Search
  • Follow NativePlanet
Share
» »கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்

கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்

கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்

By Udhaya

ஹாய்.. ஹலோ வணக்கம் நட்பூஸ்.. நா உங்க சான்யா.. இன்னிக்கு நாம போகப்போறது தேங்காய்கள் அதிகம் விளையுற கேரள மாநிலத்துக்குத்தான். என்கூட க்ரிஷ் இன்னிக்கு வரல.. ஆனா நா என்னோட மல்யாளி பிரண்ட் ஜிஷ்னுவ கூப்பிட்ருக்கேன். அவருக்கு கேரளாவுல எல்லா இடமும் நல்லா தெரியும்ங்குறனால அவர் உதவியோட நாம சுத்தப்போறோம். சரி அவர பாக்க போற முன்னாடி, கேரள மாநிலம் பத்தியும், அங்க விளையுற தேங்காய்கள் பத்தியும் ஒரு சின்ன விசயத்த ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்.

அதாவது கேரளம் அப்படிங்குற பேரே, கேரம் நிறைந்த நிலம் அல்லது நாடுனுங்குறனாலத்தான் வந்துருக்கு. கேரம் னு சொன்னா தேங்காய் என்று பொருள். இது நம்ம பிரண்ட் ஒருத்தரு சொன்னாரு. அப்றம் இன்னொரு விசயம், இங்க கேரள நாட்டிளம் பெண்கள் இவ்ளோ அழகா இருக்குறதுக்கு காரணமே தேங்காய்ல தயாரிச்ச எண்ணெய் தேய்ச்சி குளிச்சி, அந்த எண்ணெய்ய பயன்படுத்தி செய்யுற பண்டங்கள சாப்டறனாலதான். தேங்காய் இல்லாம இங்க எந்த கூட்டு, பொறியல், குழம்பும் செய்யறதில்ல.. ஆனா தேங்கா விக்குற விலையில இதெல்லாம் எப்படினு நீங்க அலுத்துக்குறது புரியுது. வெய்யிலுக்கு தகுந்த இளநீர்னாலும் சரி, பாளைனு சொல்லப்படுற அந்த மட்டை, தென்ன ஓலை இப்படி தென்னையின் எல்லா விசயங்களும் பயன்படுது. தென்னைய வச்சவனுக்கு எந்த நஷ்டமும் இல்லைனு பழமொழியெல்லாம் கூட இருக்கு.

அடடே... வரு ஜிஷ்ணு வரு.. என்டே அம்மே சுகந்தன்னே..

ஜிஷ்ணு - ஹே.. சான்யா.. நீ மலயாளம் பேசாது இரு.. அது பெட்டர். எனக்கு நல்லா தமிழ் தெரியுது..

சான்யா - அடேய் சாம்பார் மூஞ்சி.. என்கிட்டயே மோதுறயா.. இருடா சேச்சிட்ட சொல்லிக்குடுக்குறேன்.

சான்யா - இப்டிதாங்க நேரம் கிடச்சா நாங்க சண்ட போட்டுட்டே இருப்போம். வாங்க கேரளத்த சுத்தி பாக்கலாம்...

சான்யா - ஜிஷ்ணு .. நிங்கட ஸ்தலங்களில் கறங்காம்போவ..வா..

ஜிஷ்ணு - ஆவோ ஆவோ..

எங்கெல்லாம் போகப்போறோம்

எங்கெல்லாம் போகப்போறோம்

நம்ம மொதல்ல போகுற இடம்னு பாத்தா அது நிச்சயமா உங்களுக்கு ரெம்ப புடிக்கும். ஆனா அதுக்கு முன்னாடி நாம எங்கெல்லாம் போகலாம்னு ஒரு திட்டம் வச்சிருக்கேன், அத பர்ஸ்ட் சொல்லிடுறேன்.

சான்யா - ஆமா.. அத மொதல சொல்லிடு... வெயிட்டிங்க்லயே வெறியேத்துற.. எங்கெல்லாம் போப்போறோம்டா.

ஜிஷ்ணு - சொல்றேன் சொல்றேன். இந்தியாவின் 45 சதவிகித தேங்காய் உற்பத்தி கேரளாவுல இருந்துதான் வருது. அதனால கேரள மாநிலம் முழுவதும் தேங்காய்தான் சிறப்பு.

நாம திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர்னு நிறைய இடங்கள இந்த பதிவுல பாக்கப்போறோம்.

வெறும் தேங்காய்க்காக இந்த டூரா.. ரொம்ப ஃபன்னியா இருக்கு சான்யா

சான்யா - நிசமாவா ஜிஷ்ணு.. உனக்கு ஒன்னு தெரியுமா. தமிழ்நாட்டுல இன்னும் ஒரு வாரத்துக்குள்ள தேங்காய் விலை எகிற போகுதாம்.

ஜிஷ்ணு - அட அப்படியா.. நா கோயம்புத்தூர்ல இருக்கும்போது அப்பவே நிறைய விலை இருந்துச்சி. கேரளத்தில விலை அவ்ளோ கம்மி ஒன்னும் இல்ல. ஆனா தமிழ்நாட்ட கம்பேர் பண்ணும்போது கொஞ்சம் குறைவுதான்.

சான்யா - ஆமா ஜிஷ்ணு. தேங்காய் விலைக்கும் இந்த டூருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா கேரளத்துல இவ்ளோ இடத்துல தேங்காய் விளையுது.. இந்த இடங்கள்லாம் செம்மயா இருக்கு. இங்கெல்லாம் ஒரு டூர் போனா என்னனு தோணிச்சி.. அதான் வந்தேன்.

ஜிஷ்ணு - சரி வா.. திருவனந்தபுரத்துல இருந்து ஆரம்பிக்கலாம்.


thiago japyassu

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

திருவனந்த புரம் தமிழ்நாட்டுல இருக்குற குறிப்பா சவுத் தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தேங்காய் எண்ணெய்ல பொறிச்ச சிப்ஸ்கள் அங்க பேமஸ். ஆமா.. தேங்காய்களுக்கென இருக்குற இடங்கள் நிறைய இருக்கு திருவனந்தபுரத்துல மத்த எடங்களுக்கு போகனும்னு நினைக்குறவங்களுக்கு என்ன சொல்ல போற சான்யா...

சான்யா - கேரளத்தின் அழகே பீச்தான். பீச் யும், தேங்காயையும் பிரிக்க முடியுமா சொல்லு

ஜிஷ்ணு - நிச்சயமா முடியாது.. ஆமா பிரண்ட்ஸ் கேரளத்துல திருவனந்தபுரம் பக்கத்துல நிறைய பீச்சஸ் இருக்கு.. நீங்க பீச்ல போயி, இந்த வெய்யிலுக்கு இதமா இளநீர் வாங்கி குடிச்சிட்டு அப்டியே கடலோட அழக ரசிக்கலாம்

சான்யா - ஹே.. ஆமா நீங்க இளநீருக்கு என்ன சொல்வீங்க..

ஜிஷ்ணு - நாங்க இளநீர கரிக்குனு சொல்வோம். ஆனா இப்ப இளநீருங்குற வார்த்தையே எல்லாரும் பயன்படுத்துறாங்க..

சான்யா - ஓ அப்படியா.. சூப்பர்ல..

சான்யா - ஹே பிரண்ட்ஸ்.. உங்கள மறந்துட்டேனே.. நா ஒரு கரிக்கு வாங்கி குடிச்சிட்டு வரேன். அதுக்குள்ள இந்த திருவனந்தபுரத்துல என்னெல்லாம் கடற்கரைகள் இருக்குனு பாத்துட்டு வந்துடுங்க..

ojodeastronauta

திருவனந்தபுரத்தில் இருக்கும் கடற்கரைகள்

திருவனந்தபுரத்தில் இருக்கும் கடற்கரைகள்

திருவனந்தபுரத்தில் இருக்கும் கடற்கரைகளை பற்றி பார்க்கும்போது, கோவளம் பீச் நிச்சயமாக நாம் அனைவரும் மகிழும் பீச்சாக இருக்கும்.

இங்கு கோவளம் பீச் தவிர்த்து நிறைய கடற்கரைகள் இருக்கின்றன.

தென் முனையில் இருக்கும் கலங்கரைவிளக்க கடற்கரை, லைட்ஹவுஸ் பீச்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க. கோவளத்திலேயே இருக்கும் அழகான பீச் இது. இந்த லைட் ஹவுஸ் பாக்குற அழகே தனி.

ஹவா பீச்

இதன் அருகே இருக்குற இன்னொரு பீச் ஹவா பீச்தான். இந்த ஹவா பீச்லதான் ஒரு காலத்துல டாப்லெஸ் பாத் அனுமதிக்கப்பட்டிருந்துச்சாம். வெளிநாட்டுக்காரங்க வர்ற இந்த பீச் இப்ப சில காரணங்களுக்காக இந்த பீச்ல டாப்லெஸ் பாத் அனுமதிக்கப்படறதில்ல.

சமுத்ரா பீச்

அசோக் கடற்கரைக்கு வடக்கு பக்கம் இருக்குற இடங்களுக்கு சமுத்ரா பீச் என்று பெயர். சமுத்திரம் என்றாலும், பீச் என்றாலும் ஒரே பொருள்தான். இந்த இடம் போட்டோ எடுக்கு படு சூப்பரா இருக்கும். உண்மையாவே புகைப்பட கலைஞர்கள் இங்க நிறைய போட்டோக்கள் எடுப்பாங்க. நிறைய வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து குளித்து மகிழ்ந்து செல்வாங்க..

சங்குமுகம் பீச்

நகரத்திலிருந்து 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

வர்க்கலா பீச்

சூரிய மறைவு காண சிறப்பான பீச் இந்த வர்க்கலா பீச் ஆகும். இது அமைதியான பீச்னு நினைச்சா அது தப்பு, இங்க நிறைய பேரு வந்து சிறப்பா கொண்டாடுவாங்க. ஆனா கொஞ்ச தூரம் நடந்து போனீங்கனா அங்க சில அமைதியான இடங்களும் இருக்கும்.

Brian Kairuz

கொல்லம்

கொல்லம்

ஹலோ பிரண்ட்ஸ். நாம இப்ப கொல்லம் நோக்கி போயிட்டு இருக்கோம். நாம ஏற்கனவே வர்க்கலா பீச் பத்தி பேசிட்டு இருந்தோம்ல ஜிஷ்ணு.. அது கொல்லம் பக்கத்துல தான இருக்கு..

ஜிஷ்ணு - ஆமா. சான்யா.. அது கொல்லம் பக்கம்தான். ஒன் அவர் டிராவல்.. முப்பது கிமீ பக்கம் வரும்.

கொல்லம் போகுறதுக்கு முன்னாடி, வழியிலேயே எடவா, கப்பில் பீச், பரவூர், மய்யநாடு பீச், எரவிகுளம் பீச்னு நிறைய இடங்கள் இருக்குது.

சான்யா - ஓ அப்படியா.. அப்ப நாம எல்லா பீச்சுக்கும் போய்ட்டு வரலாம்ல..

ஜிஷ்ணு - போகலாமே.. ஆனா அதுக்கு முன்னாடி கொல்லம்ல விளையுற தேங்காய் பத்தி சொல்லிடறேன்.

சான்யா - என்ன ஜிஷ்ணு.. திருவனந்தபுரம் தேங்கா வேற, கொல்லம் தேங்கா வேறனா சொல்லப்போற..

ஜிஷ்ணு - அப்படி இல்ல சான்யா.. ஆனா ஒரு விசயம். கொல்லம்ல கருநாகப்பள்ளி வட்டத்துல நிறைய தேங்காய்கள் உற்பத்தி ஆகுது. அதுக்கப்பறம் கொல்லம் தாலுகா. கொட்டாரக்கரா, குன்னத்தூர்னு கொல்லம் தேங்காய் உற்பத்தி இருக்கு.

கொல்லம் பகுதியில் தென்னை மரங்கள் இருக்குற பகுதியில நடந்து போயிருக்கியா,..

சான்யா - அட நாங்க பொள்ளாச்சியில நடக்காத நடயா..

ஜிஷ்ணு - நா பொள்ளாச்சி வந்துருக்கேன் சான்யா.. எங்க ஊருனு சொல்லல... எல்லாம் இந்தியாதானே.. ஆனா கேரளா அப்படி ஒரு சிறப்பு

சான்யா - உன் ஊர விட்டுக்குடுக்க மாட்டியே.

Navaneeth Krishnan S

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

சான்யா - என்ன ஜிஷ்ணு. தேங்காய் டிரிப் போகப் போக கொஞ்சம் கொஞ்சமா போர் அடிக்குதே.

ஜிஷ்ணு - எனக்கு தெரியும் அப்படித்தான் இருக்கும். நீ இத ஸ்டோரியா எழுதும்போது படிக்குறவங்களுக்கு எப்படி போர் அடிக்கும்னு யோசிச்சிப்பாரு..

சான்யா - ஆமா... பாவம்ல..

ஜிஷ்ணு - இதுக்குத்தான் சொல்றேன்.. பீச்ல ஒரு சூப்பர் குளியல போடலாம்னு..

சான்யா - டேய்.. நா வேல விசயமா வந்துருக்கேன்டா.. எசக்குபெசக்கா ஐடியா தந்து என் சீட்ட கிழிச்சி வூட்டுக்கு அனுப்பிட போறாங்க..

ஜிஷ்ணு - அட நீ அவ்ளோ பயந்தாங்கொள்ளியா.. இப்ப நாம கேரளாவுல இருக்குற பீச்கள்ல தென்னை மரங்களோட சேர்த்து போட்டோ எடுக்கப்போறோம். அப்ப நாம பீச்ல குளிச்சிட்டே, கொஞ்ச நேரம் இந்த சுற்றுலாவ கொண்டாடலாம்ல.

சான்யா - நா போயி குளிக்குறேன்.. நீ இவங்களுக்கு சுற்றுலாவ மேற்கொண்டு சொல்லு..

ஜிஷ்ணு - நா பாத்துக்குறேன் பேப். நீ போ.. என்ஜாய் த டே..

ஜிஷ்ணு - ஆலப்புழா, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர்னு இன்னும் சூப்பரான இடங்களெல்லாம் இந்த கேரள மாநிலத்துல இருக்கு. கேரளா சும்மாவா கடவுளின் தேசம்னு சொன்னாங்க.. எல்லா அழகையும் அப்படியே இந்த ஊருக்கு குடுத்து கடவுள் ஓரவஞ்சன பண்ணிட்டாரு. அதன் அழக வர்ணிக்க வார்த்தைகளே இல்லங்க.. இவ வேற உங்கள என் கிட்ட மாட்டிவிட்டு போயிட்டா.. எங்க போனா.. இதோ பாருங்க கடல்ல குளிச்சி ஆடுறத... நம்ம ஒரு இளநீ வாங்கிட்டு போய சர்ப்ரைஸ் குடுப்போம் வாங்க..

ஆம்.. அப்றம் கேரளத்துல வேற எந்த இடத்துக்குலாம் போகணும், அது கோயில்னாலும், குளம்னாலும், காடுனாலும், மலைனாலும், அருவினாலும் எல்லா டிடெய்ல்ஸும் இந்த சைட்... அதாங்க நம்ம தமிழ் நேட்டிவ் பிளானட் சைட்ல கிடைக்கும். இதுபோல நிறைய கட்டுரை கதைகள நீங்க படிக்கணும்னா உடனே மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணி சப்ஸ்கிரை பண்ணிவிடுங்க..

Peter fogden

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X