Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்

இந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்

இந்தியாவில் உள்ள பழமையான மற்றும் புகழ் பெற்ற ஆலமரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள். இந்த மரங்களை பார்க்கவும் அதன் அழகை ரசிக்கவும், ஒவ்வொரு மாதமும் பல ஆயிரகணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

By Saravanan Kirubananthan

ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதை விட சிறந்த அழகு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா வளமான தாவரங்களுடன் கூடிய ஒரு நாடு. இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிக பழமையான மரங்கள் படிமங்களாக மாறியது முதல், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மரங்கள் வரை அனைத்தும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது நமது இந்திய திரு நாட்டில். இந்தியாவில் எண்ணற்ற ஆலமரங்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. இத்தகைய ஆலமரங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக போற்றப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் அதன் அழகு. இந்த விடுமுறைக்கு இயற்கையோடு இணைந்த இந்த அழகை காண புறப்படுங்கள். அதற்கு முன்னர், இத்தகைய அழகு மிக்க ஆலமரங்கள் எங்கு உள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

திம்மம்மா மர்ரிமன்னு , ஆந்திர பிரதேசம்

திம்மம்மா மர்ரிமன்னு , ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள திம்மம்மா மர்ரிமன்னு , உலகிலேயே மிக பெரிய மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் கிளைகள் மொத்தம் 4 ஏக்கர் நிலபரப்பை சுற்றி அமைந்துள்ளது. இந்த அளவிற்கு ஆஜானுபாகுவான இந்த ஆலமரம், ஒரு மிக பெரிய அதிசயம் ஆகும். இதனுடைய வெளிப்புற தோற்றம் மட்டும் வியப்பை தருவது இல்லை, இந்த மரம் இருக்கும் இடமும் ஒரு புனித தளமாக இருந்து வருகிறது. குழந்தை பேரு இல்லாதவர்கள் இந்த மரத்தின் அருகில் உள்ள திம்மம்மா கோயிலில் வழிபாடு செய்தால் விரைவில் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். நினைவில் நிற்கும் அடி மரமும், தடிமனான கிளைகளும் இதன் பெயரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க செய்தது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த இடத்திற்கு சென்று இயற்கையின் ஆச்சர்யத்தை கண்டு களிக்க தவற வேண்டாம்.

PC- Abdulkaleem

டோட்ட அலட மர , கர்நாடகா :

டோட்ட அலட மர , கர்நாடகா :

பெரிய ஆல மரம் என்ற அர்த்தத்தை கொண்ட இந்த டோட்ட அலட மர , 400 வருடம் பழமையான மரம் ஆகும். இது கர்நாடகாவின் பெங்களுரு நகரத்தில் உள்ளது. இயற்கை பிரியர்களுக்கு மற்றும் சுற்றுலா தளங்கள் செல்பவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த வாரஇறுதி சுற்றாலாத் தளமாக அமைத்திருக்கிறது. பிக்னிக் செல்லும் பல குடும்பத்தினர், இந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டு தூய்மையான காற்றை சுவாசித்துக் கொண்டும், குழந்தைகள் அந்த மரத்தில் ஏறி விளையாடி கொண்டு, அதன் விழுதுகளில் தொங்கி கொண்டு இருப்பது அதன் அழகை மேலும் வெளிபடுத்தும் விதமாக இருக்கும்.

PC- Krishansubudhi

அடையாறு ஆல மரம், சென்னை :

அடையாறு ஆல மரம், சென்னை :

இன்றளவும், அடையாறு ஆல மரத்தின் வரலாறு அறியப்படவில்லை, ஆனாலும் அது 450 வருடங்கள் பழமையான மரம் என்று நம்பப்படுகிறது. இந்த மரம் அமைந்த இடம் அழகான மற்றும் தூய்மையான சூழலை கொண்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் இயற்கை பிரியர்களுக்கு மத்தியில் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது. இந்த மரத்தின் அடி பாகம் பல ஏக்கர்கள் கொண்ட தியோசோபிகல் சொசைடியின் வளாகத்தில் அமைந்துள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

த கிரேட் பான்யன் , கொல்கத்தா :

த கிரேட் பான்யன் , கொல்கத்தா :

250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இந்த ஆல மரம், கொல்கத்தாவில் உள்ள மிக பழமையான மரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் பல்வேறு கண்டங்களில் இருந்து கொண்டு வந்த வைக்கப்பட்ட பல செடிகள் மற்றும் மரங்களுக்கு இந்த மரம் ஒரு வீடாக அமைந்துள்ளது. 2 மிகப்பெரிய புயலுக்கு பிறகும் வலிமையாக பல விழுதுகளுடன் கம்பீரமாக இந்த மரம் நின்று கொண்டிருக்கிறது கிரேட் பான்யன் மரத்தின் அசர வைக்கும் அழகை காண தினமும் பெருமளவு மக்கள் வந்து கொண்டிருகின்றனர் . நீங்களும் கண்டிப்பாக ஒரு முறை இயற்கையின் இந்த அழகான படைப்பை சென்று கண்டு களிக்கலாம்.

PC- Biswarup

பில்லாள்ள மர்றி , தெலுங்கானா :

பில்லாள்ள மர்றி , தெலுங்கானா :

தெலுங்கானாவில் உள்ள மெஹபுபாநகர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆல மரம், 800 வருடங்கள் பழமையானது என்று அறியப்படுகிறது. மேலும் முற்காலத்தில் இந்த இடம் ஒரு புனித இடமாக இருந்து வந்துள்ளது. இன்றைய நாட்களில் இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக இருந்து தினமும் பல ஆயிரகணக்கான பயணிகள் வந்து குறிப்பிடத்தகுந்த இந்த அழகை கண்டுகளித்து செல்கின்றனர். இந்த மரத்தின் அடியில் உள்ள மொத்த பகுதியையும் ஒரு பூங்காவாக மாற்றி பார்வையாளர்களை சுகமான காற்றை சுவாசிக்கும்படி செய்திருக்கின்றனர். இந்த ஆல மரத்தின் சிறப்பை சுவைக்கும் அதே சமயம், அருகில் உள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் மான் பூங்கா உள்ளது. இந்த இடங்களும் குழந்தைகளுக்கு பிடித்தமான இடமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


PC- C.Chandra Kanth

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X