Search
  • Follow NativePlanet
Share
» »இந்த காரணங்களுக்காகவே வட கர்நாடகாவுக்கு நம்பிக்கையா சுற்றுலா செல்லலாம்..!

இந்த காரணங்களுக்காகவே வட கர்நாடகாவுக்கு நம்பிக்கையா சுற்றுலா செல்லலாம்..!

உலகம் முழுவதும் இருந்து வருடத்திற்க்கு பல்லாயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பகுதிக்கு நீங்கள் சென்றால் கண்டிப்பாக முழு ஆன்மீகத்தையும், கட்டிடக் கலையின் அழகிலும் மெய் மறந்து விடுவீர்கள்.

சாளுக்கியர்களால் நிறுவகிக்கப்பட்டு வந்த கர்நாடகாவில் அமைந்துள்ள பாதாமி இந்தியாவில் வரலாற்று தேடல்மிக்கவர்களுக்கு முக்கியமான தலமாக உள்ளது. பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள இது கர்நாடகாவின் இரண்டாவது இதயம் என்று கூட சொல்லாம். இங்குள்ள கோவில்களும், வரலாற்று நினைவுகளை சுமந்து நிற்கும் கோட்டைகளின் அழகும் நிச்சயம் காண்போர் மனதை உருகச் செய்திடும். உலகம் முழுவதும் இருந்து வருடத்திற்க்கு பல்லாயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பகுதிக்கு நீங்கள் சென்றால் கண்டிப்பாக முழு ஆன்மீகத்தையும், கட்டிடக் கலையின் அழகிலும் மெய் மறந்து விடுவீர்கள். நம் நாட்டில் ஏராளமான மலைக் கோட்டைகள் இருந்தாலும் அவற்றுடன் பாதாமியை சிறிதும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. கர்நாடகாவின் பிற சுற்றுலாத் தலம் போல் அல்லாமல் பாதாமி தனிப் பெருன்மான்மை சிறப்புகளுடன் உள்ளது. இத்தகைய பாதாமிக்கு ஏன் செல்ல வேண்டும், அப்படி அங்கே என்னதான் உள்ளது என்ற காரணங்கள் சில இங்கே அறிந்துகொள்வோம் வாங்க.

குகைக்கோவில்கள்

குகைக்கோவில்கள்


பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் செல்ல வேண்டிய தலம் இந்த குகைக் கோவில். மணற்பாறைகளால் ஆன மலையில் குடையப்பட்டுள்ள இந்த குகைக்கோவிலில் புராதாண நம்பிக்கை சம்பவங்களையும் நீதிகளையும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள நான்கு குகைக் கோவில்களில் முதல் முக்கியமான கோவில் 5 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிவனின் அர்த்தநாரீஸ்வர அவதாரம் மற்றும் ஹரிஹர அவதாரங்கள் நடராஜ தாண்டவக் கோலங்களுடன் காணப்படுகின்றன. ஹரிஹர அவதாரத்தில் வலப்புறம் சிவனும் இடப்புறம் விஷ்ணுவுமாக சிவபெருமான் காட்சியளிக்கிறார். இங்குள்ள இரண்டாவது குகைக்கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணுக் கடவுளின் வராஹ அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் இடம்பெற்றுள்ளன. குகைக் கோவிலின் கூரையில் புராணக்காட்சிகளும், கருட அவதாரமும் இடம்பெற்றுள்ளன. 100 அடி நீளத்துக்கு காணப்படும் மூன்றாவது குகைக்கோவிலில் விஷ்ணுவின் திரிவிக்கிரம மற்றும் நரசிம்மா அவதாரங்கள் காணப்படுகின்றன. இதைத் தவிர சிவன் மற்றும் பார்வதியின் திருமணக் காட்சி ஓவியங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. நான்காவது குகைக்கோவில் சைன மரபுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் மஹாவீரரின் பத்மாசன கோல சிற்பம் மற்றும் பர்ஷவநாத தீர்த்தங்கரரின் சிறு சிற்பம் போன்றவை வடிக்கப்பட்டுள்ளன.

Raamanp

மல்லிகார்ஜுனா கோவில்

மல்லிகார்ஜுனா கோவில்


பூதநாத கோவில்களின் தொகுப்பில் ஒன்றான இந்த மல்லிகார்ஜுனா கோவில் இப்பகுதியை நோக்கி பயணிகளை ஈர்ப்பதில் வல்லமை பெற்றுள்ளது. அகஸ்திய ஏரியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவில் சாளுக்கிய கட்டிடக்கலை பாணியின் முக்கிய அம்சமான அடித்தள பீட அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கிடைமட்டமான அடுக்குகள், பிரமிடு வடிவ கோபுர அமைப்புகள், வேலைப்பாட்டுடன் கூடிய கல் உத்தரங்களைக்கொண்ட திறந்த மண்டபம் போன்றவை காணப்படுகின்றன. பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் இந்த மல்லிகார்ஜுனா கோவிலுக்கு தவறாமல் வருகை தருவது அவசியமாகும்.

Rudniks

பூதநாத கோவில்

பூதநாத கோவில்


பூதநாத கோவில் தொகுப்பில் உள்ள இரண்டு முக்கியமான கோவில்களில் ஒன்று இந்த பூதநாத கோவிலாகும். மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் சிவபக்தர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கு சிவனின் அவதாரமான பூதநாதர் குடிகொண்டுள்ளார். இந்த கோவிலின் திறந்த மண்டபம் ஏரி வரை நீண்டுள்ளது. இந்தக்கோவிலின் மையக்கருவறையும் மண்டபமும் பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்டதாகும்.

Dineshkannambadi

பாதாமி கோட்டை

பாதாமி கோட்டை


பாதாமியின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமாக உள்ளது பாதாமி கோட்டை. குகைக் கோவிலுக்கு நேர் எதிரில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இது பிரதான நகரத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பூதநாத் கோவிலுக்கு கிழக்கில் அமைந்துள்ளது. அக்காலத்திய சாளுக்கிய மன்னர்கள் வசித்த அரண்மனை இந்தக் கோட்டைதான். கால்நடையாக மட்டுமே சென்றடையக்கூடிய இந்தக் கோட்டையில் விஷ்ணுக் கடவுளை வணங்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியால் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு சிவாலயங்களில் மேற்புறத்தில் உள்ளது சிவபெருமானுக்கும் கீழ்ப்புறத்தில் உள்ளது கணேசக்கடவுளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேல்தளக்கோவிலில் புராணங்களில் இடம்பெற்றுள்ள யானை, சிங்கம் போன்ற மிருக சிற்பங்களைக் காணலாம். கீழ்த்தளக் கோவிலில் திப்பு சுல்தான் 16ம் நூற்றாண்டில் பயன்படுத்திய பீரங்கி ஒன்றையும், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காவல் கோபுரம் ஒன்றையும் காணலாம். இதைத்தவிர கோட்டையில் பயணிகளைக் கவரும் அம்சங்களாக கற்களால் எழுப்பப்பட்டுள்ள பெரிய உணவுத்தானிய கிடங்குகள், ஒரு ரகசியக்கூடம், பாதுகாப்பு கோட்டைச்சுவர்கள் மற்றும் ஒரு ரகசிய சுரங்க அறை போன்றவை அமைந்துள்ளன.

Jmadhu

மலைக்காட்சி தளங்கள்

மலைக்காட்சி தளங்கள்


பாதாமிக்கு அருகிலுள்ள வடக்கு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள மலைக்காட்சி தளங்களில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதியை கண்டுரசிப்பது அவ்வளவு ரம்மியமான காட்சியாகும். இப்பகுதீக்கு வருவோர் தவறவிடக்கூடாத பகுதியாக இது உள்ளது. இந்த தளங்களிலிருந்து பார்த்தால் பாதாமி நகரம் முழுவதையும் மேலிருந்து பார்க்கக்கூடிய அற்புதக் காட்சி கிடைக்கிறது.

Jmadhu

தொல்பொருள் அருங்காட்சியகம்

தொல்பொருள் அருங்காட்சியகம்


பாதாமியிலுள்ள இந்த அருங்காட்சியகம் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்தியத் தொல்லியல் துறையால் 1979ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மியூசியமானது துவக்கத்தில் கல்வெட்டுகள், குறிப்புகள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்களை சேகரித்து வைக்கவே பயன்பட்டது. இருப்பினும் 1982ம் ஆண்டிலிருந்து சில தற்காலத்திய உள்ளூர் சிற்பங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பயணம் செய்தீர்கள் என்றார் 6-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட சில லஜ்ஜா-கௌரி தாய்மை அல்லது பெண்மையைக்குறிக்கும் சிலைகள் மற்றும் சில குறிப்பேடுகளைக் காணலாம். கற்சிற்பங்களுடன் வரலாற்று காலத்துக்கு முந்தைய கலைப்பொருட்களும் குறிப்பேட்டு படிவங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள திறந்த வெளிக் காட்சிக்கூடத்தில் வீரக்கற்கள் மற்றும் துவாரபாலக இரட்டைச்சிற்பங்கள், கலவெட்டுகள் போன்றவையும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Ms Sarah Welch

மலேகட்டி சிவாலயா

மலேகட்டி சிவாலயா


பாதாமியில் பாறைக்குன்றின் உச்சியில் இந்த மலேகட்டி சிவாலயா எனும் கோவில் அமைந்துள்ளது. புராதானமான கற்கோவிலான இது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சிவனின் சாந்தரூப அவதாரத்துக்கான இந்தக்கோவில் கற்பூச்சு மற்றும் கோபுரம் எதுவும் இல்லாமல் காட்சியளிக்கிறது. கீழே உள்ள சிவன் கோவிலில் திராவிட பாணி கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும் தற்சமயம் கருவறை மட்டுமே மிச்சமுள்ளது. இங்கு இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்றில் ஆர்யமிஞ்சி உபாத்யாயா எனும் சிற்பி இந்த மலேகட்டி சிவாலயத்தைக் கட்டியதாகவும், மற்றொன்றில் 1543ம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தை சுட்டுவதாகவும் உள்ளன. ஒரு பெரிய தானியக்கிடங்கு, இரட்டைக் கோட்டைச்சுவர், பல கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஒரு சுரங்க அறை போன்றவற்றை இந்த கோவில் தலத்தில் காண முடியும். பாதாமியின் கோட்டை வளாகத்துள்ளே அமைந்துள்ள இந்தக்கோவில் பயணிகள் அவசியம் காண வேண்டிய ஒரு அம்சமாகும்.

Hemant3d

தத்தாத்ரேய கோவில்

தத்தாத்ரேய கோவில்


பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த தத்தாத்ரேய கோவிலையும் சென்று பார்ப்பது அவசியம். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவில் தார்வாட் பகுதியில் காந்தி சௌக் எனுமிடத்தில் உள்ளது. தட்டன கிடு என்று அறியப்படும் இந்தக்கோவில் தத்தாத்ரேய கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடவுள் மூன்று தலைகளுடன் காட்சியளிக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வர் என்ற மும்மூர்த்திகள் சேர்ந்த ஒற்றை அவதாரமே இந்த தத்தாத்ரேயர். இந்தக்கோவில் அதன் சாளுக்கிய கட்டிடக்கலை அம்சத்துக்காக சிறப்பு பெற்றுள்ளது. இதன் கட்டுமான கலையம்சத்துக்காக இப்பிரதேசத்தில் உள்ள சிறந்த கோவில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

Siddhu8990

பனஷங்கரி கோவில்

பனஷங்கரி கோவில்


கல்யாணச்சாளுக்கியர்களால் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனஷங்கரி கோவில் பாதாமிக்கு அருகில் உள்ளது. கந்த புராணம் மற்றும் பத்மபுராணத்தின்படி இந்த கோவிலுள்ள தெய்வம் சாளுக்கியர்களின் குலதெய்வமான பார்வதி தேவியின் அவதாரமான பனஷங்கரி எனும் தேவிக்கடவுள் ஆகும். இது துர்காமாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி அவதாரமாக சொல்லப்படுகிறது. இந்தக்கோவிலின் விக்கிரகம் கருங்கல்லால் ஆனதாக ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காலடியில் நசுக்கப்பட்ட அசுரனின் தலையோடு காட்சியளிக்கின்றது. மேலும் தேவியின் எட்டுக் கரங்களில் திரிசூலம், கண்டம், கமலப்பாத்திரம், உடுக்கு, வேதச்சுவடி போன்றவை ஏந்தப்பட்டுள்ளன. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பனஷங்கரி கோவிலானது 17ம் நூற்றாண்டில் பரசுராம் அகலே எனும் மராத்திய தளபதியால் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

Jaisuvyas

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X