Search
  • Follow NativePlanet
Share
» »இளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்!

இளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்!

சொர்க்கம் தெரியுமா? இந்த 50 இடங்களையும் பாத்துட்டீங்கன்னா இனி இப்படி கேக்கமாட்டீங்க!

கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே பொருள்தான். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர். வாருங்கள் கேரளத்தின் டாப் 50 இடங்களின் படங்களைப் பற்றி காண்போம்

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

1 மூணார்


மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.

2 வயநாடு


முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை' என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது.

3 இடுக்கி


பண்டைய கால சேர சாம்ராஜ்யத்தின் பூமியாகவும், பிற்காலத்தில் ஐரோப்பிய குடியேறிகள் பலர் வந்து வசித்த பிரதேசமாகவும் அறியப்படும் இது வரலாற்றில் தனக்கென்ற இடத்தை பிடித்துள்ளது. தேக்கு, கருங்காலி, சந்தனமரம், யானைத்தந்தம் மற்றும் மயில் தோகை போன்ற அரிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகக்கேந்திரமாக இடுக்கிப்பகுதி பலகாலம் தொட்டு இன்று வரை திகழ்ந்து வருகிறது.

4 பொன்முடி

பொன்முடி மலைவாசஸ்தலத்தில் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று பயணிகள் பார்த்து ரசிக்க எண்ணற்ற கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் கோல்டன் வேல்லி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம் போன்றவை முக்கியமானவை.

5 தேவிகுளம்

தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.

6 வாகமண்

பசுமையான சமவெளிப்பகுதிகள், வான்முட்டும் நீல மலைகள், வளைந்தோடும் ஆறுகள், பெருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், தூய்மை நிறைந்த குளுமையான காற்று மற்றும் அடர்ந்த பைன் மரக்காடுகள் போன்ற எழில் அம்சங்கள் இந்த வாகமண் மலைவாசஸ்தலத்தை பலரும் விரும்பும் சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளன. தங்கல் மலை, முருகன் மலை மற்றும் குரிசுமலா போன்ற மலைகள் இந்த நகரத்தை சூழ்ந்து ஒரு பிரமிப்பூட்டும் இயற்கை அழகை அளித்துள்ளன

7 பீர்மேடு


பீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்க்கலாம். பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

8 தேன்மலா

தேன்மலா சுற்றுலாத்தலத்தின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை அமைந்துள்ளது. மேலும் பாலருவி நீர்வீழ்ச்சி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளது. இது தேனிலவுப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன

9 மலப்புரம்

மலப்புரம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புரத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக்கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன.இந்த மாவட்டம் கோழிக்கோட்டின் ஜமோரின் மகாராஜாக்களின் ஆற்றல்மிக்க ராணுவத்தின் தலைமையிடமாக விளங்கி வந்தது.

10 கீழை தேசத்து வெனிஸ்


ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்து நம் உணர்வுகளை எங்கோ இழுத்து செல்கின்றன. கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்து விடும் என்பதை - நீங்கள் இங்கு விஜயம் செய்து திரும்பும்போது புரிந்துகொண்டு புன்னகை செய்வீர்கள்.

11 கொல்லம்


‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள். இன்றும் நாம் கொல்லத்துக்கு விஜயம் செய்தால் அந்த பழமொழி எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்பதை கண்கூடாக பார்த்து புரிந்து வியக்கலாம். கொல்லம் நகரமானது பண்டைக்காலத்தில் ஒரு கல்வித்தலமாகவும் பாரம்பரிய ஸ்தலமாகவும் கோலோச்சியிருக்கிறது.

12 கோட்டயம்

இயற்கை ஏழில் மற்றும் கலாச்சாரப்பாரம்பரியம் போன்றவற்றுக்காக இது முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வருடந்தோறும் ஓய்வெடுக்கவும் உள்ளூர் கேரள கலாச்சார அம்சங்களை ரசிக்கவும் கோட்டயத்தை நாடி வருகின்றனர். இங்குள்ள பூஞ்சார் அரண்மனை கேரள மாநிலத்தின் வளமான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பல ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களும் கோட்டயத்தில் பயணிகள் விஜயம் செய்வதற்காக காத்திருக்கின்றன

13 கொச்சி


கொச்சியின் உள்ளூர் உணவு வகைகளை சுவைப்பது ஒரு தனி அனுபவம் எனலாம். இங்குள்ள தனித்தன்மையான சைவ மற்றும் அசைவ உணவுமுறைகள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடையவை. குறிப்பாக வாழை இலையில் மூடி சமைக்கப்பட்ட மீன் உணவு இங்கு பிரசித்தம்.

14 திருவனந்தபுரம்


பாளையம் மசூதி, பழைய விநாயகர் கோயில், ஐரோப்பியபாணி கோபுரங்களுடன் எழுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்டியன் கதீட்ரல் போன்றவை அருகருகே அமைந்திருக்கும் அதிசயத்தையும் இங்கு பார்க்கலாம். இங்குள்ள கனககுண்ணு அரண்மனை அந்நாளைய திருவாங்கூர் மன்னர்களின் பொற்காலத்தை நினைவூட்டும் வகையில் வீற்றுள்ளது. இதன் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் உங்களை வெகுவாக கவரக்கூடும்.

15 தலச்சேரி

கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களை கொண்டுள்ள இந்த நகரம் ‘மலபார் கடற்கரைப்பகுதி'யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம். இந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக இந்த நகாம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

16 ஆலுவா

ஆலுவா நகரின் சிவன் கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமில்லாமல் அதன் கட்டிடக்கலைக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோயிலை முதல் முறையாக பார்க்கும் போது கட்டி முடிக்காதது போன்ற மாயத்தோற்றம் உருவாகும் பாணியில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கு மிகவும் அற்புதமானது. இதுதவிர இந்தக் கோயிலை அடுத்து பெரியார் நதி பாய்ந்து கொண்டிருப்பதால் கோயிலின் அழகு ரெட்டிப்படைந்து காட்சியளிக்கிறது.

17 திருச்சூர்

இந்த கோயில் ஸ்தலமானது தெய்வீக மணம் வீசும் சூழல், இயற்கை எழில் மற்றும் மண்ணுக்கேயுரிய பாரம்பரிய அம்சங்கள் போன்றவற்றை தன் அடையாளங்களாக கொண்டுள்ளது. இங்குள்ள புராதன கோயில்களில் மிளிரும் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் பல்வேறு வரலாற்றுக்கால ஆவணங்களைக் கொண்ட அருங்காட்சியகங்கள் போன்றவை இங்கு வருகை தரும் பயணிகளை பிறிதொரு கடந்துபோன காலகட்டத்துக்குள் இழுக்கின்றன

18 புனலூர்

புனலூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தொங்கு பாலத்தை தவிர அகஸ்த்திய மலை எனும் காட்டுயிர் சரணாலயத்துக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம். மேலும் அன்னாசி பழம், பிளைவுட், டிம்பர், மிளகு போன்றவைக்காகவும் புனலூர் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதுமிருந்து சபரிமலை வருபவர்கள் புனலூர் நகரில் இளைப்பாறி செல்வதால் திருவிழா காலங்களில் புனலூர் நகரம் ஜேஜேவென்று இருக்கும்.

19 எர்ணாகுளம்


வியாபார கேந்திரமாக மட்டுமல்லாது செழுமையான ஒரு கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த நகரம் வாய்க்கப்பெற்றிருக்கிறது. உள்ளூர் திருவிழாக்களின்போது இந்த அம்சங்கள் வண்ணமயமான சடங்குகள் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன. மயங்க வைக்கும் வித்தியாசமான திருவிழாக்கொண்டாட்டங்களை காண்பதற்காகவே இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

20 தேக்கடி

தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அற்புதமான காட்டுயிர் அம்சங்களும் தாவர இனங்களும் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளதே தேக்கடியின் அடையாள விசேஷமாகும். எஸ்டேட், காடு, விலங்கு, யானை, புலி ... என்று சொன்னாலே ‘தேக்கடி!' என்று முடிக்கும் அளவுக்கு இந்த சரணாலயம் தமிழ்நாட்டு மக்களிடையே வெகு பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21 கண்ணூர்

கண்ணூர் பிரதேசத்தில் நீண்டு பரந்து கிடக்கும் மணற்பாங்கான கடற்கரைகள் பயணிகளுக்கு உல்லாசத்தையும் பொழுதுபோக்கையும் அளிக்கும் முக்கிய இயற்கை எழில் ஸ்தலங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் பய்யம்பலம் பீச், மீன்குண்ணு பீச், கீழுண்ண எழரா பீச் மற்றும் முழுப்பிளாங்காட் பீச் போன்றவை குறிப்பிடத்தக்க கடற்கரைகளாகும்.

22 பாலக்காடு

பாலக்காடு மாவாட்டத்தின் தனிச் சிறப்புக்கு அதன் பாரம்பரிய கர்நாடக சங்கீதமும், கலாச்சார திருவிழாக்களுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த மாவட்டத்தில் பிறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் பாலக்காடு மணி ஐயர் ஆகிய இரண்டு கர்நாடக இசை மேதைகளால் பாலக்காடு மாவட்டம் இந்தியா முழுக்க உள்ள இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது.

23 நீலம்பூர் நகரம்

தனித்தன்மையான புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்நகரம் நீலகிரி மலை, எரநாடு, பாலக்காடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுடன் தன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. சாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நீலம்பூர் நகரம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பசுமைச்சூழல் மற்றும் வளம் நிரம்பிய இயற்கைக்காட்சிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.

24 சுல்தான் பத்தேரி


சுல்தான் பத்தேரி நகரம் அதன் சரித்திர சிறப்புகளை தாண்டி பிரம்மாண்ட மலைக்குன்றுகளால் சூழப்பட்டிருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். அதோடு கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்திருப்பதால் சுல்தான் பத்தேரி நகருக்கு இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் விவாசயத்தை போலவே சுல்தான் பத்தேரி நகரத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பும் முக்கியமானதாக கருத்தப்படுகிறது.

25 ஆலப்புழா கடற்கரை


அழகிய கடற்கரையில் மகிழ்ந்திடுங்கள்

26 கோவளம் கடற்கரை

கொள்ளைக் கொள்ளும் கோவளம் கடற்கரை மணலில் திளைத்திடுங்கள்

27 குமரகம் ஏரி

குமரகம் ஏரிக்கரையில் குதூகலித்துக் கொண்டாடுவோம்

28 பூவார் கடற்கரை


சுற்றுலாப் பயணிகளைப் பூரிப்பில் ஆழ்த்திடும் பூவார் கடற்கரை

29 கொல்லம் கடற்கரை

கொல்லம் கடற்கரை மணலில் அற்புதங்கள் நிகழ்த்திடுவோம்

30 வர்க்கலா கடற்கரை

வர்க்கலா கடற்கரையில் வெளிநாட்டவர்களுடன் கொண்டாடுவோம்.

31 கோழிக்கோடு கடற்கரை


கோழிக்கோடு கடற்கரையில் உலா

32 கண்ணூர் கடற்கரை


கண்ணூர் கடற்கரையில் ஒரு உலா

33 கொச்சி கடற்கரை

கொச்சி கடற்கரையில் ஓர் சந்திப்பு

34 பேக்கல்

பேக்கல் கோட்டையும் கடற்கரை அழகும்

35 பய்யோலி

பய்யோலியில் ஒரு ஜாலி சுற்றுலா

36 பொன்னனி

பொன்னனியில் மின்னும் ஒளியில் ஓர் சுற்றுலா

37 காசர்கோட்

காசர்கோட்டில் காலைப் பயணம் செய்யலாமா

38 மராரிக் குளம்

மராரிக்குள சுற்றுலா இது மனம் மயங்கும் ஒரு திருவிழா

39 குருவாயூர்

குருவாயூரில் ஓர் அமைதித் தேடல்

40 திருவனந்தபுரம் கடற்கரை

கடற்கரை மணலில் குழந்தைப் போல் விளையாடலாம்.

41 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

42 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

43 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

44 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

45 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

46 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

47 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

48 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

49 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

50 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel kerala photo tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X