Search
  • Follow NativePlanet
Share
» »சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

இந்தியாவில் முறையான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம் சண்டிகர் ஒன்று தான். பிரஞ்சு நாட்டு கட்டிடக்கலை நிபுணர் கோர்புசியர் என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக விளங்குகிறது. ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் இயற்கை அழகும், கட்டிடக்கலை நுட்பமும் அழகியல் கலவையாக மிளிர்கிறது இந்நகரம். சரி வாருங்கள் சண்டிகர் நகருக்கு அருகில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள் இருக்கும் சில அருமையான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிம்லா:

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

Photo: DevashishP

இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் சிம்லாவுக்கு நிச்சயம் எப்பொதும் தனியிடம் இருக்கும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரமான சிம்லா சண்டிகரில் இருந்து 116 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஹிமாலய மலையில் மிகவும் ரம்யமான சூழலில் இயற்கை எழில் கொஞ்சும் சிம்லா நகரம் இயற்கையை நேசிப்பவர்களுக்கும், சாகச விளையாட்டுகளில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் மிகவும் ஏற்ற இடமாகும். கரடுமுரடான மலைப்பாதைகளில் வண்டி ஓட்டுவது, பாராசூட் உதவியுடன் பாராகிளைடிங் செய்வது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

கசௌலி:

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

Photo: Koshy Koshy

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கசௌலி என்னுமிடம் அழகான மலைவாசஸ்தளமாக மட்டும் இல்லாமல் புராதன முக்கியத்துவம் ஓரிடமாகவும் இருக்கிறது. சண்டிகரில் இருந்து 59 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

ராமாயணத்தில் அனுமன் சஞ்சீவினி மலையை தூக்கி வரும் போது இந்த இடத்தின் மேல் கால் ஊன்றி சென்றாராம். இந்த கசௌலியில் குர்கா கோட்டை, வைன் தயாரிக்கும் இடம், பாபா பாலக் நாத் கோயில், மங்கி பாயிண்ட் போன்றவை முக்கிய சுற்றுலா ஈர்ப்புகலாக விளங்குகின்றன.

மோர்னி மலை:

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

Photo: Haryana Tourism

சண்டிகரில் இருந்து வெறும் 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த மோர்னி மலை வார விடுமுறையின் போது வித்தியாசமான செயல்களில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும். மலையேற்றம், கயாக்கிங், பாறையேற்றம் போன்ற சாக விளையாட்டுகளில் பங்கு கொள்ள நிச்சயம் இங்கு வர வேண்டும்.

பர்வனூ:

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

Photo: Giridhar Appaji Nag Y

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பர்வனூ என்னும் நகரம். மலைவாசஸ் தளமான இங்கு இயற்கை அழகு நிறைந்த இடங்களை காட்டிலும் இங்குள்ள ஆலைகள் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?. ஆம் இங்கே ஜாம், ஜெல்லி, குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகள் நிறையவே இருக்கின்றன. அங்கு சென்று அவை தயாரிக்கப்படும் விதம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X