Search
  • Follow NativePlanet
Share
» »'I' நாயகன் விக்ரமின் படங்களில் வந்த அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

'I' நாயகன் விக்ரமின் படங்களில் வந்த அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

'I' பட நாயகன் விக்ரம், இவரின் படங்கள் எல்லாவற்றையும் அடுத்தடுத்து பார்த்தால் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகர் நடித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். 'ஐ' படம் ஒன்று போதும் அவரின் அர்பணிப்பு உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு உதாரணம். அந்த அளவு தன் உடலை மாற்றி வித்தியாசமான நடிப்பை கொண்டு நம்மை அசரடிப்பார். அதற்கேற்ப அவரின் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக் களத்தில் அமைந்திருக்கும். அப்படி அவர் நடித்திருக்கும் படங்களில் வரும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அனைத்து உள்நாட்டு விமான கட்டணங்களில் 15% தள்ளுபடி பெற்றிடுங்கள்

ராவணன் :

ராவணன் :

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு, கார்த்திக் நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ராவணன். எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் இப்படத்தில் சில காட்சிகள் அவை படம் பிடிக்கப்பட்ட இடங்களுக்காக பெரிதும் பேசப்பட்டன.

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

இப்படத்தில் வரும் 'கெடாக்கறி' பாடல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒர்ச்சா என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் ருத்ர பிரதாப் சிங் என்ற மன்னரால் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் வித்தியாசமான கட்டிடக்கலையியல் அமைப்புப்படி உருவாக்கப்பட்ட கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள் போன்றவை உள்ளன.

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

இங்குள்ள ராமராஜா கோயில், ஜஹாங்கிர் மஹால் போன்றவை ஹிந்து மாற்றும் முகலாய கட்டிடக்கலைகளின் கலவையாக திகழ்கின்றன. அரசரின் ஒட்டகங்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்ட உத் கானா, பத்வா நதிக்கரையில் இருக்கும் சத்திரங்கள் போன்றவற்றை இங்கு செல்கையில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.

Photo:Henry Flower

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

ராவணன் - கெடாக்கறி - ஒர்ச்சா:

இவையெல்லாம் இன்று சிதலமடைந்து காணப்பட்டாலும் இந்த நகரத்தினுள் செல்கையில் பழங்காலத்துக்கே நாம் சென்று விட்டது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்படும். ஒர்ச்சா நகரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

இப்படத்தில் வரும் 'உசுரே போகுதே' பாடல் படம் பிடிக்கப்பட்ட விதம் அதனை பார்த்த எல்லோரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். அப்பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவியாகும். உலக நாயகன் கமலஹாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த 'புன்னகை மன்னன்' திரைப்படத்தின் முக்கிய காட்சிகளும் இங்கே தான் படம் பிடிக்கப்பட்டன.

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

'இந்தியாவின் நயாகரா அருவி' என்ற பெருமைக்குரிய இந்த அருவி திரிச்சூர் மாவட்டத்தில் பசுமையான வனத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. பருவமழை காலமான ஜூலை முதல் செப்டெம்பர் மாதங்கள் இங்கு வர ஏற்றதாகும்.

Photo:NIHAL JABIN

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

ராவணன் - உசுரே போகுதே - அதிரப்பள்ளி அருவி:

சாலக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அதிரப்பள்ளி அருவி அமைந்திருக்கிறது. அதிரப்பள்ளி அருவியை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. திரிச்சூரில் உள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

தெய்வத்திருமகள் - ஊட்டி:

தெய்வத்திருமகள் - ஊட்டி:

பேபி சாரா மற்றும் விக்ரமின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் தெய்வத்திருமகள். மன வளர்ச்சி இல்லாத தந்தைக்கும் அவரின் மகளுக்கும் நடக்கும் பாசப்போராட்டம் படம் பார்த்த எல்லோர் கண்களையும் குளமாக்கியது. இப்படத்தின் பெரும்பால காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன.

தெய்வத்திருமகள் - ஊட்டி:

தெய்வத்திருமகள் - ஊட்டி:

ஊட்டியில் இருந்து 28 கி.மீ தொலைவில் அதிசயமாக இன்னும் எவ்வித வர்த்தகத்தனத்திற்கும் உட்படாமல் அற்புதமான இயற்கை காட்சிகளை அள்ளி வழங்கும் 'அவலாஞ்சி' என்னும் இடத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

Photo:Sankara Subramanian

தெய்வத்திருமகள் - ஊட்டி:

தெய்வத்திருமகள் - ஊட்டி:

இங்கு அமைந்திருக்கும் அவலாஞ்சி ஏரியும் அதனை சுற்றியுள்ள அழகான தேயிலைத் தோட்டங்களும் மெஸ்மரிக்கும் அழகுடன் நம்மை வசீகரிப்பவை. அடுத்தமுறை ஊட்டி செல்கையில் நிச்சயம் இந்த ஏரிக்கு சென்று வாருங்கள்.

Photo:stonethestone

டேவிட் - கோவா :

டேவிட் - கோவா :

விக்ரமின் இயல்பான வெகுளித்தனம் நிறைந்த நகைச்சுவை உணர்வுள்ள நடிப்பை வெளிக்காட்டிய படம் 'டேவிட்'. எதிர்பாத்த அளவு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு புதுமையான ஒன்றாக இருந்தது. இதில் விக்ரம் கோவாவில் வாழும் மீனவராக நடித்திருப்பார்.

டேவிட் - கோவா :

டேவிட் - கோவா :

இப்படம் கோவாவின் அழகு நிறைந்த கடற்கரைகளில் படமாக்கப்பட்டது. நண்பர்களுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய ஓரிடம் கோவாவில் இருக்கும் பீச்சுகள் தான்.

டேவிட் - கோவா :

டேவிட் - கோவா :

மண்டேரிம் பீச், அகோண்டா பீச், பகா பீச் போன்றவை கோவாவில் இருக்கும் பிரபலமான கடற்கரைகள் ஆகும். டேவிட் படத்தில் வரும் கவேலோச்சிம் பீச் சால் நதிக்கு அருகில் அமைந்திருக்கிறது. இன்னும் அதிகம் பிரபலமாகாததால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கிறது. கடற்கரையை ஒட்டியே பசுமையான தென்னந்தோப்புகள், வயல்கள் போன்றவை இருப்பது இந்த இடத்தை மேலும் அழகாக மாற்றுகிறது.

டேவிட் - கோவா :

டேவிட் - கோவா :

சாலை மார்கமாகவும் கோவாவை எளிதாக அடைய முடியும் எனினும் நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்வதே சிறப்பானது. கோவாவிற்கு எப்படி செல்வது என்பது பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக்குங்கள்.

கோவாவில் தங்குவதற்கு ஹோட்டல்களை இங்கே முன்பதிவு செய்திடுங்கள். ஹோட்டல் கட்டணங்களில் சலுகைகளை பெற்றிடுங்கள்.

Photo:Kaushal Karkhanis

சாமி - திருநெல்வேலி:

சாமி - திருநெல்வேலி:

படத்தின் ஒப்பனிங் பாடலிலேயே திருநெல்வேலியின் பெருமை பேசி, ஒடு ஓடு என்று ஓடி ஹிட்டான படம் தான் 'சாமி'. திரிஷா, விவேக் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வேலி நகரத்தில் படமாக்கப்பட்டதாகும்.

சாமி - திருநெல்வேலி:

சாமி - திருநெல்வேலி:

சொல்லுக்கும் நெல்லுக்கும் பெயர் போன திருநெல்வேலியில் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. நகர மையத்தில் அமைந்திருக்கிறது வரலாற்று புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயில். தட்டினால் இசையெலுப்பும் இசைத்தூண்கள் இங்குஉள்ளன. திருநெல்வேலி செல்பவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடம் இந்த கோயிலாகும்.

Photo:Simply CVR

சாமி - திருநெல்வேலி:

சாமி - திருநெல்வேலி:

திருநெல்வேலிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உருவாக முக்கியமான காரணங்களுள் ஒன்று நெல்லையப்பர் கோயிலை ஒட்டியே அமைந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா தான். இதன் தனித்துவமான சுவையை ருசிக்க பல ஊர்களில் இருந்தும் தினமும் இந்த கடையில் அல்வா வாங்க ஏராளமான மக்கள் வருகின்றனர். மலையில் கடை திறந்த சில மணி நேரங்களில் அல்வா முழுக்க விற்று தீர்ந்து விடுகிறது.

சாமி - திருநெல்வேலி:

சாமி - திருநெல்வேலி:

திருநெல்வேலியில் எங்கு தங்குவது? எப்படி அடைவது? போன்ற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Prashanth Mahadevan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X