Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் சர்ஃபிங் - சர்ஃபிங்கிற்கு பிரபலமான தென்னிந்திய கடற்கரைகள்!

தென்னிந்தியாவில் சர்ஃபிங் - சர்ஃபிங்கிற்கு பிரபலமான தென்னிந்திய கடற்கரைகள்!

சுமார் 7,500 கிமீ நீளமுள்ள மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள நம் நாடு பல தனித்துவமான மற்றும் அழகிய வெவ்வேறான கடற்கரைகளை தனக்குள் அடக்கியுள்ளது. மேற்கே குஜராத்தில் தொடங்கும் கடற்கரை அப்படியே மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா, தமிழ்நாடு, ஒரிசா என மேற்கு வங்காளம் வரை நீள்கிறது.
மேற்கூறிய ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பத்தன்மை வாய்ந்த பல கடற்கரைகள் உள்ளன. கடலில் குளிப்பது, கடற்கரையில் காலை நனைப்பது, அதன் வாசத்தில் அமர்ந்து இருப்பது ஒரு வகையினருக்கு பிடிக்குமென்றால் அதில் இறங்கி நீச்சலடிப்பது, பல்வேறு ரைடு போவது, ஸ்நோர்கெலிங் செய்வது, சர்ஃபிங் செய்வது போன்ற நீர் விளையாட்டுக்கள் சாகச விரும்பிகளின் தேர்வாகும்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் சர்ஃபிங் செய்வது மிகவும் பிரபலம். குறிப்பாக தென்னிந்தியாவில் பல அழகான இடங்கள் பிரத்யேகமாக உள்ளன. மே முதல் செப்டம்பர் வரையிலான நேரத்தில் தான் சர்ஃபிங் செய்ய வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அலையானது சற்று உயரமாக இருப்பதால், சஃர்ப் செய்பவர்களுக்கு நிச்சயம் ஒரு அலாதியான அனுபவம் கிடைக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள சில அழகான சர்பிங் ஸ்பாட்டுகளின் லிஸ்ட் இதோ உங்களுக்காக!

கோவளம், கேரளா

கோவளம், கேரளா

இந்தியாவின் சர்ஃப் சிட்டி என்று அழைக்கப்படும் கோவளம் சர்ஃபர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்கான சிறந்த கடலைமைப்பைக் கொண்டுள்ளது. பாறைகள் நிறைந்த கடல் படுகை வீரர்களுக்கு சற்று சவாலானதாக இருப்பதால், இந்த இடம் பல இளம் வீரர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது.
அரபிக்கடலின் ஓரத்தில் தென்னை மரங்களும் பனை மரங்களும் சூழ அமைந்திருக்கும் கோவளம் கடற்கரை திருவனந்தபுரத்தில் இருந்து எளிதில் அணுகலாம். மேலும் வார்காலா மற்றும் மாஹியிலும் சர்ஃபிங் செய்வது பிரபலமாகும்.

முல்கி, கர்நாடகா

முல்கி, கர்நாடகா

மங்களூர் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள முல்கி நகரம் சர்வதேச மற்றும் உள்நாட்டு சர்ஃபிங் பயணிகளுக்கு பிடித்தமான ஒரு இடமாகும்.
முல்கி கடற்கரையின் அலைகள் இரண்டு முதல் மூன்று அடி வரை மட்டுமே இருப்பதால், இது சர்ஃபிங் செய்வதற்கான பாதுகாப்பான கடற்கரைகளில் ஒன்றாகும்.
மேலும் கர்நாடாகாவின் கப்பு கடற்கரை, மரவந்தே கடற்கரை மற்றும் கோகர்ணா கடற்கரையிலும் சர்ஃபிங் செய்வது விசேஷமாகும்.

கோவா

கோவா

ஒரு தனிப்பட்ட இடத்தை குறிப்பிடாமல் மாநிலத்தின் பெயரையே குறிப்பிட்டு இருக்கிறோம் என்று யோசிக்கிறீர்களா? ஏனென்றால் கடற்கரை நகரமான கோவாவில் சர்ஃபிங் செய்ய பல கடற்கரைகள் உண்டு. வடக்கில் உள்ள அஸ்வேம் முதல் அறம்போல் வரை, கேண்டலிம் முதல் பாகா வரை எண்ணற்ற கடற்கரைகளில் நீங்கள் சர்ஃபிங் செய்து மகிழலாம்.
நீங்கள் கோவாவில் சுற்றிப் பாரப்பதர்க்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் நீர் விளையாட்டுகள் இங்கு மிகவும் பிரபலம். ஆக, அடுத்த முறை நீங்களும் இதில் ஈடுபட்டு களைத்திடுங்கள்.

பாரதீப், ஒரிசா

பாரதீப், ஒரிசா

பூரி கடற்கரை மற்றும் கோனார்க் சந்திரபாகா கடற்கரை ஆகியவற்றுடன் ஒடிசாவின் பாரதீப் கடற்கரையும் சர்ஃபிங்கிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான இடமாகும். இந்தியா சர்ப் திருவிழா ஒரிசாவின் ராமசண்டி கடற்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பசுமையான காடுகளால் மூடப்பட்டு, இயற்கையான சிற்றோடைகள் மற்றும் தீவுகளால் அலங்கரிக்கப்பட்ட பரதீப் கடற்கரை சர்ஃப் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

செரினிட்டி பீச், புதுச்சேரி

செரினிட்டி பீச், புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள பல கடற்கரைகளில் ஒன்றான செரினிட்டி கடற்கரையில் நீங்கள் சர்ஃபிங்கில் ஈடுபடலாம். சுற்றிலும் தென்னை மரங்கள் நிறைந்து, பாறைகளின் பாலங்களின் ஓரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்து இருக்கும் செரினிட்டி கடற்கரையில் புதுவை மக்களும், சுற்றுலாப் பயணிகளும், ஏராளமான வெளி நாட்டவரும் சர்பிங்கில் ஈடுபடுகின்றனர்.

கோவ்லாங், தமிழ்நாடு

கோவ்லாங், தமிழ்நாடு

சென்னைக்கு தெற்கே சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த கோவ்லாங் ஒரு அழகிய சர்பிங் ஸ்பாட்டாகும். ஆண்டுதோறும் கோவ்லாங் பாயிண்ட் சர்ஃப், இசை & யோகா விழா ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக சர்ஃபிங் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் நிறைந்த மகாபலிபுரத்திலும், மாசற்ற அழகைக் கொண்ட மற்றும் உலகளவில் சிறந்த சர்ஃபிங் தளங்களில் ஒன்றாக அறியப்படும் மணப்பாடும் தமிழ்நாட்டின் இதர பிற சர்ஃபிங் தளங்களாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X