நீங்க அம்பானி மாதிரி மிகப்பெரிய பணக்காரரா ஆகணும்னு நினைக்குறீங்களா? இல்லல... நிச்சயமா ஒரு நிம்மதியான வாழ்க்கைக்காகத்தான் நீங்களும் எதிர்பார்ப்புல இருப்பீங்க.. அதே நேரம் நிம்மதியான வாழ்க்கை நம்ம ஆசைகளெல்லாம் நிறைவேற்றுன அப்பறம்தான் கிடைக்கும் இல்லியா.. நம்ம ஆசைகள நிறைவேற்ற குறைந்தபட்சமாச்சும் நமக்கு பணம் தேவை.ஆனா அத நம்முடைய கடின உழைப்பாலையும், நம்ம மேல இருக்குற இறைவனோட அனுக்கிரகத்தினாலேயும் கொஞ்சூண்டு அதிர்ஷ்டத்துனாலயும் அடையமுடியும்.
இந்த பத்துக் கோவில்களும் அதைத்தான் உங்களுக்கு நடக்கச் செய்யுது.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்
விநாயகர் கோவில்கள் பெரும்பாலும் தரையிலேயே அமைந்திருக்கும். மலையில் அமைந்துள்ள ஆசியாவின் முதல் விநாயகர் கோவில் இதுதான்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் பொங்கல் விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
275 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள விநாயகரை தரிசிக்க நாம் 417 படிக்கட்டுக்களை ஏறிச் செல்லவேண்டும்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள இந்த விநாயகர் கோவில் ஆசியாவின் விநாயகருக்கான முதல் குடைவரை கோவில் ஆகும்.
மூஷிக வாகனத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் வலம் வருவார். மற்ற எந்த கோவில்களை விடவும் இந்த கோவிலின் திருவிழாக்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
18 படி அளவில் செய்யப்பட்ட கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்படும். இது சிறப்பானதாக கருதப்படுகிறது.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த கோவில் இடையில் 12 மணி முதல் 4 மணி வரை அடைக்கப்பட்டிருக்கும்.

கோவை புலியகுளம் முந்தி விநாயகர்
கோவை மாவட்டம் புலியகுளம் எனும் கிராமத்தில் இருக்கும் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் இங்குதான் இருக்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை நாள், தமிழ் புத்தாண்டு நாட்களில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த பிள்ளையாரிடம் கேட்ட வரம் தருவார் என்பது நம்பிக்கை.
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த கோவில் திறந்திருக்கும்.

கோவை குனியமுத்தூர் யோக விநாயகர்
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் இந்த கோவிலில் விநாயகர் ஐயப்பனைப் போல அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
உலகில் வேறெந்த கோவிலிலும் இந்த மாதிரியான சிலை காணப்படவில்லை.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த கோவில் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கோட்டயம் மள்ளியூர் கணபதி
கோட்டயம் மள்ளியூரில் விநாயகர் கண்ணனை மடியில் வைத்த நிலையில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

விருதுநகர் புளிச்ச குளம் பஞ்சமுக விநாயகர்
விருது நகர் மாவட்டம் புளிச்ச குளம் கிராமத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் இருக்கும் பிள்ளையார் நின்ற நிலையில் உள்ளார். இதுவும் ஒரு வகையில் ஆசியாவில் தனித்தன்மை வாய்ந்த கோவில் ஆகும்.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 10 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

ஆந்திர மாநிலம் காசிப்பேட்
ஆந்திர மாநிலம் காசிப்பேட்டில் வெள்ளை எருக்கு வேரில் விநாயகர் உள்ளார்.
வேரில் விநாயகரை தத்தூரமாக மாற்றி வைத்துள்ளனர். இவரை வழிபட்டால் திருமணம் உடனே நடக்கும் என்பது ஐதீகம்
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி,நவராத்திரி உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 10 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

புதுச்சேரி மணக்குள விநாயகர்
திருமணத்துக்காகவே அமர்ந்துள்ளது போன்று இருக்கிறார் புதுச்சேரி மணக்குள விநாயகர். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருமணத் தடை, குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு நம்பிக்கையுடன் செல்கின்றனர். அவர்கள் வேண்டியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பள்ளியறையில் விநாயகர் தன் தாயாருடன் அமர்ந்திருப்பது தாய் மகன் உறவு எந்த அளவுக்கு புனிதமானது என்பதை எடுத்துரைக்கிறது.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரையில் திறந்திருக்கும்.

புதுச்சேரி மணக்குள விநாயகர்
திருமணத்துக்காகவே அமர்ந்துள்ளது போன்று இருக்கிறார் புதுச்சேரி மணக்குள விநாயகர். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருமணத் தடை, குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு நம்பிக்கையுடன் செல்கின்றனர். அவர்கள் வேண்டியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பள்ளியறையில் விநாயகர் தன் தாயாருடன் அமர்ந்திருப்பது தாய் மகன் உறவு எந்த அளவுக்கு புனிதமானது என்பதை எடுத்துரைக்கிறது.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரையில் திறந்திருக்கும்.

தூத்துக்குடி ஆயிரத்தெண் விநாயகர்
தூத்துக்குடி ஆறுமுக மங்களத்தில் அமைந்துள்ள ஆயிரத்தெண் விநாயகர் மிகவும் பிரபலமான சக்தி வாய்ந்த இறைவனாக காணப்படுகிறார்.
விநாயகர் சதுர்த்தி, சித்திரை திருவிழா உள்ளிட்ட நாட்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11 மணி வரை திறந்திருக்கிறது. பின் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

பாலவிநாயகர் கோவில், வடபழனி
அரச மரத்தில் விநாயகர் சுயம்புவாக தோன்றி இருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி, சூரசம்ஹாரம், நவராத்திரி உள்ளிட்ட விழாக்களோடு ஜனவரியில் ஆனைமுகலட்சார்ச்சனை தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பால விநாயகரரோடு அரச மரத்தில் 21 விநாயகர்களும், துர்க்கை, தென்முகக் கடவுள், லட்சுமி நாராயணன், அனுமன் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.
காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும் திறந்திருக்கும் கோவில் பின் அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இரவு 8.30 மணி வரை கோவில் செயல்படும்.