Search
  • Follow NativePlanet
Share
» »ராகு கேது பெயர்ச்சி - இன்னிக்கே போகவேண்டிய கோவில்கள்! போனா என்ன நடக்கும் தெரியும்ல!

ராகு கேது பெயர்ச்சி - இன்னிக்கே போகவேண்டிய கோவில்கள்! போனா என்ன நடக்கும் தெரியும்ல!

ராகு கேது பெயர்ச்சி - இன்னிக்கே போகவேண்டிய கோவில்கள்! போனா என்ன நடக்கும் தெரியும்ல!

சர்ப்ப தோஷங்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் உருவாகும் ராகு கேது தோஷங்களை இப்படியும் அழைப்பார்கள்.

ராகு கேது தோஷம் ஒருவருக்கு இருந்தால் திருமணம் முதல் தொழில் வரை எல்லாம் பாதிக்கப்படும். இதனால் அவரது வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி செல்லாமல் தேய்பிறையாய் தேய்ந்துகொண்டிருக்கும்.

இந்த தோஷங்களுக்கு எங்கே சென்றால் பரிகாரங்கள் செய்யலாம் என்று நாள்தோறும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் உண்மை நம்பிக்கையுள்ள பக்தர்களுக்கு நாகராஜர் அருளும் தலங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

 சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

எமகண்ட வேளை பார்த்து சிதம்பரம் நடராஜர் கோவில் செல்லுங்கள். எமகண்டம் முடிந்த பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்பார்கள். ஆனால் சித்திரகுப்தரை எமகண்ட வேளையில் வணங்கவேண்டும்.

திங்கள்கிழமையாக பார்த்து சென்று எமகண்ட வேளைக்காக காத்திருந்து சிவகாமி சுந்தரி அம்மாள் சந்நதியில் அமர்ந்திருக்கும் சித்திரகுப்தரை வணங்கி வந்தால் கேது தோஷம் நீங்கும். வாழ்வில் இன்பம் பொங்கும்.

wikipedia.org

 நாகர்கோவில் நாகநாதர் கோவில்

நாகர்கோவில் நாகநாதர் கோவில்

இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஒரு நாகர் ஆலயம் என்றால் அது நாகர்கோவில்தான்.

நாகமே காவல் காக்கும் கருவறையைக் கொண்டது நாகர்கோவில் நாக ராஜா ஆலயம். இந்த கோவிலில் இரு அரச மரங்கள் இருக்கின்றன. அதை வலம் வந்து பின் இறைவனது சந்நிதியில் வணங்கினால் ராகு கேது தோஷங்கள் நீங்கும்.

Infocaster

மன்னார்சாலை கோவில்

மன்னார்சாலை கோவில்

ஆலப்புழா, ஹரிபாத நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது மன்னார்சாலை.

இங்கு நாகராஜர் பாதாள அறை ஒன்றில் வீற்றிருக்கிறார். ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆய்ல்ய நட்சத்திர தினத்தன்று, இங்கு வந்து முறையான வழிபாடு நடத்தினால் கேது தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும் என்கிறார்கள்.

Vibitha vijay

சங்கரநாராயணர் கோவில்

சங்கரநாராயணர் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாராயணர் கோவில் சக்தி வாய்ந்த தெய்வங்களைக் கொண்டதாகும். இங்கு அருள் பெற ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள்.

கோமதி அம்மன் சந்நிதியில் இருக்கும் புற்றுமண் தீரா நோய்களையும் தீர்க்கும் வல்லமை வாய்ந்ததாக நம்புகின்றனர் பக்தர்கள்.

வீடுகளில் விசப் பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியிலான பாம்பு தேள் உள்ளிட்ட உருவங்களை உண்டியிலில் போடுகின்றனர் மக்கள். இப்படி செலுத்தும்போது நாக தோஷம் நீங்கும் என்பது இவர்களது நம்பிக்கை.

Ssriram mt

நயினார் கோவில், ராமநாதபுரம்

நயினார் கோவில், ராமநாதபுரம்


பரமக்குடியிலிருந்து 19 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது நயினார் கோவில். இங்கு இருக்கும் நயிநார் நாகநாதர் ஆதிசேஷனும், அஷ்ட நாகங்களும் வழிபட்ட மூர்த்தி ஆவார்.

Shareef Taliparamba

கார்க்கோடகன்

கார்க்கோடகன்

திருநெல்வேலியில் அமைந்துள்ள கார்க்கோடகன் எனும் ராகு கேது தலத்துக்கு சென்று வந்தால் விரைவில் தோஷம் நீங்கி நல்ல எதிர்காலம் பிறக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும்.

ஸ்ரீநிவாச பெருமாள் இங்கு வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.

Rohith M

கோடங்கிப்பட்டி

கோடங்கிப்பட்டி

மதுரையிலிருந்து 80 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கோடங்கிப் பட்டி எனும் ஊர்.

இங்கு வீற்றிருக்கும் சித்திரகுப்தரை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Thamizhpparithi Maari

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள்

கும்பகோணம் நகருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தலம் திருப்பனந்தாள்.

ஆதிசேஷனும் நாகக் கன்னிகைகளும் வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள கிணற்றில் நாகக் கன்னிகை பீடம் காணப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் ஈசனை வழிபட்டால் எதிர்காலம் சிறக்கும் வகையில் கேது தோஷங்கள் நீங்குமாம்.

Sumathysk

திருநீர்மலை

திருநீர்மலை


பல்லாவரம் அருகில் இருக்கும் திருநீர்மலை பலருக்கு தெரிந்திருக்கும் தலமாகும். குளக்கரையில் தூமகேது கணபதி எனும் பெயரில் அமைந்துள்ள இறைவனை வழிபட்டால் கேது ராகு தோஷங்கள் நீங்கி திருமணத் தடை உள்ளிட்டவை கலைந்து நல்ல எதிர்காலம் வரும்.

Chetanoo7

திருவஹிந்திரபுரம்

திருவஹிந்திரபுரம்

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் பாதையில் 6 கிமீ தொலைவில் உள்ளது திருவஹிந்திரபுரம்.

இங்கும் நாக தோஷம் உள்ளவர்கள் செல்லலாம்

Shadow Ayush

மணல்மேடு

மணல்மேடு

நாகப்பட்டினம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது மணல் மேடு எனும் பகுதி.

புற்றில் குடியிருக்கும் சிவ பெருமானை வழிபட்டால் நல்ல காலம் உருவாகி உங்கள் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.

రహ్మానుద్దీన్

புன்னைநல்லூர்

புன்னைநல்லூர்

தஞ்சாவூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ள புன்னைநல்லூர் கோவிலில் பாம்பை வழிபட்டால் தோஷம் நீங்கும்.

Nittavinoda.

குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவில்

குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கியது குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.


AngMoKio

Read more about: temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X