Search
  • Follow NativePlanet
Share
» »அடடே! திருநாவுக்கரசோட பண்ணை வீடு இப்படி ஒரு இடத்துலயா இருக்கு?

அடடே! திருநாவுக்கரசோட பண்ணை வீடு இப்படி ஒரு இடத்துலயா இருக்கு?

டாப்ஸ்லிப், கோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு பகுதி. ஆழியாறு அருகே அமைந்துள்ள இயற்கையின் குழந்தை அது. அதிகம் மனித மாசு படாத, தீண்டாத ஒரு மலைப் பகுதி. அழகியலின் உருவாய்

By IamUD

திருநாவுக்கசோட பண்ணை வீடு இருக்குற இடத்த நிறைய பேரு நெட்ல தேடிட்டு இருக்காங்க.. பொத்தம்பொதுவா செய்தி நிறுவனங்கள் பொள்ளாச்சினு பெயர் போட்டாலும் குறிப்பா அந்த பண்ணை வீடு எங்க இருக்குனு தெரிஞ்சிக்கணும். அது எந்த இடத்துல இருக்குனு தெரிஞ்சா முக்கியமா இந்த இடங்கள பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங்கா இருக்க வாய்ப்பிருக்கு. சரி வாங்க அந்த இடத்த பத்தி தெரிஞ்சிக்கலாம்.

தலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம் தலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்

பலரும் வரும் சுற்றுலாத் தளம்

பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநிலத்துக்கு போகும் வழியிலதான் திருநாவுக்கரசோட பண்ணை வீடு இருக்கு. இந்த பகுதி பல சுற்றுலாத் தலங்களுக்கு அருகாமையிலேயே அமைஞ்சிருக்கு.

ஆனைமலை

ஆனை மலை காடுகள் பத்தி நம்மள்ல பலரும் தெரிஞ்சி வச்சிருப்போம். ஆனா இந்த ஊரப் பத்தி நம்மள்ல பலருக்கு தெரியாது.

ஆழியாறு


பொள்ளாச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமான ஆழியாற்றுக்கு அருகிலேயே இந்த பண்ணை வீடு அமைந்துள்ளது.

டாப்ஸ்லிப்

இப்படிப்பட்ட அழகிய சுற்றுலாத் தளங்களுக்கு மத்தியில் டாப்ஸ்லிப் என்னும் இடமும் உள்ளது. அது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

அறிமுகம்

டாப்ஸ்லிப், கோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு பகுதி. ஆழியாறு அருகே அமைந்துள்ள இயற்கையின் குழந்தை அது. அதிகம் மனித மாசு படாத, தீண்டாத ஒரு மலைப் பகுதி. அழகியலின் உருவாய் மொத்தமும் இருக்கும் டாப்ஸ்லிப்புக்கு அதன் புகைப்படங்களைப் பார்த்தாலே போகத் தோன்றும்.

பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம். சிறப்பான ஒரு சுற்றுலா. புகைப்படத்தை மட்டும் பாருங்கள். உடனே திட்டமிடுவீர்கள் டாப்ஸ்லிப் எப்போது செல்லலாம் என்று...

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 1

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 1

பச்சை பசேலென்று காட்சி தரும் புல்தரையும், பசுமை நிறைந்த மரங்களும், செடி கொடிகளும், அண்ணாந்து பார்க்கும் வெண்ணிற மேகங்களும் ஆகாயமும்....

Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 2

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 2

பசும்புல் தரையும் அதில் மேயும் மான்களும் அழகிய காட்சியை அழகாய் நோக்கும் நீங்களும். இயற்கையின் அழகிய படைப்பான நம்மிடம் இயற்கை தன் படைப்பின் அழகை காட்ட அதை நாம் நம் புகைப்படக் கருவியில் சரியான கோணத்தில் படம் பிடிப்பதும் அழகுக்கு அழகு சேர்க்கும் கலைதானே...

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 3

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 3


சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மரங்களும், அருகில் வானத்திடமிருந்து மண்ணின் மானம் காக்கும் வகையில் உடையாய் பரந்திருக்கும் புல்வெளியும். புற்கள் தாங்கும் வலியைத் தாங்கா மண் தன்னில் குத்தி வைக்கப்பட்டுள்ள பலகையும். பலகையில் புல்வெளியில் நடக்காதீர் எனும் வாசகமும்.. இயற்கைக்கு இயற்கை மேலுள்ள காதலை இயற்கையின் சிறந்த படைப்பான உங்களுக்காக... ப்ளீஸ் புல் தரை மீது நடக்காதீர்...

Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 4

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 4


டாப் ஸ்லிப்பின் அழகை கண்டு காதலில் விழுந்த கற்கூட்டம் மொத்தமாய் தற்கொலை எண்ணத்தில் சரிந்து விழ, அதைத் தாங்கி பிடிக்க மரங்களும், செடிகளும் சுற்றி நின்று காதலை வளர்க்க, அருமையான இயற்கையின் மடியில் அனைவரும் இளைப்பாறும் அழகிய தருணம்.

SANKAR PS

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 5

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 5


வான் மேகம் மண்ணில் விழ தருணம் பார்த்து தயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காற்றும் தன் தேவையைத் தேடி மண்ணில் வந்து சாலைகளில் தேய, அருகாமை மரங்கள் தென்றலை பெற்று இன்னிசை பாடும் அழகிய நிகழ்வு இது. அருகில் சாலை கரடு முரடு ஆனாலும் புல்வெளிகள் மீது நடந்து மண்ணுக்கும் புல்லுக்குமான காதலில் கரடியாய் நுழைந்து விடாதீர்.. ப்ளீஸ்...

Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 6

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 6


சொர்க்கத்துக்கு செல்லும் சாலைகள் கரடு முரடாகத்தான் இருக்குமோ என்னவோ. . சரி சரி வழியில் சொர்க்கத்தின் வரவேற்பு பலகைகளாய் புல் தரைகளும், அதில் மண்ணுடன் காதல் புரியும் பசுமை நிறை புற்களும்.

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 7

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 7


நம்மை அறியாத ஒரு முயலின் கண்களுக்கு சிக்கும் காட்சிகளுக்கு முன்னரே காதுகளுக்குள் அதிரும் ஒலி அதிர்ச்சி கிலியை ஏற்படுத்து, நம் வரவை எதிர்பார்த்து ஒரு வித அச்சத்துடன் நம்மை வரவேற்கும் அழகிய முயல் குட்டி..

Sreers04

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 8

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 8

டிரில் சென்று வந்து திகைப்பில் நிற்கும் மரங்களோ என்னவோ... இத்தனை வரிசையில் சிறப்பாக நின்று மழைகளையும், எப்போதாவது செல்லும் நம்மையும் வரவேற்கிறது. தென்றலின் காதல் இசை கேட்க காத்திருக்கும் இம்மரங்கள் நம் வரவையும் திருவிழாவாய் கொண்டாடும். தயவுசெய்து நெகிழி பைகளை இங்கு பயன்படுத்தாதீர்கள் என்று கெஞ்சி கேட்பது போலில்லை.

tshrinivasan

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 9

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 9


பச்சை அழகை நீலம் அழகா என்ற குழப்பத்தில் இடத்தைவிட்டே ஓடிவிட்ட மேகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பசுமை நிற மரம் செடி கொடிகள். தொலை தூர வானம் செய்வதறியாது விழித்து நிற்கும் பரிதவிப்பு நிகழ்வாய் இந்த காட்சி...

tshrinivasan

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 10

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 10


பசுமையின் நிறைவாய் மான்களின் வயிற்றில் செல்லும் புற்கள்.

Thangaraj Kumaravel

Read more about: travel coimbatore pollachi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X