Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டிலேயே மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு.. போனா என்னவாகும் தெரியுமா ?

நாட்டிலேயே மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு.. போனா என்னவாகும் தெரியுமா ?

நம் நாட்டில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல சுற்றுலாத் தலங்களையும், அதே நேரம் முழுக்க முழுக்க கொடூரமான ஆபத்துகளையும் கொண்டுள்ள பள்ளத்தாக்கும் ஒன்று உள்ளது.

இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றுள் ஆம்பி பள்ளத்தாக்கு, அரக்கு பள்ளத்தாக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு என சிலவை பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக உள்ளன. கோடை காலங்களிலும், சீஷன் காலத்திலும் இப்பகுதிக்கு பல சுற்றுலாப் பயணிகள், சாகச விரும்பிகள் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதில், நம் நாட்டில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல சுற்றுலாத் தலங்களையும், அதே நேரம் முழுக்க முழுக்க கொடூரமான ஆபத்துகளையும் கொண்டுள்ள பள்ளத்தாக்கும் ஒன்று உள்ளது. வாங்க, அது எங்கே உள்ளது என பார்க்கலாம்.

சம்பல் பள்ளத்தாக்கு

சம்பல் பள்ளத்தாக்கு


உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களை மும்முனைப்பகுதியாகக் கொண்டுள்ளதுதான் சம்மல் பள்ளத்தாக்கு. 1070ம் ஆண்டு இப்பகுதியில் சம்பல் தேசிய சரணாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த வனப்பகுதியை ஊடறுத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள், மணற்கரைப்பகுதிகள் வழியாக சம்பல் ஆறு ஓடுகிறது. சம்பல் ஆறு முழுவதும் கரியல் முதலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் மற்றும் ஆலிகேட்டர் முதலைகளும் இதில் வசிக்கின்றன.

Jonathan Rodgers

ஆழமான பள்ளத்தாக்கு

ஆழமான பள்ளத்தாக்கு


பல நூற்றாண்டுகளாக மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பின் மூலம் சம்பல் பகுதியில் காணப்படும் ஆழமான பிளவுப் பள்ளத்தாக்குகள் உருவாகியுள்ளன. சம்பல் தேசிய சரணாலயம் 400 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக 400 கிலோ மீட்டருக்கு ஓடும் சம்பல் ஆற்றுடன் மொத்தம் 1235 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Bijaya2043

சம்பல் என்னும் சர்மான்யவதி

சம்பல் என்னும் சர்மான்யவதி


புராதாண நூல்களின்படி இந்த சம்பல் ஆறு ஒரு காலத்தில் சர்மான்யவதி எனும் பெயரால் அறியப்பட்டிருக்கிறது. இது ரந்திதேவர் எனும் அரசர் ஆயிரக்கணக்கான பசுக்களை பலி கொடுத்தபோது பெருகிய ரத்தத்தினால் உருவானதாக சொல்லப்படுகிறது. இது போன்ற கதைகள் இப்பகுதிக்கு அதிக மக்கள் பயணம் செய்யாமல் தடுத்து விட்டன. இருப்பினும் இந்தியாவில் ஓடும் மாசுபடாத தூய்மையான ஆறுகளில் இந்த சம்பல் ஆறும் ஒன்று என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

LRBurdak

கொடூரமான பள்ளத்தாக்கு

கொடூரமான பள்ளத்தாக்கு


இயற்கையின் காரணமாக சம்பல் பள்ளத்தாக்கு ஆபத்தானது அல்ல. உண்மையில் அது கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகுந்த பகுதியாக உள்ளது. சம்பல் பள்ளத்தாக்கின் கீழ் வரும் நிலப்பரப்பு, செங்குத்தான பள்ளத்தாக்குகள், பெரிய நதி, மர்ம குகைகள் போன்ற இயற்கை அழகுகளால் நிறைந்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இந்த பள்ளத்தாக்கு சாமானிய மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. டகோஸ் என்று அழைக்கப்படும் மக்களால் சட்டவிரோத நடவடிக்கைகளால் பொதுமக்கள் அத்தகைய உயர் எச்சரிக்கைப் பகுதிகளில் செல்ல பரிந்துரைக்கப்படவில்லை.

The MH15

அருகில் உள்ள சுற்றுலா அம்சங்கள்

அருகில் உள்ள சுற்றுலா அம்சங்கள்


ஒட்டக சபாரி

சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளையும் காட்டுயிர்களையும் பார்த்து ரசிக்க இந்த ஒட்டகச் சவாரிப் பயணம் உதவியாக உள்ளது. மிக நீண்ட காட்டுப்பாதைகள், ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதைகள், பள்ளத்தாக்குகள், கிராமங்கள் வழியாக இந்த ஒட்டகப்பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பயணத்தின்போது இந்தியன் ஸ்கிம்மர், காமன் போச்சார்ட், ரட்டி ஷெல்டக், லெஸ்ஸர் விசிலிங் டீல், மஞ்சள் லாப்விங், சீப்பு வாத்து போன்ற பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் பாடேஷ்வர் எனும் புராதானமான கோவிலுக்கு இந்த ஒட்டகச்சவாரி மூலமாக பயணம் மேற்கொள்ளலாம்.

Vijay.dhankahr28

ஆற்று மிதவைப்படகு சவாரி

ஆற்று மிதவைப்படகு சவாரி


சம்பல் சரணாலயத்தில் மிதவைப்படகு போக்குவரத்து முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. ஆற்றங்கரையில் காணப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை மிக அருகில் பார்க்க வசதியாக இந்த படகுகளை கையாளுவதில் படகோட்டிகள் திறமை பெற்றவர்களாக உள்ளனர். அனுபவமிக்க இயற்கை வழிகாட்டிகளும் உடனிருந்து காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றனர்.

LRBurdak

சம்பல் சஃபாரி

சம்பல் சஃபாரி


சம்பல் சஃபாரி எனும் இந்த காட்டுப்பயணம் உங்களுக்கு சம்பல் சரணாலயத்தின் உட்பகுதியை தரிசிக்க உதவுகிறது. இந்த சரணாலயம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேஷ் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மூன்று மாநிலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

XXN

பாடேஷ்வர் கோவில்

பாடேஷ்வர் கோவில்


சம்பல் சரணாலயப்பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமல்லாது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர் கோவிலையும் பயணிகள் தரிசிக்கலாம். இந்த தொகுப்பு கோவில் வளாகத்தில் சிவபெருக்கான 100க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. இந்த பாடேஷ்வர் தலம் கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமாகவும் கருதப்படுவதால் இந்த கோவில் ஒரு முக்கியமான ஆன்மீகத் தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

Narendra Nath

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X