Search
  • Follow NativePlanet
Share
» »இந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க!

இந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க!

நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்கள் எப்போதும் பழக்கப்பட்டதாய் இருக்கும். அதாவது சென்னை என்றால் மெரினா பீச், தமிழக சுற்றுலா என்றாலே கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, நீர்வீழ்ச்சினாலே குற்றாலம், மலைப்பிரத

By Udhaya

நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்கள் எப்போதும் பழக்கப்பட்டதாய் இருக்கும். அதாவது சென்னை என்றால் மெரினா பீச், தமிழக சுற்றுலா என்றாலே கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, நீர்வீழ்ச்சினாலே குற்றாலம், மலைப்பிரதேசம்னா ஊட்டி. இப்படி டிபாஃல்ட் செட்டிங்க்கில் நம் மனதுக்குள் பதிந்திருக்கும் சில விசயங்கள் இருக்கின்றன. ஆனால் சுற்றுலாப் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் நம் கண்களுக்கு தெரிந்தாலும், மனதுக்கு அவ்வளவு சீக்கிரம் எட்டாத சில விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரைப் பற்றி நினைப்பவர்களுக்கு பொள்ளாச்சி என்ற இடத்தை நன்கு தெரிந்திருக்கும். ஆனால் மனதில் சுற்றுலா செல்ல யோசிக்கும்போது பொள்ளாச்சியை நினைவுக்கு கொண்டு வர தாமதமாகும். அதுமாதிரிதான் மாமல்லபுரம், புதுச்சேரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மார்த்தாண்டம், திருச்சி, பாபநாசம், ஊட்டி பற்றி நினைப்பவர்கள் அதன் அருகாமையில் இருக்கும் இப்படி பட்ட இடங்களை பற்றி பெரிதாக நினைக்கமாட்டார்கள். அல்லது அந்த இடத்தை குறைவாக மதிப்பிடுவார்கள். அப்படி பட்ட இடங்களைப் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்..

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி தூரம்: 44கிமீ தோராயமாக

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி பயண நேரம் : 1 மணி நேரம் 30 நிமிடங்கள்

பொள்ளாச்சியில் காணவேண்டிய இடங்கள்:

சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.


எப்படி செல்வது

கோயம்புத்தூரிலிருந்து பேருந்துகள், வாடகை வண்டிகள் கிடைக்கும். சுயமாக பயணிக்கவிரும்புபவர்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 83 பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கவேண்டும். மலுமிச்சம்பட்டி, ஒத்தைக்கல் மண்டபம் வழியாக பயணிக்கலாம்.

Vijay S

மாமல்லபுரம் - முட்டுக்காடு

மாமல்லபுரம் - முட்டுக்காடு

மாமல்லபுரம் - முட்டுக்காடு தூரம்: 23 கிமீ

மாமல்லபுரம் - முட்டுக்காடு பயண நேரம் : 21 நிமிடங்கள்

முட்டுக்காட்டில் காணவேண்டிய இடங்கள்:

முத்துக்காடு காயல் நீர் பல நீர் விளையாட்டுகளுக்கு பேர்போன ஒரு இடமாகும். நீர்ச்சறுக்குதல், பாய்மர சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஒருவர் தன்னால் இயன்ற அளவு தன்னை ஈடுபடுத்திகொள்ள முடியும். முத்துக்காடு சென்னையில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

கோவளம் செல்லும் போது இந்த இடத்தை தவற விடக்கூடாது. கோவளத்தில் உள்ள முத்துக்காடு, நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும், மாசு பற்றிய கவலை இல்லாமல் இயற்கையின் புகலிடமாக அமைந்துள்ளது. தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் நன்றாக பராமரிக்கப்பட்டு சுற்றுலா நடவடிக்கைகள் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் போது, பாய்மர படகு போட்டி முத்துக்காட்டில் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு பார்வையாளர்களை முத்துக்காடு காயல் நீருக்கு ஈர்க்கிறது. இந்த பகுதியானது பல்வேறுபட்ட தாவர மற்றும் விலங்கின வகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பசுமை மூலப்பொருட்களும், மாசற்ற பரந்த நீர் பரப்பையும் கொண்டுள்ளது

முட்டுக்காடு எப்படி செல்வது

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் 23 கிமீ முன்பாகவே முட்டுக்காட்டை அடையமுடியும். அதே நேரத்தில் மகாபலிபுரத்திலிருந்து 23 கிமீ சென்னையை நோக்கி பயணித்து இந்த இடத்தை அடையலாம்.

Ashwin Kumar

புதுச்சேரி - பிச்சாவரம்

புதுச்சேரி - பிச்சாவரம்


புதுச்சேரி - பிச்சாவரம் தூரம்: 76 கிமீ

புதுச்சேரி - பிச்சாவரம் பயண நேரம் : 2 மணி நேரம் (தோராயமாக)

பிச்சாவரத்தில் காணவேண்டிய இடங்கள்:

கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.

குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.

செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.

எப்படி செல்வது

புதுச்சேரியிலிருந்து தெற்கு திசையில் 76 கிமீ தூரம் பயணித்தால் பிச்சாவரத்தை எளிதில் அடையலாம். புதுச்சேரியிலிருந்து வேளாங்கன்னி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர் என எல்லா ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் பேருந்து, வாகனங்கள் செல்லும். எனவே போக்குவரத்துக்கு சிக்கல் இருக்காது.

Karthik Easvur

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி


ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தூரம்: 20 கிமீ

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பயண நேரம் : 20 நிமிடங்கள்

தனுஷ்கோடியில் காணவேண்டிய இடங்கள்:

கண்ணோட்டம் படங்கள் ஈர்க்கும் இடங்கள் இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி கிராமம் (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும்.

இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. இராவணனின் தம்பியான விபீஷணர் இராமரிடம் சேது பாலத்தை உடைத்து விடுமாறு கேட்டுக்கொண்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேண்டுகோளுக்கிணங்க இராமர் தன்னுடைய வில் அல்லது தனுசின் ஒரு முனையை கொண்டு சேதுவில் தட்டி அதனை உடைத்தார்.

இந்த புராணகதை நிகழ்ந்த இடமாக இன்றைய தனுஷ்கோடி உள்ளதால் அதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. உண்மையில் இன்றும் கூட இராமரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் சுவடுகளை தனுஷ்கோடியில் காண முடியும் என நம்பப்படுகிறது. இந்த பாலம் இன்றும் இராமர் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. சேதுவில் ஊற்றெடுக்கும் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால் புனிதப்பயணிகள் இராமேஸ்வரம் செல்லும் முன் இங்கே குளித்து செல்வார்கள்.

எப்படி செல்வது

ராமேஸ்வரத்திலிருந்து மிக அருகில் அமைந்திருக்கும் தனுஷ்கோடி கிட்டத்தட்ட அழிந்து போன ஒரு நகரமாகும். ஆனாலும் இப்போதும் நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

Mike Prince

தூத்துக்குடி - திருச்செந்தூர்

தூத்துக்குடி - திருச்செந்தூர்

தூத்துக்குடி - திருச்செந்தூர் தூரம்: 35 கிமீ

தூத்துக்குடி - திருச்செந்தூர் பயண நேரம் : 50 நிமிடங்கள்

திருச்செந்தூரில் காணவேண்டிய இடங்கள்:

திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

எப்படி செல்வது

தூத்துக்குடியிலிருந்து தெற்கு நோக்கி பயணித்தால் ஒரு மணி நேரத்துக்குள்ளாக திருச்செந்தூரை அடையலாம். மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய இடங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

vaikundaraja.s

குளச்சல் - மண்டைக்காடு

குளச்சல் - மண்டைக்காடு

குளச்சல் - மண்டைக்காடு தூரம்: 4 கிமீ

குளச்சல் - மண்டைக்காடு பயண நேரம் : 6 நிமிடங்கள் ஏறக்குறைய

மண்டைக்காட்டில் காணவேண்டிய இடங்கள்:

மண்டைக்காட்டு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு எனும் நகரில் அமைந்துள்ளது. பொன்னம்மை என்பவரின் சமாதியில் எழுந்த ஒரு கோவிலாகும். இவ்விடம் முற்காலங்களில் பனங்காடாக இருந்தது. இங்கு நடைபெறும் மாசித் திருவிழா சிறப்பு வாய்ந்தது. கல்வி, வேலைவாய்ப்புக்கு இடையூறு இருந்தால், முழு மனதோடு மண்டைக்காடு வந்து அம்மனை வேண்டி விரும்பி வழிபட்டால் முழு கஷ்டத்தையும் நீக்கி நல்வாழ்வு அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.

எப்படி செல்வது

குளச்சலிலிருந்து தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக வந்துவிடும் மண்டைக்காடு. அவ்வளவு அருகில் காணப்படுகிறது. மேலும் நாகர்கோயிலிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மார்த்தாண்டம் - சிதறால்

மார்த்தாண்டம் - சிதறால்

மார்த்தாண்டம் - சிதறால் தூரம்: 6.6 கிமீ

மார்த்தாண்டம் - சிதறால் பயண நேரம் : 18 நிமிடங்கள்

சிதறாலில் காணவேண்டிய இடங்கள்:

சிதறால் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. சிதறால் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த குன்றின் மேல் உள்ள குகையில், பாறைகளில் செதுக்கிய ஊழிய கடவுள்கள் மற்றும் ஜெயின் தீர்தங்கரார்களின் உருவங்களை காணலாம்.

எப்படி செல்வது

மார்த்தாண்டத்திலிருந்து உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி, வழியாக செல்வது குறைந்த தொலைவு என்றாலும், போக்கு வரத்து நெரிசல் மிக்க பகுதி இதுவாகும். எனவே கிறிஸ்துராஜா ஆலயம், நேசமணி பாலம் வழியாக திக்குறிச்சி சாலையை அடைந்து அங்கிருந்து சிதறாலை அடைவது சிறந்ததாகும்.

Infocaster

பாபநாசம் - மணிமுத்தாறு

பாபநாசம் - மணிமுத்தாறு

பாபநாசம் - மணிமுத்தாறு தூரம்: 12கிமீ

பாபநாசம் - மணிமுத்தாறு பயண நேரம் : 26 நிமிடங்கள்

மணிமுத்தாறில் காணவேண்டிய இடங்கள்:

மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது. மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது.

எப்படி செல்வது

மணிமுத்தாறு பாபநாசத்திலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாபநாசத்திலிருந்து மாநில நெடுஞ்சாலை 178 வழியாக தாமிரபரணி ஆற்றைக் கடந்து மணிமுத்தாறை அடையலாம். அல்லது அங்கிருந்து அம்பாசமுத்திரம் வரை சென்று பின் மணிமுத்தாறு நோக்கி படையெடுக்கலாம்.

Vd89

திருச்சி - விராலிமலை

திருச்சி - விராலிமலை

திருச்சி - விராலிமலை தூரம்: 30கிமீ

திருச்சி - விராலிமலை பயண நேரம் : 30 நிமிடங்கள்

விராலிமலையில் காணவேண்டிய இடங்கள்:

விராலிமலை முருகன் கோவில் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது. 207 படிகளை கடந்தால் கோயிலை அடையலாம். கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது.

எப்படி செல்வது

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் செல்லும்போது அரை மணி நேரத்திலேயே விராலிமலையை அடையமுடியும்.

C.KUMARASAMY,THENNAMBADI

ஊட்டி - மசினகுடி

ஊட்டி - மசினகுடி

ஊட்டி - மசினகுடி தூரம்: 30 கிமீ

ஊட்டி - மசினகுடி பயண நேரம் : ஒரு மணி நேரம்

மசினகுடியில் காணவேண்டிய இடங்கள்:

ஊட்டியில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளார் இந்த பேரழகி. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே ஆகிறது. இங்கு நன்கு தேர்ச்சி பெற்ற வழிகாட்டிகள் இருக்கின்றனர். அதோடு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவரும் விடுதிகளும் உள்ளன. வகைவகையான உணவுகளுடன், உங்களை அவை வரவேற்கும். நீங்கள் இந்த காட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். உங்களுக்கு மிக அருமையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். பந்திப்பூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது முதுமலை காடுகள். இங்கு சவாரி செய்யும்போது வங்கப் புலிகளையும் காணமுடியும்.

எப்படி செல்வது

ஊட்டியிலிருந்து ஒரு மணி நேரத்தில் அடையும் தொலைவில் அமைந்துள்ளது இந்த மசினகுடி. இங்கு பயணிக்க வேண்டுமானால் தேசிய நெடுஞ்சாலை எண் 700ல் பயணிக்கவும்.

Chris Stevenson

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X