Search
  • Follow NativePlanet
Share
» »கோடை முடிஞ்சிருச்சி... வாங்க நார்த்இண்டியா பக்கமா ஒரு அசத்தல் டூர் போய்ட்டு வரலாம்!

கோடை முடிஞ்சிருச்சி... வாங்க நார்த்இண்டியா பக்கமா ஒரு அசத்தல் டூர் போய்ட்டு வரலாம்!

இமயமலை சாதாரணமாவே ரொம்ப குளிரா இருக்கும். இதுல இழுத்துப் போர்த்திட்டு தூங்காமா, அங்கெல்லாம் எப்படி பயணம் செய்வது என்றுதான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனா வெண்மையையே உருக்கிக் கொட்டிய பன

By Udhaya

இமயமலை சாதாரணமாவே ரொம்ப குளிரா இருக்கும். இதுல இழுத்துப் போர்த்திட்டு தூங்காமா, அங்கெல்லாம் எப்படி பயணம் செய்வது என்றுதான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனா வெண்மையையே உருக்கிக் கொட்டிய பனிமூடிய சிகரங்கள், கண்ணாடியா இது என்று நம்மை வியக்கச் செய்து உறைந்துகிடக்கும் ஏரிகள், காலார நடந்தால் நம்மை பறக்கச் செய்யும் பனிச்சறுக்கு உள்ளிட்ட பனிக்கால விளையாட்டுகள் என்று இமயமலை பனிக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாகவே திகழ்ந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலையை சேர்ந்த 3 மாநிலங்களும் குளிர்காலத்தின் போது அதிக பனிப்பொழிவை பெறுகின்றன. இந்தக் காலங்களில் இம்மூன்று மாநிலங்களை சார்ந்த சிம்லா, குல்மார்க், லே, லடாக், நைனித்தால் உள்ளிட்ட நகரங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. வாருங்களேன் இப்படி ஒரு வித்தியாசமான சுற்றுலாவுக்கு போய்ட்டு வரலாம்.

சோப்தா

சோப்தா

சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

Vvnataraj

ஆலி

ஆலி


சோப்தா - ஆலி தூரம் : 350கிமீ

பயண நேரம் : 11 மணி நேரம்

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.

Mandeep Thander

 குல்மார்க்

குல்மார்க்

ஆலி - குல்மார்க் : 890 கிமீ

பயண நேரம் : 21 மணி நேரம்

மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் பகுதி 'கோண்டோலா' கேபிள் கார் பயணத்துக்காக உலக அளவில் மிகவும் பிரபலம். இந்த கேபிள் கார் உலகின் 2-வது உயரமான கேபிள் கார் பயணமாக அறியப்படுகிறது. அதோடு பனிச்சறுக்கு விளையாட்டுக்காகவும் குல்மார்க் நகரம் புகழ்பெற்றது.

 பஹல்கம்

பஹல்கம்


குல்மார்க் - பஹல்கம் : 139கிமீ

பயண நேரம் : 3 மணி நேரம் 40 நிமிடங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் பஹல்கம் எனும் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது. ஹிந்துக்களின் புனித பயணமான அமர்நாத் யாத்திரை பஹல்கமை கடந்து தான் செல்ல வேண்டும். பஹல்கமிலிருந்து இந்த யாத்திரையை முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்.

micknik

குஃப்ரி

குஃப்ரி

குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற பனிச்சறுக்கு ஸ்தலமான குஃப்ரியில் பனிமலையேற்றம், குதிரையேற்றம், கேம்பிங்க், கோ- கார்ட்டிங்க் போன்ற சாகச விளையாட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

Supreet

தரம்ஷாலா

தரம்ஷாலா


ஹிமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் தரம்ஷாலா , மனம் மயக்கும் பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.


இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். இப்படி ஒரு அழகான இடத்தைப் பற்றி இங்கு படிப்பவர்கள், இதை படித்தவுடன் இன்றே இவ்விடத்தைக் காணக் கிளம்பிவிடுவர். மனதை சொக்க வைக்கும் பல அழகிய இடங்களைக் கொண்ட இவ்விடத்தைக் காண கண் கோடி வேண்டும். பிறந்த பயனை அனுபவிக்க மனிதர்களாகிய நாம் ஒருமுறையாவது இங்கு சென்று வர வேண்டும். சுற்றுலா செல்ல விருப்பமுடைய அனைவருமே காண வேண்டிய இடமான இவ்விடத்தைப் பற்றி பல அரிய மற்றும் சிறந்த தகவல்களை நாம் இங்கு காண்போமா

காங்க்ராவின் வடகிழக்கே 27 km தொலைவில் உள்ளது தர்மஷாலா. இமாச்சல பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க மலை வாசஸ்தலமாக விளங்கும் இத்தலம், சண்டிகரிலிருந்து 251 km தொலைவிலும், மணாலியிலிருந்து 243 km தொலைவிலும், சிம்லாவிலிருந்து 247 km தொலைவிலும், புதுதில்லியிலிருந்து 496 km தொலைவிலும் உள்ளது.

காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் இந்த இடம், எங்கு பார்த்தாலும் வியப்பை ஏற்படுத்தும் அழகைக் கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப் படுத்துகிறது. என் மனம் இங்கு பிரமிப்பில் உறைந்து நிற்கிறது. அடடா, என்ன அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை.

காங்க்ரா பள்ளத்தாக்கின் முக்கிய நகரமாக விளங்கும் இவ்விடத்தில் 1905 ஆம் வருடம் ஒரு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அது இவ்விடத்தை பேரழிவுக்குள்ளாக்கியது. அதன் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் ஒரு அழகிய மலை வாசஸ்தலமாக மாற்றப்பட்டது.

sanyam sharma

மணாலி

மணாலி

ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லாவை போலவே அதிக மக்களால் சுற்றிப் பார்க்கப்படும் மலைவாசஸ்தலங்களில் மணாலி முக்கியமானது. இங்கு பனிக்காலங்களில் மவுண்ட்டெயின் பைக்கிங், பாராகிளைடிங், பனிச்சறுக்கு, ஜோர்பிங் போன்ற சாகச விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.

சிம்லா

சிம்லா


ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலை நகரமாக திகழும் சிம்லா, 'கோடை காலப் புகலிடம்', 'மலைகளின் ராணி' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. சிம்லாவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் பனிக்காலங்களில் இந்த எழில்கொஞ்சும் மலைப்பிரதேசத்தை தேடி வருகின்றனர்.
Darshan Simha

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதோடு ஸ்ரீநகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தால் ஏரி உறைந்துபோய் பனிச்சறுக்கு விளையாட ஏற்றதாக மாறிவிட்டிருக்கும்.

Gauri.mirji

முசூரி

முசூரி

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. சமயச் சிறப்பு வாய்ந்த இடங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X