிழக்கிந்திய மாநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக வீற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவை மற்ற இந்திய பகுதிகளுடன் இணைந்திருந்தாலுமே, பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் இருப்பவைபோலவே உள்ளன. இதே மாதிரியான இன்னொரு மாநிலம் என்றால் அது நம் தமிழகம்.

இந்தியா வடக்கு பக்கம் சென்றால் நாம் தெற்கு பக்கம் இழுப்போம் என்று கேலி செய்வார்கள். அதுபோலத்தான் வடகிழக்கு மாநிலங்களும். ராணுவத்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

Jayanta Pal

 நாகலாந்து நாகர்கள்

நாகலாந்து நாகர்கள்


நாகர்கள் எனப்படுபவர்கள் தமிழர்களுடன் நீண்ட நெடிய காலம் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

தமிழரின் தொன்மைக்கு சான்றான சிலப்பதிகாரம் கூட நாகர்களை பற்றி சொல்லியிருக்கிறது. ஒரு காலத்தில் நாகர்கள்தான் மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இப்போது அவை நாகாலாந்து என்று குறுகிவிட்டதாக வரலாற்று தகவல்கள் இருக்கின்றன.

Yves Picq

தொல்லியல் ஆய்வு

தொல்லியல் ஆய்வு

சிந்து சமவெளி மற்றும் கீழடி மாதிரியான தொல்லியல் ஆய்வு இங்கும் நடைபெற்றது. அதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு மிகவும் மேம்பட்ட பண்பாட்டை கொண்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை சிந்து சமவெளி, கீழடி மாதிரியான இடங்களை பகுதி அளவு ஒத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனாலும் சிந்து சமவெளி மற்றும் கீழடி ஆய்வுகளின் மூலம் இரு பகுதி மக்களும் ஒத்த குணமுடையவர்கள் அல்லது ஒரே வகையான வாழ்வியல் முறைகளை கொண்டிருப்பது தெரியவந்தது. அப்படித்தான் வடகிழக்கு மாநிலங்களின் பல இடங்களில் இதுபோன்ற தொல்லியல் ஆய்வு நடைபெற்றால் முழுமையாக அறியமுடியும் என்கிறது ஆய்வு.

Lalit Gajjer

ஒரு வேளை இருக்கலாமோ

ஒரு வேளை இருக்கலாமோ

மிகவும் மேம்பட்ட பண்பாட்டைக் கொண்டவர்கள் உலகில் சிலரே. அதில் தமிழர்களும் இருக்கின்றார்கள். சென்னை அருகே நடைபெற்ற தொல்லியல் ஆய்வு சான்று, குஜராத், கீழடி என காணப்படும் தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இப்படி பார்க்கும்போது மிசோரம் பழங்குடியினரின் மூதாதையர்கள் ஒருவேளை ஆதிதமிழர்களுடன் நட்பில் இருந்திருப்பார்கள் என்று பலர் கருதுகின்றனர். எது எப்படி என்றாலும் அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை எதுவும் செல்லாது. ஆனால் கீழடியில் நடைபெற்ற கூத்தைப் போலவே இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடைபெறும் என ஆளும் வர்க்கத்தை எதிர்த்து குரல் நீட்டுகின்றனர் மொழியியல் பண்பாட்டு ஆர்வலர்கள் சிலர். உண்மைதானோ?

Jacek Karczmarczyk

 சுற்றுலா

சுற்றுலா

ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கோம் இல்லியா.. கொஞ்சம் மிசோரமை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டு வரலாமா? இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பிரம்மாண்ட புவியியல் அமைப்பில் இந்த வடகிழக்கிந்திய மாநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக வீற்றிருக்கின்றன. திராவிடம், ஆரியம் ஆகியவற்றோடு ஆசியம் எனும் மற்றொரு அம்சமும் நவீன இந்தியாவின் ஒரு அங்கமாக விளங்குவதை இவை பிரதிபலிக்கின்றன.

R london

அழகிய மிசோரம்

அழகிய மிசோரம்


இப்படி ஒரு சிறப்பான வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் ‘மிசோரம்' மாநிலமும் ஒன்று. 1986ம் ஆண்டில் தனி மாநிலமாக உருவாக்கப்படும் வரை ‘மிசோரம்' ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக இருந்து வந்திருக்கிறது. இயற்கை அன்னையின் படைப்பில் உருவான பல்வேறு எழில் அம்சங்களை தரிசிக்க விரும்புவோர் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய பூமி இந்த மிசோரம் என்பதில் சந்தேகமேயில்லை.

Fkaralte

 அயல் தேசங்களுக்கு செல்ல விரும்புபவர்கள்

அயல் தேசங்களுக்கு செல்ல விரும்புபவர்கள்

பாஸ்போர்ட், விசா போன்ற நெருக்கடிகள் ஏதுமில்லாமல் இந்தியக்குடிமகன் என்ற உரிமையுடனும், நம் நாட்டு மாநிலங்களில் ஒன்று எனும் பெருமித உணர்வுடனும் இந்த அழகுப்பிரதேசத்திற்கு மிக சுலபமாக, சிக்கனமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம். எங்கெங்கோ இருக்கும் அயல் தேசங்களுக்கு செல்ல முடியுமா என்று கனவு காண்பவர்கள் இந்த மலை எழில் பூமிக்கு ஒரு முறையாவது விஜயம் செய்வது சிறந்தது.

Lalnunfela Hlawndo

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

சோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பலா ஏரி, டம் டில் ஏரி அல்லது கடுகு ஏரி போன்றவற்றை குறிப்பிடலாம். இம்மாநிலத்தின் தலைநகரான அய்சால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

Vikas Talwar -

 நவீன வசதிகள்

நவீன வசதிகள்

இங்கு பயணிகளுக்கான நவீன வசதிகள் கிடைக்கின்றன. இது தவிர லுங்லே எனும் மற்றொரு நகரமும் முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது.

DC Saiha

 மலைக்குகை

மலைக்குகை

‘மிசோரம்' பகுதியின் வரலாற்று பின்னணி குறித்த சில தகவல்களை அளிக்கும் சான்றுகளாக பல மலைக்குகை ஸ்தலங்களும் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

Josephlalrinhlua786

தம்பா காட்டுயிர் சரணாலயம்

தம்பா காட்டுயிர் சரணாலயம்


தம்பா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கான்குலுங் சரணாலயம் போன்றவை இம்மாநிலத்தின் இதர முக்கியமான சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Lalmama

மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம்

மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம்

மிசோரம் மாநிலத்தை மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் என்றும் கூறலாம். இங்குள்ள பான்பூய் மலைகள் மலையேற்றத்துக்கு பொருத்தமான பாதைகளை கொண்டுள்ளன.

R london

 சாகச பொழுதுபோக்கு

சாகச பொழுதுபோக்கு

ஆர்வம் உள்ள பயணிகள் பாராகிளைடிங் எனும் சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதற்கான வசதிகளும் இங்கு கிடைக்கின்றன. இந்த பொழுதுபோக்கு இம்மாநிலத்தின் முக்கியமான சாகச பொழுது போக்கு விளையாட்டாக வளர்ந்துள்ளது.

Garima Singh

திருவிழாக்காலங்கள்

திருவிழாக்காலங்கள்


பாரா கிளைடிங் ஸ்கூல் (பயிற்சி மையம்) ஒன்று மிசோரம் சுற்றுலாத்துறையோடு இணைந்து திருவிழாக்காலங்களில் இதற்கான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை அளிக்கிறது.

மிசோரமின் அழகிய இடங்களைக் காண்போம்

commons.wikimedia.org

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.

A. J. T. Johnsingh,

 ருங்டில் ஏரி

ருங்டில் ஏரி

அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த கம்பீரமான ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரிஅமைந்திருக்கிறது. 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பியுள்ளன. ஒரு காலத்தில் இந்த ஏரி ஸ்தலத்தில் ஏராளமான கௌதாரி பறவைகள் வசித்திருந்தன. இன்றும்கூட பறவை ரசிகர்கள் இந்த ஏரிப்பகுதியில் பலவகையான பறவைகளை பார்த்து மகிழலாம்.

Krishna Chand Avatar

 முரா புக்

முரா புக்

மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது. முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு வருமாம். பின் அவர்களை தன் கூரிய அலகுகளால் கொத்தித் தின்றும் விடுமாம்.

Bodhisattwa -

நஹ்லான்

நஹ்லான்

ஜவ்லாடி என்றழைக்கப்படும் ஒயின் உற்பத்திக்காக புகழப்படும் நஹ்லானின் 80% மக்கள் ஒயின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அய்ஜ்வாலில் இருந்து இங்கு பல பேருந்து வசதிகள் உண்டு

Bodhisattwa

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

அழகிய மிசோரம்

மிசோரமின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X