Search
  • Follow NativePlanet
Share
» »சிம்ம ராசிக்காரர்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் சிம்மபுரீஸ்வரர்!

சிம்ம ராசிக்காரர்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் சிம்மபுரீஸ்வரர்!

ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் என தனிச் சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. இதில், சிம்ம ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு மட்டும் உடனே சென்று வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு ராசியும், நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். விரும்பமானக் கடவுளை வழிபடுவதைக் காட்டிலும், ராசி நட்சத்திரத்திற்குரிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது என்பது மேலும் பலன்களை வாரிவழிங்கும். மனிதனின் கணிப்புகள் நம்பகத்தன்மை அற்றவைதான். சில விஷயங்கள் நிறைவேறும், சிலவை எதிர்பார்ப்புகளாகவே முடிந்துவிடும். ஆனால், கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் எவையும் வீணாவதில்லை. அவ்வாறாக, ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் என தனிச் சிறப்புமிக்க திருத்தலத்திற்குச் சென்று வழிபட்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும் என்பது கூற்று. இதில், சிம்ம ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் உடனே சென்று வழிபட்டு வாருங்கள். பின்பு பாருங்கள், உங்களை அறியாமலேயே அடுத்தடுத்து வரும் வாழ்நாட்களில் புகழ்ச்சியுழும், மகிழ்ச்சியிலும் பல மடங்கு உச்சத்தை அடைவீர்கள்.

தல சிறப்பு

தல சிறப்பு


பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது திருவண்ணாமலை. இந்த ஊரில் தான் அமைந்துள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற அந்த சிவதலம். இத்தலத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. அதன் மேல் மரகதத் திருமேனி அமைந்திருப்பதே இக்கோவிலில் சிறப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு உரிய தலமாக கருதப்படும் இக்கோவிலில் வந்து வழிபடுவதன் மூலம் தொழில், வர்த்தகம், குடும்பம் என அனைத்திலும் தலைசிறந்தவராக உருவெடுக்கலாம் என்பது நம்பிக்கை.

Richard Mortel

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்ட ஆவணியாபுரத்தில் ஏரண்ட முனிவரால் நிறுவப்பட்ட சிம்மபுரீஸ்வரர் இறைவன் வீற்றிருந்த கோவில் சிதிலமடைந்து மறைந்து போனது. பின், ஆதிசங்கர பகவத்பாதர் புண்ணிய யாத்திரை மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முனிவர், தான் இப்பகுதியில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்ததையும், தற்போது அக்கோவில் அழிந்துவிட்டதையும் கூறியுள்ளார். இதனை உணர்ந்த சங்கரரும், மண்ணில் புதையுண்டு கிடந்த அந்த லிங்கத்தை மீட்டெடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இதனாலேயே இத்தல ஈசனுக்கு அவணீருவரர் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

Jagadeeswarann99

சான்றுகளின் அடிப்படையில்

சான்றுகளின் அடிப்படையில்


இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு இத்தலம் பல்லவ மன்னர்களால் கி.பி.9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் மூலம் கணிக்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இந்த ஊர் நாராயணமங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Jagadeeswarann99

தலஅமைப்பு

தலஅமைப்பு


மூலவர் சன்னதியில் வீற்றிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. அவர் மேல் அமைந்துள்ள பாணம் மரகதத் திருமேனி ஆகும். இதனருகே தெற்கு நோக்கியவாறு மங்களாம்பிகை அம்பாள் சன்னிதி உள்ளது. மூலவர் சன்னிதிக்கு முன் நந்தீஸ்வரர் காட்சியளிக்கிறார். பன்னிரு கரங்களுடன் முருகப் பெருமாள் திருவுருவம் பெருமாளின் அம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jagadeeswarann99

வழிபாடு

வழிபாடு


தொழிலில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவோர் இத்தலத்தில் உள்ள அவணீஸ்வரர் என்ற சிம்மபுரீஸ்வரரை வழிபட்டுச் சென்றால் ஒரு சில வாரங்களிலேயே கூடுதலான லாபத்தைச் சந்திக்க முடியும். மேலும், திருமணத் தடையுடையோர், குழந்தை பாக்கியம் அற்றோர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

Jagadeeswarann99

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டியவை யாவும் நிறைவேறியதும் மூலவர் மற்றும் அம்பாளுக்கு புது ஆடைகள் காணிக்கையாக வழங்கி, பால், பழம், திருநீர், சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து மாலையிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்கின்றனர்.

Jagadeeswarann99

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு சிம்மபுரீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Marvelmurugan

திருவிழா

திருவிழா


சிவபெருமானுக்கு உகந்த விரத நாட்களான பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்டவை இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று இங்கு நடைபெறும் வழிபாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்த பங்கேற்று அருள்பெறுவர்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


அருள்மிகு சிம்மபுரீஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ள ஆவணியாபுரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து காஞ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 66 கிலோ மீட்டர் அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். வேலூர், காஞ்சிபுரம், வந்தவாசி என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அவணியாபுரம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X