Search
  • Follow NativePlanet
Share
» »அருணாச்சலத்தில் ஓர் அரிதான சுற்றுலா! எங்கே செல்லலாம் ?

அருணாச்சலத்தில் ஓர் அரிதான சுற்றுலா! எங்கே செல்லலாம் ?

போம்டிலா மிகச் சிறிய நகரமாக இது இருந்தாலும் தன்னுள் பல அம்சங்களைக் கொண்டு அனைவரையும் வரவேற்கிறது. அப்படி என்னதான் இங்கே உள்ளது ?.

இந்தியாவின் வடகிழக்கே நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய மாநிலம் தான் அருணாச்சலப் பிரதேசம். வித்தியாசமான மலைத் தொடர்கள், விசித்திரமான சுற்றுலாத் தலங்கள் இம்மாநிலத்தை நோக்கி உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்க்கக் காரணமாகிறது. அருணாச்சலப் பிரதேசத்தித்ல காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்று தான் போம்டிலா. மிகச் சிறிய நகரமாக இது இருந்தாலும் தன்னுள் பல அம்சங்களைக் கொண்டு அனைவரையும் வரவேற்கிறது. அப்படி என்னதான் இங்கே உள்ளது ?. அதில் ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் பயணிக்கலாம் வாங்க.

போம்டிலா

போம்டிலா


அருணாச்சலத்தில் முக்கியமான சுற்றுலாத் தலம் என்றால் அது போம்டிலா தான். மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையிடமாக உள் போம்டிலா, இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்நகரத்திற்கு பயணம் செய்யும் யாரும் பௌத்த மடாலயங்களையும், கோம்பாஸ்களையும் தவறாமல் சுற்றிப் பார்க்க வேண்டும்.

TassoRija

கைவினைக் களஞ்சியம்

கைவினைக் களஞ்சியம்


போம்டிலாவின் அழகிய சுற்றுப் புறங்களை பார்வையிடுவது மட்டுமின்றி பல நினைவுமிகுந்த பொருட்களையும் வாங்கி வரலாம். குறிப்பாக கைவினை பொருள் மையம் மற்றும் பிற கடைகளில் கிடைக்கக் கூடிய பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்காக போம்டிலா புகழ் பெற்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகையான கம்பளி விரிப்புகளையும், பாரம்பரிய முகமூடிகளையும் இங்கு வாங்கிட முடியும்.

vinodbahal

தவாங்

தவாங்

போம்டிலாவிற்கு வடக்கில் உள்ள தவாங் என்ற சிறிய நகரம் பிரம்மாண்டமான மலைச் சமவெளிகளை கொண்டுள்ள இடமாக இருப்பதால், போம்டிலவிற்கு சுற்றுலா வருபவர்கள் எவரும் இந்நகருக்கு பயணம் செய்ய தவற வேண்டாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 30000 மீட்டர் உயரத்தில் உள்ள தவாங்கில், 400 ஆண்டுகள் பழமையான பௌத்த மடாலயம் ஒன்றும் உள்ளது. இவை மட்டுமல்லாமல், போம்டிலாவில் உள்ள செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், யானைகள் பாதுகாப்பகம் ஆகியவையும் சிறந்த தலங்களாகும்.

Kunal Dalui

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


ஜிரோ

தவாங்கையும், போம்டிலாவையும் சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் காணப்பட்டாலும், ஜிரோ குறிப்பிடத்தக்க சிறப்புகளைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய நகரத்தில் காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாக உள்ளது. பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

rajkumar1220

ரி போய்

ரி போய்


ஜிரோவிற்கு அருகில் உள்ள ரி போய்யிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உமியம் ஏரி. இத உள்ளூர் மக்களால் பரா பாணி என்றும் அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் முக்கிய நீர் மின் அணை உள்ளது. பல விளையாட்டு வசதிகள் உள்ளதாலும் இந்த ஏரி புகழ் பெற்றுள்ளது.

Benoy

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


அருணாச்சலப் பிரதேசம், தேஸ்பூரிலிருந்து சாலை வழியாக 180 கிலோ மீட்டரும், தவாங்கில் இருந்து 160 கிலோ மீட்டரும் தொலைவில் உள்ளது போம்டிலா. மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை சென்றடைய பேருந்து வசதிகள் நல்ல முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

rajkumar1220

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X